ஊட்டி, :நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் செயல்படுத்தப்படும் கிராம நுகர்வோர் மன்றங்களின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு ஆகியவை ஊட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கூட்டமைப்பின் பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
தலைவர் சிவசுப்பிரமணியம், பொது செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெட்காட் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜரீகா, சென்னை சஜீவ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நுகர்வோர் அமைப்புகளின் செயல்பாடுகள், நுகர்வோர் நன்னெறி குறித்தும், நுகர்வோர் விழிப்புணர்வு தகவல்கள் குறித்தும் விரிவாக விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் நுகர்வோர் மன்ற நிர்வாகிகளான
மஞ்சுளா, சுப்பிரமணி, கணேசன், செல்வராஜ், அருணா, சின்னசாமி, ராஜராஜன், நாகராஜ், ஜெயபிரகாஷ், சீதா, விஜயகுமாரி, செல்வி, சாமி, செல்வம், சத்தியராஜன் மற்றும் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நுகர்வோர் மைய ஊட்டி வட்டார பொறுப்பாளர் மணிமுத்து வரவேற்றார்.
முடிவில் நுகர்வோர் மன்ற அமைப்பாளர் சிதம்பரம் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக