பந்தலூர், : பந்தலூர் புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற 5ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் செலின் தலைமை வகித்தார்.
கூட லூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,
சேரன் அறக்கட்டளை நிர்வாகி தங்கராஜ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் மார்ட்டின் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற மண்டல ஒருங்கிணைப்பா ளர் சொக்கலிங்கம் பேசு கையில், ‘1986ம் ஆண்டு நுகர்வோர்சட்டத்தின் படி தரமான பொருள்களை தான் விற்க வேண்டும். ஆனால் தரமான பொருட்கள் நுகர்வோர்களுக்கு கிடைப்பதில்லை. பொரு ளைப் பற்றிய அறிவு, கவனிப்பு, செயல்பாடு, அது குறித்து புகார் தெரிவித்தல் ஆகிய விழிப்புணர்வு வாடிக்கையாளர்களுக்கு இல்லாததே தரமான பொருள் கிடைப்பதில்லை.
இதனால் நுகர்வோர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். 2005 முதல் பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஏற்படுத்தி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு தருகிறோம். இதில் 50 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல விளம்பரங்களில் தவறான தகவல்கள் வருகின்றன. அதனால் பொருளின் உண்மைத் தன்மை அறிந்து பொருட்களை வாங்க வேண்டும்‘ என்றார்.
இதில் நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் நவுசாத், தனிஷ்லாஸ், சில்வர் ஸ்டார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக