புவி தினம் 2012
Mr. Gaylord Nelson |
புவி
தினத்தை ஏற்படுத்தியவர் திரு. கேலார்டு நெல்சன் ஆவார். தொடர்ந்து மூன்று முறை அமெரிக்க செனட் அவை உறுப்பினராகவும், விஸ்கான்சின் மாநிலத்தின் 35வது ஆளுநராகவும் இருந்தவர். அமெரிக்காவில் பல சுற்றுச் சூழல் பராமரிப்புக் கொள்கைகள்
உருவெடுக்க காரணமாக இருந்தவர். அமெரிக்காவில் முதலாவது உலகப் புவி தினத்தை 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் இவர் கொண்டாடத் தொடங்கிய பிறகு வெகு
விமரிசையாக உலகெங்கும் தற்சமயம் மக்கள் அனுசரிக்கின்றனர். மரம் நடுகின்றனர், சுற்றுச்சூழல்,
குப்பை கூளங்கள் மறுசூழற்சி, பனிஉருகுதல் என பிரச்சாரம் செய்கின்றனர். தமது 89 வது வயதில் திரு.
கேலார்டு நெல்சன் காலமானார்.
நாட்டின் செல்வமே
காற்று, தண்ணீர், மண், காடுகள், தாதுஉப்புக்கள், ஆறுகள், ஏரிகள், மாகடல்கள், இயற்கை அழகு, வனஉயிர்களின் உறைவிடம், உயிரனவளம் ஆகியவைதான். இவைகள்தான் முழுமையான பொருளாதாரம். இவற்றிலிருந்துதான்
எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் வேலைவாய்ப்பும் கிடைக்கின்றன. இவைதான் உலகத்தின் நிலையான
சொத்து. திரு.கேலார்டு நெல்சன்.
நன்றி http://maravalam.blogspot.in
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக