காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு 5 கி.மீ.க்கு கட்டணம் இல்லை
ஜூலை 4
இந்துஸ்தான் பெட்ரோலியம் & காஸ் தமிழ்நாடு, பாண்டிச்சேரி முதுநிலை மண்டல மேலாளர் ராஜசேகரன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:சர்வதேச மார்க்கெட்டில் உள்ள விலை அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை வர்த்தக உபயோகத்திற்கு பயன்படுத்துவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அவ்வப்போது சோதனைகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து அது� பான்று செய்கின்ற முகவர்கள் விபரம் தெரியவந்தால் அவர்களது ஏஜென்சி உரிமம் ரத்து செய்யப்படும்.
பொதுவாக காஸ் ஏஜென்சி அலுவலகத்தில் இருந்து முதல் 5 கி.மீ தூரத்திற்கு காஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இதற்காக கமிஷன் தொகை அவர்களுக்கு தனியாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரூ.21.94ல் இருந்து ரூ.26 ஆக வழங்கப்படுகிறது. 6 வது கி.மீ&ல் இருந்து 15 கி.மீ தூரத்திற்கு கட்டணம் வசூலிக்கலாம் என்ற விதி உள்ளது. கட்டண விகிதம் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிக கட்டணம் செலுத்த வற்புறுத்தினால் அவர்கள் மீது எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் செய்யலாம். இந்த புகார்களை பெறுவதற்கென்றே தனி பிரிவும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக