ஊட்டி:கூடலூர்
நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில், "உணவு
பாதுகாப்பு மற்றும் கலப்பட உணவு' என்ற தலைப்பில்,விழிப்புணர்வு கருத்தரங்கு
ஊட்டியில் நடந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம்
தலைமை வகித்தார். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழ்
செல்வன் பேசுகையில், ""உணவுக் கலப்படத்தை தடுக்க உணவு கலப்பட தடை சட்டம்
கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தில், கலப்படம் செய்வோருக்கு அளிக்கப்படும்
தண்டனையை விட, விற்பவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்கும் வகையில் வழி வகை
செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் வாங்கும் போது அவற்றின் தரம்,
பேக்கிங் தேதி, எடை, காலாவதி தேதி, சத்துக்கள் குறித்து அறிந்து வாங்க
வேண்டும். கலப்பட பொருட்கள் விற்பது தெரிய வந்தால், மாவட்ட கலெக்டர்,
மாவட்ட உணவு தர கட்டுப்பாடு அலுவலர், தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு
அமைப்பு நிர்வாகிகளுக்கு புகார் தெரிவிக்கலாம். புகார் உறுதி
செய்யப்பட்டால் , தகவல் கொடுத்தவருக்கு, தக்க சன்மானம் 1000 ரூபாய் முதல்
வழங்கப்படும். தகவல் கொடுப்பவர் பெயர் முகவரி ரகசியமாக பாதுகாக்கப்படும்.''
இவ்வாறு, தமிழ் செல்வன் பேசினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக