பந்தலூர் : மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டினால் தேர்வில் அதிக
மதிப்பெண்கள் பெற இயலும், என தெரிவிக்கப்பட்டது. பந்தலூர் புனித சேவியர்
பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு
பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி
பள்ளி வளாகத்தில் நடந்தது. பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம்
சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மைய அமைப்பாளர் நவுசாத் வரவேற்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம்
பேசுகையில்,ஆண்டுதோறும் முழுமையான தேர்ச்சி விகித்தை பெற்று வரும்
இப்பள்ளியின் மாணவிகள் மனது வைத்தால் வரும் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில்
முதல் இடத்தை பெற இயலும். மேலும் மாணவர்களும் ஆர்வத்துடன் படித்தால் அதிக
மதிப்பெண் பெற இயலும், என்றார்.
பள்ளி தலைமையாசிரியர் செலீன் பேசுகையில், மாணவிகளின் வளர்ச்சிக்கு
தூண்டுகோலாகவும், உந்துதலாகவும் இருந்து ஆண்டுதோறும் பரிசு, பணமுடிப்பு
வழங்கி கவுரப்படுத்தும் மையத்திற்கு நன்றி செலுத்தும் வகையில், மாணவிகள்
சாதனையாளர்களாக மாற வேண்டும், என்றார். தொடர்ந்து மைய தலைவர் தாஸ் முதல்
மதிப்பெண் பெற்ற மாணவி ரஞ்சிதாவிற்கு பரிசுகோப்பையும், ஆலோசகர் செல்வராஜ்
ஊக்கத்தொகையும் வழங்கினர். செயற்குழு உறுப்பினர்கள் சித்திக், அன்னக்கிளி,
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் மார்ட்டின் நன்றி
கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக