பந்தலூர் : பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தமிழ்நாடு அறக்கட்டளை ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், உப்பட்டி பள்ளி வாசல் கமிட்டி ஆகியன , சார்பில், உப்பட்டி எம் எம் எஸ் மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சைமுகாம் நடந்தது.
முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்
பள்ளி முதல்வர் கவிதா, நெல்லி யாளம் நகர மன்ற உறுப்பினர் கள் மூர்த்தி, விஜயன், பள்ளி வாசல் கமிட்டி பொருளாளர் ஐமுட்டி, HADP பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு மருத்துவமனை மருத்துவருமான அமராவதி ராஜன் பேசும் போது ஏழை மக்கள் பயன் பெரும் விதமாக இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுகின்றது நாற்பது வயதிர்ற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக பாதிக்கும் கண் புரை நோய்க்கு கண் புரை அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும் எனவே இது போன்ற முகாம்களில் பங்கேற்று பயன் பெற வேண்டும் என்றார்
பின்னர் மருத்துவர் அமராவதி ராஜன் தலைமையிலான குழுவினர், பார்வை குறைபாடு உடையவர்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர்
கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் வரவேற்றார் முடிவில் மைய நிர்வாகி முருகன் நன்றி கூறினார்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக