அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 31 ஜனவரி, 2013

annual report 2012

cchep annuval report 2012

         


                                

                          






 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

படிப்பில் ஆர்வம் காட்டினால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும்

பந்தலூர் : மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டினால் தேர்வில் அதிக
மதிப்பெண்கள் பெற இயலும், என தெரிவிக்கப்பட்டது. பந்தலூர் புனித சேவியர்
பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு
பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி
பள்ளி வளாகத்தில் நடந்தது. பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம்
சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மைய அமைப்பாளர் நவுசாத் வரவேற்றார். 

கூடலூர்  நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம்
பேசுகையில்,ஆண்டுதோறும் முழுமையான தேர்ச்சி விகித்தை பெற்று வரும்
இப்பள்ளியின் மாணவிகள் மனது வைத்தால் வரும் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில்
முதல் இடத்தை பெற இயலும். மேலும் மாணவர்களும் ஆர்வத்துடன் படித்தால் அதிக
மதிப்பெண் பெற இயலும், என்றார்.

பள்ளி தலைமையாசிரியர் செலீன் பேசுகையில், மாணவிகளின் வளர்ச்சிக்கு
தூண்டுகோலாகவும், உந்துதலாகவும் இருந்து ஆண்டுதோறும் பரிசு, பணமுடிப்பு
வழங்கி கவுரப்படுத்தும் மையத்திற்கு நன்றி செலுத்தும் வகையில், மாணவிகள்
சாதனையாளர்களாக மாற வேண்டும், என்றார். தொடர்ந்து மைய தலைவர் தாஸ் முதல்
மதிப்பெண் பெற்ற மாணவி ரஞ்சிதாவிற்கு பரிசுகோப்பையும், ஆலோசகர் செல்வராஜ்
ஊக்கத்தொகையும் வழங்கினர். செயற்குழு உறுப்பினர்கள் சித்திக், அன்னக்கிளி,
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் மார்ட்டின் நன்றி
கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

"மாணவ சமுதாயம் போலியான விளம்பரங்களை கண்டு ஏமாறாமல்

பந்தலூர்:"மாணவ சமுதாயம் போலியான விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,' என தெரிவிக்கப்பட்டது.கூடலூர் நுகர்வோர் -மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், மாநில அரசு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு, உந்துனர்அறக்கட்டளை, தமிழ்நாடு-பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, குந்தலாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழாவை நடத்தின. 

இதில், நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நுகர்வோரை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு சட்டங்கள் இருந்தும் அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்வதில்லை. நுகர்வோருக்கு தகவல் தேர்வு செய்தல், குறைகளை சுட்டிகாட்டுதல், நிவாரணம் பெறுதல் உள்ளிட்ட 8 வகை சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மாணவ சமுதாயம் போலியான விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார். தலைமையாசிரியர் கருப்பையா பேசுகையில், ""தவறுகளை தனி மனிதனால் தட்டிக்கேட்க இயலாது என்பதால் தான் நுகர்வோர்களை ஒன்றினைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை முறையாக பயன்படுத்தினால் எதிர்காலத்தில் பயன் கிடைக்கும்,'' என்றார். 

பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் ஜான் மனோகர் பேசுகையில்,""நாம் பெறும் உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யாத நிலையில்; காலாவதியான நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்துகிறோம். தேவைக்கேற்ற வகையில் எரிபொருள், சமையல் எரிவாயுக்களை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பு, நச்சுப்புகை ஆகியவற்றால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பொருட்களை வாங்கும்போது எடை, தயாரிப்பு-காலாவதி தேதி, விலை போன்றவற்றை சரிபார்த்து வாங்கிடவும், நுகர்வோர் குறித்த விழிப்புணர்வை பெறுவதிலும் மாணவ சமுதாயம் முன்வரவேண்டும்,''என்றார். ஆசிரியர் ஈஸ்வரன், பங்கஜ்குமார், நுகர்வோர் மைய நிர்வாகி தனிஸ்லாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் காளு நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

"சத்தான ஆகாரங்களை மாணவர்கள் உட்கொண்டால் பலம்'

பந்தலூர்:மாணவர்கள் நொறுக்கு தின்பண்டங்களை விடுத்து சத்தான ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அரசு உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் மாதாந்திர விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.சுகாதார விழிப்புணர்வு எனும் தலைப்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ஊட்டச்சத்து குறைவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. 
வளமுள்ள எதிர்காலத்திற்கு மாணவ சமுதாயம் எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். மாணவர்கள் நொறுக்கு திண்பண்டங்களுக்கு முக்கியத்துவம் தராமல், சத்தான ஆகாரங்களை உட்கொண்டால் மட்டுமே பலம் இருக்கும்,என்றார்.அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் யசோதரன் பேசுகையில்,இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டு 3 நிமிடத்துக்கு ஒருவர் உயிரிழக்கிறார். தொடர் காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி பயன்பெறலாம், என்றார். 
எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்து நம்பிக்கை மைய ஆலோசகர் அழகுராஜா பேசுகையில்,எச்.ஐ. வி.எய்ட்ஸ் நோய் குறித்து வெளியில் கூற பலரும் முகம் சுழிக்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவோர் குறித்து கண்டறிவது சிரமமாக உள்ளது. இலவசமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை பயன்படுத்தி கொள்ள பாதிக்கப்பட்டவர்கள் முன்வரும் நிலையில்; அவர்களின் விபரங்கள் குறித்து ரகசியமாக வைக்கப்படும், என்றார். சுகாதார பணியாளர் ரவீந்திரன், நுகர்வோர் மைய நிர்வாகி தனிஸ்லாஸ், ஒருங்கிணைப்பாளர் மார்ட்டீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவி மஞ்சு வரவேற்றார். கீர்த்தனா நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கூடலூர்:கூடலூர் அரசு மருத்துவமனையில், அனைத்து வசதிகளுடன் கூடிய "பிரசவ பிரிவு' துவங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:

கூடலூர்  பந்தலூர்   பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட கூலி தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு  விவசாயிகள் வசித்து வருகின்றனர். இங்கு வாழ்வோர் தனியார் மருத்துவமனைகள் போதுமானதாக இல்லாததால், மருத்துவ தேவைகளுக்கு, கூடலூர் அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனர். இங்கு, நோயாளிகள் சிறப்பான சிகிச்சையை பெற்று பயனடைந்து வருகின்றனர். எனினும், ஆபத்தான அவசர சிகிச்சைக்கு, ஊட்டி, கேரளா மாநிலம் கல்பட்டா, சுல்தான்பத்தேரிக்கு பரிந்துரை செய்வதால், நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்துக்கு முன் மற்றும் பின் கால பரிசோதனை சிறப்பாக உள்ளது. 

ஆனால், பிரசவ நேரத்தில் அவசர சிகிச்சைக்கான வசதி இல்லாததால், 50 கி.மீ., தொலைவிலுள்ள ஊட்டி அரசு  சேட் தாய் சேய்  மருத்துவ மனைக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு கொண்டு செல்லும் பொது அசம்பாவிதங்கள்  நடை பெறும் ஆபத்து உள்ளது. ஊட்டி அரசு  சேட் தாய் சேய்  மருத்துவ மனையில் பெரும்பாலும் கூடலூர் பகுதி மக்கள் பிரசவத்திற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.   சேட் தாய் சேய்  மருத்துவ மனையிலும் போதிய கட்டில் வசதி இல்லாமல் ஒரு கட்டிலில் இரு நபர்கள் தாங்கும் நிலையும் உள்ளது 

எனவே  கூடலூர் அரசு மருத்துவமனையில் சிசேரியன் பிரிவு, குழந்தைகள் பாதுகாப்புக்கான தனி பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய "பிரசவ பிரிவு' துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோல இங்கு கட்டி முடிக்கப்பட்ட நிலுவையில் உள்ள ரத்த வங்கியை உடனடியாக திறக்க வேண்டும் 

 "எக்ஸ்ரே' பிரிவுக்கு தற்போது வாரம் இருமுறை மட்டுமே எடுக்க படுகிறது இதற்க்கு  நிரந்த ஊழியரை நியமிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலூர் நகரின் முக்கிய பகுதியான பழைய பேருந்து நிலையத்தில் ஒரு டாக்டருடன் செயல்படும் கூடலூர் நகர அரசு மருந்தகத்தில், சிகிச்சைக்காக தினமும் 200 முதல் 300 நோயாளிகள் வந்து செல்கின்றனர். நோயாளிகள் விரைவில் எளிதில் சிகிச்சை பெற இந்த மருந்தகம் உதவுகிறது எனவே நோயாளிகளின் சிரமத்தை போக்க, கூடுதல் டாக்டரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

திங்கள், 28 ஜனவரி, 2013

கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம்

கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடை பெற்றது


கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலை பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் பள்ளி நிர்வாகம் இணைந்து செயல் படுத்தும் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் கூட்டம் பள்ளி கூட்ட அரங்கில் நடைப்பெற்றது

கூட்டத்திற்கு பள்ளி   தலைமை ஆசிரியர் சூசை மேரி தலைமை வகித்தார் பள்ளி நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை ஸ்வீடி  முன்னிலை வகித்தார்

கூட்டத்தில் சிறப்பு அழைப்பா ளராக  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்பிரமணியம்  பேசுகையில், ""நுகர்வோர், தங்களுக்கான உரிமைகளை அறியாததால், பல நிலைகளில் ஏமாற்றப்படுகின்றனர். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1990ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தரமற்றப் பொருட்கள், போலி பொருட்கள் வாங்குவதிலிருந்து பாதுகாப்பு பெற, தரமான பொருட்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள தர குறியீடுகளை பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும். பொருட்களின் தகவல் கேட்டு பெறுவதற்கும் , தேவையான சேவை அல்லது பொருட்களை தேர்வு செய்வதற்கும்  உரிமை உள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளில் குறைபாடுகள் இருப்பின் சம்மந்தபட்ட துறை அலுவலர்கள் அல்லது மாவட்ட ஆட்சியருக்கு புகார்களை எழுதி அனுப்பிட வேண்டும் பல கடைகளில் எடைகுறைவு மற்றும் தர குறைவான பொருட்கள் விற்பனை செய்யபடுவதை தெரிவிக் காத்ததினால் தொடர்ந்து அவை சந்தையில் விற்பனை செய்யபடுகிறது . அதுபோல விளம்பரங்களில் பிரபலங்கள் தோன்றி அவர்கள் சொல்வதை நம்பி பொருட்கள் வாங்கி பயன்படுத்துவதை, சிலர் கவுரவமாக கருதுகின்றனர். நுகர்வோர், போலி விளம்பரங்களை நம்பி ஏமாறக் கூடாது. நிதி நிறுவனம், நில விற்பனை உட்பட அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொண்டு விழிப்புடன் இருந்தால், ஏமாற்றப்படுவதை தவிர்க்க முடியும்,  உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்துள்ளது. உணவு பொருட்களை வாங்கும் முன் அவை தரமானதா என ஆய்வு செய்து பொருட்களை வாங்க வேண்டும்  நிறங்கள் சுவையூட்டிகள் கலந்த  கலப்பட உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால், உடலில் பல்வேறு நோய் ஏற்பட காரணமாகிறது. தர முத்திரைகளை கொண்ட தரமான உணவுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் காலின், பாத்திமா, பிரான்சிஸ், விஜய லட்சுமி பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்ற மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக  பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்ற தலைவர் கிருஷ்ண குமாரி வரவேற்றார் முடிவில்  ணவி பிரிய தர்சினி நன்றி கூறினார் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்


செவ்வாய், 1 ஜனவரி, 2013

பந்தலூர் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

பந்தலூர் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்






கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்