அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 12 அக்டோபர், 2013

மின்முறையீடுகளை குறைதீர் மன்றத்திற்கு நுகர்வோர் அனுப்பலாம் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்

மின்முறையீடுகளை   மின் குறைதீர் மன்றத்திற்கு நுகர்வோர் அனுப்பலாம்
ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல் 
மின்நுகர்வோர் தங்கள் மின்சாரம் சார்ந்த முறையீடுகளை அந்தந்த வட்டார மின்சார அலுவலகத்தில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்குஅனுப்பலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, மின்நுகர்வோர்களிடமிருந்து பல்வேறு குறைபாடு குறித்து அதிக எண்ணிக்கையில் புகார் வருகிறது. இந்த புகார் தவறான மின் கட்டண கணக்கெடுப்பு, புதிய மின்இணைப்பு வழங்குவதில் காலதாமதம், குறைபாடுடைய மின்னளவிகள், குறைபாடான மின் வழங்கல், மின் நுகர்வோர்களுக்கிடையே பிரச்னை
போன்ற பல்வேறு குறைபாடு பற்றிய புகார் ஆகும். ஆனால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இத்தகைய பொருள்கள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே மின் நுகர்வோர் அத்தகைய முறையீடுகளை ஆணையத்திற்கு அனுப்ப வேண்டாம். அத்தகைய மனுக்களை உங்கள் வட்டார மின்சார அலுவலகத்தில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு அனுப்பலாம்.
ஒவ்வொரு மின் வட்டத்திலும் (பெரும்பாலும் ஒரு மாவட்டத்தை உள்ளடக்கியது) சம்பந்தப்பட்ட மின் வட்டத்தின் மேற்பார்வை பொறியாளரைதலைவராக கொண்ட மின் நுகர்வோர் குறைதீர்மன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு அலுவல் சாராத உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லிமிடெட்டினால் செய்யப்படும் சேவை தொடர்பான குறை எவற்றிற்காகவும் மின் நுகர்வோர் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் மன்றத்தை அணுகலாம். அத்தகைய மனுவைப் பெற்றதற்கான ஒப்புகை அந்த மன்றத்தினால் ஏழு பணி நாட்களுக்குள் வழங்கப்படுதல் வேண்டும்.
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் இரண்டு மாதங்களுக்குள் மனுக்கள், முறையீடு மீதான ஆணைகளைப் பிறப்பித்தல் வேண்டும். முறையீட்டாளர் மன்றத்தின் தீர்ப்பில் திருப்தியடையவில்லை என்றால் அல்லது முறையீட்டாளர், முறையீடு தாக்கல் செய்த நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் பதிலுரை எதனையும் பெறவில்லை என்றால் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்குறை தீர்ப்பாளருக்கு மேல்முறையீடு செய்யலாம்.பொதுத் தன்மை வாய்ந்த குறை இருந்தாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மின்நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வந்தாலோ, அத்தகைய மனு மின்குறைதீர்ப்பாளருக்கு நேரடியாக மின்நுகர்வோர் எவராலுமோ அல்லது மாநில அளவிலான மின் நுகர்வோர் சங்கத்தினாலோ கொண்டு வரப்படலாம்.
மின்நுகர்வோர் குறைதீர் மன்றம் குறித்த விவரங்கள், வெள்ளை மின்னளவி அட்டைகளிலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமி�ட்டின் இணையதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் சேவைகளை முழுவதுமாக பயன்படுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக