வெட்டிவேர் உதவியுடன் பிரேசில் நாட்டின் சா போலோ மாநிலத்திலுள்ள பெர்டியோகா
என்ற கடற்கரை குடியிருப்பு பகுதியை கடலரிப்பிலிருந்து காப்பாறும் பணியை
பொறியாளார். லூயிஸ் லுக்கினா அவர்கள் விளக்கிய போது மனம் ஏனோ இரயுமன்துறை
கிராமத்தை நினைத்து வருந்தியது.
|
கடலரிப்பில் 'பெர்டியோகா' கடற்கரை |
|
தென்னை நார் விரிப்பில் வெட்டிவேர் நடப்பட்டுள்ளது. வருடம் 2009 |
|
சற்று வளர்ந்த நிலையில் வெட்டிவேர் |
|
நன்கு வளர்ந்த நிலையில் வெட்டிவேர் |
|
சுவர் போன்ற அமைப்பில் வெட்டிவேர். பொறியாளார். லூயிஸ் லுக்கினா ICV-5 முடித்து சென்ற பின் 2011 நவம்பர் மாதம் 4 தேதி வலையேற்றியது. |
தென்னைநாரில் செய்யப்படும் ஜியோ டெக்ஸ் (Geo Tex) (பொள்ளாச்சி இதற்கு
பெயர் பெற்றது ) என்ற விரிப்பைப்
பயன்படுத்தி வெட்டிவேரை நட்டு அவர்கள் கடலரிப்பிலிருந்து குடியிருப்புக்களை
காப்பாற்றி இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. முக்கிய பொருட்களான
வெட்டிவேரும், தென்னைநாரும் நம்மிடம் இருந்தும் உபயோகிக்காமல் இருப்பது அறியாமையா
? அல்லது ???? முடிவு நம் கையில்தான் உள்ளது. வெட்டிவேர் பாமரனின் கையிலிருந்து
பெரிய கம்பெனிகளின் கைக்கு மாறியிருப்பது நிச்சயம் மிக பெரிய மாறுதல்களை உலககெங்கும் ஏற்படுத்தும். ஆனால் நாம்
அதிலிருந்து பாடம் கற்கப் போகிறோமா? காலம் தான் பதில் கூறவேண்டும்.
5-வது உலக வெட்டிவேர்
மாநாட்டின் (ICV-5) முடிவுகளை தொகுத்து சிறப்பு
விருந்தினர்கள் வழங்கினார்கள். அதில் முனைவர்.
இலட்சுமண பெருமாள்சாமி அவர்கள் இருந்தது மகிழ்ச்சியைளித்தது. உலக வெட்டிவேர் அமைப்பின்
முன்னாள் தலைவர் முனைவர். டேல் ராக்மிலர் பேசும் போது வெட்டிவேர் மூலம்
நிலத்தடிநீர் உயர்த்தவேண்டுமென கேட்டுக் கொண்டு என் அருகில் வந்து அமர்ந்தார்.
மெதுவாக எனது 2 நிமிட படம் பற்றி கூறினேன். திரையிட்ட பின் பாராட்டியதோடு மாநாடு
முடிந்தவுடன் காங்கோ நாட்டிற்கு செல்வதாகவும் அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு
மொழிமாற்றம் செய்து காண்பிப்பதாகவும் கூறினார். படத்தை உருவாக்கும் போது பள்ளிக்
குழந்தைகளையும், நமது மலைப்பகுதிகளையும், ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளையும்
எண்ணி உருவாக்கினேன் அது நிறைவேறுவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
மாநாட்டிற்கு ஆங்கிலத்தில் பதிவு செய்தேன். நமக்காக தமிழ் வாசகங்களுடன் உங்கள்
பார்வைக்கு.clik hear http://maravalam.blogspot.in/2011/11/blog-post_24.html
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக