பந்தலூர் அருகே உப்பட்டி எம் எஸ் எஸ் பள்ளியில் லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
இந்திய அரசு நேரு யுவ கேந்திரா நீலகிரி மாவட்டம், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம்- பந்தலூர் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து உப்பட்டி எம் எம் எஸ் பள்ளியில் லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது
நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் கணேஷன் வியாபார சங்க செயலாளர் ஐமுட்டி பள்ளி ஆசிரியர் சூசன் ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கவிதா தலைமை தாங்கி பேசும்போது லஞ்சம் இல்லாத இடம் இல்லை எனும் நிலை உருவாகி விட்டது. எல்லோரும் லஞ்சம் வாங்குவதில்லை. பலர் லஞ்சம் வாங்க மாட்டேம் என்ற உறுதியோடு உள்ளனர் என்பதும். லஞ்சம் ஒரு புற்று நோய் போல பரவி விட்டது. இதனை தடுக்க வருங்கால சமுதாய அங்கத்தினர்கள் முன் வர வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும் போது
லஞ்சம் அதிகரிக்க மக்களே முதல் காரணம். மக்கள் தகுதியை மறைத்து அரசு சலுகை பெற நினைப்பதாலே லஞ்சம் அதிகரித்து வருகின்றது முன்பு சலுகை பெற்றபின் கவனிங்க என்ற நிலை இருந்தது இன்று கவனிங்க சலுகை கிடைக்கும் என்ற நிலைக்கு மாறி விட்டது.
லஞ்சம் அதிகரிப்பதால் நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்க படுகின்றது தற்போதைய நிலையில் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட ஏழைகள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாத நிலைக்கு தள்ள பட்டுள்ளனர் இவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் வேறு தகுதி இல்லாதவர்கள் லஞ்சம் கொடுத்து பெற்று செல்கின்றனர் இதனால் இவர்கள் இன்னும் ஏழையாகவே வாழ்கின்றனர்.
லஞ்சம் அதிகரிப்பதால் வளர்ச்சி பணிகளில் உறுதி இன்மை அரசுக்கு அதிக செலவு மக்கள் வாழ்கை தரம் மேம்படமை திட்டங்கள் முழுமையான நோக்கத்தினை அடையாமை உள்ளிட்ட பல்வேறு பதிப்புகள் ஏற்படுகின்றன
லஞ்சத்தினை ஒழிக்க மாணவர்கள் இளைய சுமுதயதினர் முன் வர வேண்டும் லஞ்சம் வாங்க மாட்டோம் என்ற உறுதி மொழி எடுக்க வேண்டும். பொது சேவை உரிமை சட்டத்தினை நடைமுறை படுத்தினால் லஞ்சம் ஒழியும் என்றார்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க பட்டது தமிழில் முதல் பரிசு சுதர்சன் சுந்தர், இரண்டாம் பரிசு ராம்ஜி, முன்றாம் பரிசு மமுத பீவி, ஆங்கிலத்தில் முதல் பரிசு அபிஜீத், இரண்டாம் பரிசு ஷிப்னா, முன்றாம் பரிசு கனிமொழி ஆகியோர் பெற்றனர் மற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்க பட்டது
முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் ராஜாங்கம் வரவேற்றார் ஆசிரியை பரிமள செல்வி நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக