பந்தலூர் பாரிஸ் ஹாலில் தரமான தேயிலை மற்றும் தேயிலையின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது
குன்னூர் தென் இந்திய தேயிலை வாரியம், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சசூழல் பாதுகாப்பு மையம், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்
பள்ளி தலைமை ஆசிரியர் செலின் தாளாளர் ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியை பந்தலூர் வட்டாச்சியர் இன்னாசிமுத்து துவக்கி வைத்து பேசிய பொது இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 200ஆண்டுகளுக்கு மேல் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இப்பகுதி மக்கள் தேயிலையை நம்பியே வாழ்கின்றனர் நல்ல தேயிலை பல்வேறு பயன்களை தருகின்றது. விளம்பர பானங்களை தவிர்த்து தேயிலையை அதிகம் பயன் படுத்த வேண்டும் என்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்னிந்திய தேயிலை வாரிய துணை இயக்குனர் ஹரி பிரகாஷ் பேசும் பொது தேயிலை தொழில் பல்வேறு மக்களின் வாழ்வாதாரம் ஆகும். அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீட்டு எண் பெற்றவையாகும். தேயிலையில் கறுப்புத் தேயிலை. பச்சைத் தேயிலை வெண்மைத் தேயிலை என பல வகைகள் உள்ளன. தேநீரின் நிறத்தைப் பொருத்து ,இவை இவ்வாறு பிரிக்கப்படுகின்றன.தேயிலை, உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யக்கூடியதாகும். தேயிலை தயாரிப்பு குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தேயிலை வாரியம் முடிவு செய்துள்ளது என்றார்.
தேயிலை கலப்படம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் ரவி பேசும்போது
தேயிலையில் கலப்படம் செய்யும் போது அதன் தன்மை மாறி விடுகின்றது இதனால் தேயிலையின் நல்ல பயன்கள் மாறி பாதிப்பு ஏற்படுத்துகின்றது. தேயிலை தூள் வாங்கும்போது தயாரிப்பு நிறுவனம் மற்றும் தகவல்கள் பார்த்து வாங்கினால் தரமான தேயிலை கிடைக்கும் என்றார்.
பச்சைத் தேயிலையை உட்கொண்டால் சில வகைப் புற்று நோய், அல்சிமர் நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக உலகம் முழுவது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தேயிலையின் பயன்கள் குறித்து பேசிய உபாசி திட்ட அலுவலர் சிவகுமார் போசும்போது தேயிலை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது சீனாவிலும் ஜப்பானிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நீண்ட நாள் வாழத் தேயிலைத் துணை புரிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேநீர் பருகுவதால் உடல் சோர்வும் , களைப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அத்துடன் சுறு சுறுப்பாகவும், துடி துடிப்புடன் திகழவும் தேநீர் உதவுகிறது. தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள். குறைவான கொழுப்புஅளவு ஆகியவற்றால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. தேநீர் தோல் புற்று நோய்வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் உள்ள சத்துக்கள் பல் ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தேயிலையில் உள்ள புளோரைடு , பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது. கறுப்புத் தேநீர் பருகுவது இதயம் மற்றும் ஈரல் நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உடல் எடை குறைக்கவும் தேயிலை உதவுகிறது.என்றார்
தொடர்ந்து தேயிலையின் தரம் குறித்து சுனில் குமார் பேசினார்
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பந்தலூர் அரசு பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணப்பாளர் தண்டபாணி காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கொண்டனர்
முன்னதாக பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்டின் வரவேற்றார்
முடிவில் நுகர்வோர் மைய செயலாளர் கணேஷன் நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக