பந்தலூர்:"மின்சார சேமிப்பின் அவசியம் குறித்து மாணவர்கள் உணர்ந்து கொண்டால், எதிர்கால தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்,' என, விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.
பந்தலூர் அருகே உப்பட்டியில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
உப்பட்டி, எம்.எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியின்
குடிமக்கள் நுகர்வோர்
மன்றம் சார்பில், மின்சார சேமிப்பின் அவசியம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஆசிரியை ருக்மணி வரவேற்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், தலைமை வகித்து பேசியதாவது:
மின்சாதனப்பொருட்கள், ஐ.எஸ்.ஐ., முத்திரை கொண்டிருக்கின்றனவா என்பதை தெரிந்து வாங்க வேண்டும்; அவற்றுக்கு உரிய ரசீது கேட்டு பெற வேண்டும். தரமான பொருட்களில் மின்சாரத்தை சேமித்து பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகள் இருக்கும். குண்டு பல்புகளை பயன்படுத்துவதால் மின்சார செலவும், வெப்பமயமாதலும் அதிகரிக்கிறது. எனவே மின்சாரத்தை சேமிக்கவும், மரங்கள் நடவும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மின்வாரிய கோட்டபொறியாளர் முரளீதரன் பேசுகையில், ""12 ஆயிரம் வாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில்,
தற்போது 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். நிலக்கரி, தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையில், போதிய மழையின்மையால் தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது. எனவே மின்சாரத்தை சேமிக்கவும், காற்றாலைகள் மூலம் மின்தயாரிக்க, அதிகளவில் மரம் நடவும், மாணவ சமுதாயம் முன்வரவேண்டும்,'' என்றார்.
பொறியாளர் செம்புலிங்கம் பேசும்போது, ""வீட்டில் "டிவி' யை ரிமோட் மூலம் மட்டுமே ஆப் செய்தால் மின் விரயம் ஏற்படும். அதேபோல் பிரிட்ஜ், வாஷிங்மெஷின்களில் அதன் கொள்ளளவுக்கு பொருட்கள், துணிகளை பயன்படுத்த வேண்டும்.
ஒரு குண்டு பல்பு மூலம் செலவிடப்படும் மின்சாரத்தில், நான்கு சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்தலாம்,'' என்றார்.
விழிப்புணர்வு முகாமில், தொடர்ந்து சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்
டது.
பொறியாளர்கள் சந்தோஷ்குமார், பாலாஜி, தமிழரசன், போர்மேன் முகம்மது அலி, கூடலூர்-பந்தலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் விஜயசிங்கம், மைய நிர்வாகி தனிஸ்லாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியை சசீலா நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக