ஊட்டி: "ரிசர்வ்
வங்கியின் இணைய தளத்தில் முதலீடு வாங்குவதற்கு அதிகாரமுள்ள நிதி
நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன' என, தெரிவிக்கப்பட்டது.
வணிக பொருளாதார குற்றப்பிரிவு சார்பில், ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், நிதி நிறுவன மோசடி தவிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. என். எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.ஐ., சுஜாதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன் தலைமை வகித்தார்.
பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குணசேகரன் பேசியதாவது:
தொழில் துவங்கும் போது, பல வகைகளில் சிந்திக்கும் மக்கள், பணத்தை முதலீடு செய்யும் போது, போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுகின்றனர். ஈமு கோழி நிறுவன மோசடியில் பணத்தை இழந்த பலரில், 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் புகார் வழங்கி வருகின்றனர். சினிமா நடிகர்களை வைத்து விளம்பரம் செய்து, அதன் மூலம் மக்களை கவரும் நிதி நிறுவனங்களிடம், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
அனைத்து நிதி நிறுவனங்களும், மக்களிடம் இருந்து பணத்தை முதலீடாக பெற முடியாது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்திருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தில் டெபாசிட் வாங்குவதற்கு அதிகாரமுள்ள நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. நிதி நிறுவனங்கள், அதிகபட்சம் 5 ஆண்டு முதிர்வு காலத்திற்கு மட்டுமே டெபாசிட் பெற முடியும்; அதிகபட்சம் 12.5 சதவீத வட்டி மட்டுமே தர முடியும். டெபாசிட் பெறுவதற்காக பரிசுப் பொருள், ஊக்கத் தொகை போன்றவற்றை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் இருந்து முதலீடுகளை வாங்கும் நிதி நிறுவனங்கள், தாங்கள் பெறும் முதலீடுகளை எவ்வித திட்டத்தில் முதலீடு செய்து, பணத்தை பெருக்கி, முதலீட்டாளர்களுக்கு திருப்பி வழங்குகின்றன; உண்மையில் அதற்கான சாத்திய கூறு உள்ளதா, என்பதை ஆராய்ந்து, முதலீடு செய்ய வேண்டும்.
பரிசுச்சீட்டு, பணச்சுழற்சி திட்ட தடை சட்டம் 1978ன் படி, பண சுழற்சி திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், இத்தகைய திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யக்கூடாது. அதிகாரபூர்வமற்ற நிதி நிறுவனங்கள், பண சுழற்சி திட்டங்களை நடத்துவோர் குறித்த தகவலை, மாவட்ட எஸ்.பி., மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை, கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, குணசேகரன் பேசினார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பேராசிரியர்கள் ஆத்மஜோதி, கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் பேசினர்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக