பந்தலூர் : நீலகிரி மாவட்டத்தில் செங்காந்தல் மலர்கள் அழிவின் பிடியில்
உள்ளதால், பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின்
அனைத்து பகுதியிலும், பூங்காவில் பாதுகாக்கப்படும் மலர்கள் மட்டுமின்றி,
வனப்பகுதியில் பல அரிய வகை மலர்களும் உள்ளன. அதில், தற்போது பாதுகாக்க
வேண்டிய மலராக செங்காந்தல் மலர்கள் உள்ளன. தமிழில் செங்காந்தல் என்றும்,
மலையாளத்தில் அக்னிசிக்கான் என்றும், சமஸ்கிருதத்தில் சக்கரபஷ்பி என்றும்
பல்வேறு பெயர்களில் இம்மலர் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர்
"குளோரியோசா சூப்பர்பா' என்பதாகும். மாநில அரசு சின்னத்தின் வடிவத்தை
ஒத்து காணப்படும் இந்த பூக்கள், மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்தில்
காணப்படுகிறது. நம் நாட்டில் தேசிய மலராக தாமரை உள்ளது போல், தமிழகத்தின்
அரசு மலராக செங்காந்தல் மலர் உள்ளது.இதன் கிழங்கு மற்றும் வேர் சித்த
மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர் பகுதி பல்வேறு நோய்களை
குணப்படுத்தும் தன்மை கொண்டது. கபிலர் பாடிய குறிஞ்சி பாடலில் இம்மலர்
இடம்பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர், வயநாடு
பகுதிகளில் சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும் அதிகளவில் காணப்பட்ட இம்மலர்
தற்போது அழிவின் பிடியில் உள்ளது. எனவே, இந்த மலரை பாதுகாத்து அதிகரிக்க
செய்வதுடன், மலர் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த
வேண்டியது அவசியமாகும்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக