நிதி நிறுவனங்களைஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும்
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
போலி
நிதி நிறுவனங்கள் நம்பி பொதுமக்கள் ஏமாற கூடாது என்பதை வலியுறுத்தி
காவல்துறை சார்பில் நேற்று ஊட்டி அரசு கலை கல்லூரியில் விழிப்புணர்வு
நிகழ்ச்சி நடந்தது.
ஈமு கோழி வளர்ப்பு,
நாட்டு கோழி வளர்ப்பு திட்டம், கொப்பரை தேங்காய் திட்டம் என்ற பெயரிலும்,
வேறு வழிகளிலும் அதிக லாபம் கிடைக்கும் என்று வெளியிடப்படும் கவர்ச்சிகர
விளம்பரங்களை நம்பி, பொதுமக்கள் தங்கள் பணத்தை அதில் முதலீடு செய்து
ஏமாறுகின்றனர்.இதுபோன்ற நிதி நிறுவன மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்து
வருகிறது. இதுபோன்ற போலி நிதி நிறுவனங்களையும்,முதலீட்டு நிறுவனங்களையும்
நம்பி பொதுமக்கள் ஏமாற கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பொருளாதார
குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி அரசு கலை
கல்லூரியில் நேற்று நடந்தது.
கல்லூரி
முதல்வர் மனோகரன் தலைமைதாங்கினார்.குற்றபிரிவு டி.எஸ்.பி.ஞானசேகரன்
பேசுகையில், பொதுமக்கள் போலியான நிதி நிறுவனங்கள்,முதலீட்டு நிறுவனங்களை
நம்பி ஏமாந்து விடுகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு
செய்யும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இதன்படி வங்கி சாரா நிதி
நிறுவனங்கள் கட்டாயமாக இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டிருக்க
வேண்டும்.அனைத்து நிறுவனங்களும் பொதுமக்களிடம் இருந்துபணத்தை முதலீடாக பெற
முடியாது.ரிவர்வ் வங்கியின் இணையதளத்தில் டெபாசிட் வாங்குவதற்கு
அதிகாரமுள்ள நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
டெபாசிட் பெறும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், அதிகபட்சமாக ஐந்தாண்டு முதிர்வு காலத்திற்கு மட்டுமே டெபாசிட் பெற முடி யும்.
இது
போன்ற நிதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 12.5 சதவீதம் மட்டுமே வட்டியாக தர
முடியும். மேலும், இவர்கள் மக்களிடம் இருந்து டெபாசிட் பெறுவதற்காக பரிசு
பொருட்கள் ஊக்க தொகை முதலியவற்றை தருவது தடை செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள்
முதலீடு செய்யும் முன்பு, தாங்கள் முதலீடு செய்யும் தொகையை திருப்பி
கொடுக்கும் அளவிற்கு அந்த நிறுவனத்திற்கு அசையும் மற்றும் அசையா சொத்து
போதுமானஅளவு உள்ளதா என ஆராய்ந்து பார்த்து முதலீடு செய்ய
வேண்டும்.அதிகாரபூர்வமற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் பணசூழற்சி திட்டங்களை
நடத்துவோர் பற்றி தகவல் இருந்தால் அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம்
தெரிவிக்கலாம் என்றார். நிகழ்ச்சியில் எஸ்.ஐ.சுஜாதா, கிருஷ்ணராஜ்,
பேராசிரியர் ஆத்மஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக