அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 31 ஜனவரி, 2013

"சத்தான ஆகாரங்களை மாணவர்கள் உட்கொண்டால் பலம்'

பந்தலூர்:மாணவர்கள் நொறுக்கு தின்பண்டங்களை விடுத்து சத்தான ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அரசு உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் மாதாந்திர விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.சுகாதார விழிப்புணர்வு எனும் தலைப்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ஊட்டச்சத்து குறைவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. 
வளமுள்ள எதிர்காலத்திற்கு மாணவ சமுதாயம் எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். மாணவர்கள் நொறுக்கு திண்பண்டங்களுக்கு முக்கியத்துவம் தராமல், சத்தான ஆகாரங்களை உட்கொண்டால் மட்டுமே பலம் இருக்கும்,என்றார்.அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் யசோதரன் பேசுகையில்,இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டு 3 நிமிடத்துக்கு ஒருவர் உயிரிழக்கிறார். தொடர் காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி பயன்பெறலாம், என்றார். 
எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்து நம்பிக்கை மைய ஆலோசகர் அழகுராஜா பேசுகையில்,எச்.ஐ. வி.எய்ட்ஸ் நோய் குறித்து வெளியில் கூற பலரும் முகம் சுழிக்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவோர் குறித்து கண்டறிவது சிரமமாக உள்ளது. இலவசமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை பயன்படுத்தி கொள்ள பாதிக்கப்பட்டவர்கள் முன்வரும் நிலையில்; அவர்களின் விபரங்கள் குறித்து ரகசியமாக வைக்கப்படும், என்றார். சுகாதார பணியாளர் ரவீந்திரன், நுகர்வோர் மைய நிர்வாகி தனிஸ்லாஸ், ஒருங்கிணைப்பாளர் மார்ட்டீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவி மஞ்சு வரவேற்றார். கீர்த்தனா நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக