பந்தலூர் :குழந்தைகள் பிச்சையெடுப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தலைவர் சிவசுப்ரமணியம், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
குழந்தை தொழிலாளர்கள் இருக்கக் கூடாது எனும் நோக்கில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், குழந்தைகள் கட்டாய கல்வி சட்டம் இயற்றப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கூடலூர், பந்தலூர் உட்பட பகுதிகளில் பஸ் ஸ்டாண்ட்கள், மார்க்கெட், கோவில் வளாகங்களில் 6 -14 வயது வரையிலான குழந்தைகள் பிச்சையெடுத்து வருகின்றனர்.
கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், இச்செயல் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத் தன்மைக்கும் காரணமாக உள்ளது.
எனவே, கல்வி பயிலும் வயதில் பிச்சையெடுக்கும் சிறுவர், சிறுமியரை மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து, அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வழி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக