கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கூடலூர்:கூடலூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தை பயன்படுத்த பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணி, போக்குவரத்து துறை பொதுமேலாருக்கு அனுப்பியுள்ள மனு:
கூடலூர் பஸ் ஸ்டாண்டினுல் கழிப்பிடத்தில், பயணிகள் சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். ஆனால், விதிமுறைகளை மீறி நபர் ஒருவருக்கு, 3 ரூபாய் வசூல் செய்கின்றனர். இது தொடர்பாக பயணிகளின் புகாரை தொடர்ந்து, கூடலூர் எம்.எல்.ஏ., பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்தை ஆய்வு செய்து, முறையாக பராமரிக்கவும், கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும் எனவும், போக்கு வரத்து அதிகாரிகளை எச்சரிக்கை செய்துள்ளார்.ஆனால், இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், ஒப்பந்தம் எடுத்தவர்கள், கழிப்பிடத்தில், தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இது, பயணிகளை கடுமையாக பாதிக்கிறது.இது குறித்து நடவடிக்கை எடுக்க வில்லையெனில், கூடலூர் கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு சிவசுப்ரமணி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக