"மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில், மின் வாரிய அதிகாரிகளால்
தீர்க்கப்படாத குறைகளை களைய முறையிடலாம்'
தமிழ்நாடு
மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மின் பகிர்மான
வட்டத்தில், மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களை கொண்ட
ஒரு மின் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம், மேற்பார்வை பொறியாளர்
தலைமையில் இயங்கி வருகிறது.
இம்மன்றத்தில், மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த அனைத்து மின் நுகர்வோர்களும், மின்வாரிய அதிகாரிகளால் தீர்க்கப்படாத குறைகளை களைய முறையிடலாம். மேற்காணும் மன்றத்தில், மின் திருட்டு, மின்வாரிய பொருட்களை களவாடுதல், மின்சார மீட்டர்களை சேதப்படுத்துதல், மின் வாரிய பணிகளை உள்நோக்கோடு தடுத்தல், தெருவிளக்குகளை சேதப்படுத்துதல், மின்சார சட்ட விதிமீறல்கள் சம்பந்தப்பட்ட புகார்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். நுகர்வோரால் பதிவு செய்யப்பட வேண்டிய புகார் படிவ நகல்கள், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களிலும், செயற்பொறியாளர், மத்திய அலுவகலத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
விருப்பமுள்ள மின் நுகர்வோர்கள், புகார் படிவத்தை மின் பகிர்மான
வட்ட மத்திய அலுவலகத்தில் உள்ள இம்மன்றத்தில், அலுவலக வேலை நாட்களில்
பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு, பதிவு செய்த,
60 நாட்களுக்குள் நடைபெற இருக்கும் மன்றக் கூட்டத்தில் விசாரிக்கப்பட்டு
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக