ஊட்டி:""ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாத வீட்டு உபயோக மின்சாதன பொருட்களை வாங்க வேண்டாம்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டியில் தரச்சான்று பெறாத மின் சாதன பொருட்களை விற்பனை செய்த கடைகளை, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அறிவுறுத்தலின்படி, மேலாளர் (மூலப்பொருட்கள்) மணிகண்டன் உட்பட குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, பல தரமற்ற மின்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ஆய்வுக்கு பின் அதிகாரிகள் கூறுகையில்,"இந்திய அரசு தரக்கட்டுப்பாடு ஆணை 2003ன்படி, நீரில் முழ்கி சூடேற்றும் கருவி (வாட்டர் ஹீட்டர்), மின் சலவை பெட்டி (அயர்ன்பாக்ஸ்), மின் அடுப்பு, மின் விசை மின் வட கம்பிகள் (பிவிசி இன்சலுயூட் கேபிள்) உள்ளிட்ட 17 வகையான வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் கண்டிப்பாக ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு, தரச்சான்று பெறாமல் உற்பத்தி செய்தாலோ, இருப்பு வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ, தரக்கட்டுப்பாடு சட்டப்படி தண்டனை உண்டு. இதுபோன்ற குற்றம் விளைவிப்பவர்களுக்கு கோர்டில் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் ஒரு சேர விதிக்கப்படும். விலை குறைவு காரணத்தால் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாத வீட்டு உபயோக மின்சாதன பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தினால் மின் விபத்து ஏற்படும். எனவே, அத்தகைய மின்பொருட்களை நுகர்வோர் வாங்க வேண்டாம்,' என்றனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக