கூடலூர் நுகர்வோர்
மனித வள பாதுகாப்பு மைய தலைவர்
சு. சிவசுப்பிரமணியம் உணவு பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதவது
நிலகிரி மாவட்டத்தில் தற்போது கூடுதல் மண்ணெண்ணை தேவைபடுகிறது ஆனால் தற்போது வெறும் 5 லிட்டர் மண்ணெண்ணை மட்டுமே ரேசன் முலம் விநியோகிக்கப்படுகின்றது இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் இங்கு ஜூன் முதலே மழை காலம் ஆரம்பித்து விடுகின்றது மழை காலத்தில் இங்கு விறகு மற்றும் இதர எரிபொருட்கள் கிடைப்பதில் மிகவும் சிரம்மம் ஏற்படுகின்றது. பெரும்பான்மையான குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இன்றி உள்ளத்தால் மக்கள் மண்ணெண்ணெய் விளக்கை மட்டுமே பயன் படுத்துகின்றனர்
இங்கு மண்ணெண்ணை மட்டுமே பெருமளவு எரிபொருளாக பயன்டுகின்றது தற்போது இரண்டாம் கட்ட மழை துவங்கவுள்ளது. வரும் 2ம் தேதி தீபாவளி பண்டிகை வருகின்றது இம்மாதம் சில பண்டிகைகளும் வருகின்றது. இந்நிலையில் மண்ணெண்ணை அளவு குறைக்க பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்க கூடியதாக உள்ளது
ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கூடுதல் மண்ணெண்னை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்பு சார்பில் வலியுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாதந்தோறும் மண்ணெண்னை அளவு குறைக்கப்பட்டு வருவது மக்களை மிகவும் சிரம்மத்திற்குள்ளக்குகின்றது
மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மலை மாவட்டம் என்கின்ற அடிப்படையில் ஏற்கனவே இப்பகுதியில்
10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க
பட்டது போல தற்போதும் கூடுதல்
மண்ணெண்ணெய் ஒதுக்கிடு செய்து
வழங்க பட வேண்டும் என கூறியுள்ளார்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக