நிகழ்ச்சியில் ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.கூடலூர் நுகர் வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், சேரன் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் தங்கராஜா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக வேளாண்மை பொறியியல் துறை உதவி மண்வள பாதுகாப்பு அலுவலர் சுந்தரலிங்கம் கலந்து கொண்டு பேசியதாவது: பெண்களிடம் நிறைய திறமைகள் ஒளிந்து கிடக்கிறது. அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வர இது போன்ற நிகழ்ச்சிகள் உதவுகிறது.
தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமையாகாமல் குடும்பத்தார், குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதால் பல குடும்ப சண்டைகள் மற்றும் பிரச்னைகளை தவிர்க்க முடியும். பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் எனக் கூறினார்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் இந்திராணி நன்றி கூறினார்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக