உலக நுகர்வோர் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு
கருத்துகள்
பந்தலூர்: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் ஆகியன இணைந்து உலகநுகர்வோர் விழிப்புணர்வு தினத்தையொட்டி சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது.
நெல்லியாளம் நகராட்சி கணினி பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:
வியாழன், 22 மார்ச், 2012
இயற்கை வளங்களை அழித்ததால் அனைத்தையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செலவு காரணமாக மாற்று வழிக்கு உற்பத்திக்கு முயலும் போது தரமற்ற பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்துக்களை உட்கொள்ள கூடாது என்றார்.
அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் காதர்,
பந்தலூர் நுகர் வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் விஜயசிங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நிர்வாகிகள் முருகன், இந்திராணி ஆகியோர் நுகர்வோர் உரிமைகள் குறித்து விளக்கி கூறினர். முன்னதாக கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகி தனிஷ்லாஸ் வரவேற்றார். முடிவில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகி சிவக்குமார் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக