ஊட்டி : ""ஹால்மார்க்' முத்திரை உள்ள தங்கத்தை வாங்க வேண்டும்' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசின் தர கட்டுப்பாட்டு அமைவனம், தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில், ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி நிலையத்தில், தங்க நகையில் "ஹால்மார்க்' தர நிர்ணய விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போலி தங்கத்தின் விற்பனையும் அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பதால், தங்கத்தில் கலப்பு அதிகமாகிறது; இதை அடையாளம் காணவும், கொடுக்கும் பணத்துக்கு முழு மதிப்பு பெறவும் ஹால்மார்க் முத்திரை உத்திரவாதம் அளிக்கிறது,'' என்றார்.
குடிமக்கள் நுகர்வோர் மன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம் பேசுகையில், ""தங்கத்தின் தரத்தை அறிய, இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைவனம், "ஹால்மார்க்' முத்திரையை வழங்குகிறது. தற்போது விருப்ப அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நகை வாங்கும்போது, 916 தர குறியீடு "ஹால்மார்க்' முத்திரை, கடையின் முத்திரையை கவனித்து வாங்க வேண்டும்,'' என்றார். தரமான தங்கம் வாங்குவது குறித்து, ஆசிரியர் பயிற்சி மாணவியர், குறு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆக்ஸ்போர்டு மைய முதல்வர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். குளோபல் சமூக நல மைய டாக்டர் செந்தில்குமார், தனி தாசில்தார் ஹிரியன் துவக்கி வைத்தனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக