ஊட்டி, : நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அமைக்க விரும்புபவர்களை ஊக்கப்படுத்தி ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் தீர்மானித்துள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்க விரும்பும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு உதவிகள் வழங்க கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகர்வோர் அமைப்புகள் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ன் படி உருவாக்கப்படும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு நுகர்வோர் சார்பான பிரச்னைகள், குறைபாடுகளை அரசுக்கு சுட்டி காட்டவும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கு சேவைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் அமைப்பு செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
நிபந்தனைகளுக்குட்பட்டு நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புபவர்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் பயிற்சி விழிப்புணர்வு பயிற்சி சட்டங்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மனித உரிமைகள் நுகர்வோர் மற்றும் பல்வேறு தகவல்கள் குறித்த பயிற்சிகள் வழங்க உள்ளோம். மேலும், அரசு சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான இதழ்கள் மற்றும் சில சமூக நல இதழ்கள் அமைப்பிற்கு பெற்று தரப்படும்.
நுகர்வோர் அமைப்பு துவங்க விரும்புவோர்கள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் அஞ்சல், நீலகிரி மற்றும்
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர் அஞ்சல் ஆகிய முகவரியிலோ
அல்லது 94885 20800, 94898 60250 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக