உதகை, ஜூலை 3:
பெண் சிசுக்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து உதகையில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மக்கள் மையம் மற்றும் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட பெண் மகவின் சிறப்பு என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பரிசளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.
விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன், கவிஞர் சோலூர் கணேசன் நெஸ்ட் அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆங்கிலத்தில் நடைபெற்ற இந்த கட்டுரைப் போட்டியில் ஜி.விஜிதா மற்றும் தூனேரி அரசு மேனிலைப்பள்ளி மாணவன் கார்த்திக் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழில் கட்டுரை எழுதிய வித்யாவுக்கு முதல் பரிசும், ஆதித்தியாவிற்கு இரண்டாவது பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சதானந்தன், மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஜேபி, மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் அய்சானுல்லா, கவிஞர் கமலம் ஆகியோருடன் மலைச்சாரல் மன்றத்தை சேர்ந்த பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பெண் சிசு பாதுகாப்பு குறித்து விளக்கினர். அம்சவல்லி பெண்ணுலகம் சந்திக்கும் அவலங்கள் குறித்து விவரித்தார். கவிஞர் மயில்வாகனம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக