நுகர்வோர் ஆலோசனை கூட்டம்
கருத்துகள்
ஊட்டி: வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் நுகர்வோர் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மாவட்டத்தில் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையம் சார்பில், மலைமாவட்டத்தில் அனுமதிக்கப்படாத கனரக வாகனங்கள்அடிக்கடி இயக்கப்படுகின்றன. இவற்றை கண்காணிக்க வேண்டும். பல இரு சக்கர வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமலும், இருசக்கர வாகன லைசென்ஸ் இல்லாமலும், ஆட்டோ ஒட்டுநர்கள் லைசென்ஸ் பெறாமலும் ஒட்டுகின்றனர்.
இதுகுறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெறாத கேரளா வாகனங்கள் சேரம்பாடி தாளூர் பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது.
இவைகள் பெரும்பாலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதால் கண்காணிப்பு செய்ய வேண்டும். ஜீப், ஆட்டோ கட்டணங்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையம் சார்பில், மலைமாவட்டத்தில் அனுமதிக்கப்படாத கனரக வாகனங்கள்அடிக்கடி இயக்கப்படுகின்றன. இவற்றை கண்காணிக்க வேண்டும். பல இரு சக்கர வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமலும், இருசக்கர வாகன லைசென்ஸ் இல்லாமலும், ஆட்டோ ஒட்டுநர்கள் லைசென்ஸ் பெறாமலும் ஒட்டுகின்றனர்.
இதுகுறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெறாத கேரளா வாகனங்கள் சேரம்பாடி தாளூர் பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக