ஊட்டி: இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி ஊக்கதொகையை உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,
தமிழக முதல்வரின் தனிபிரிவிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2011- 12ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு கல்வி பயின்ற மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கும் விதமாகவும், மேல் கல்விக்காகவும் ஊக்க தொ கையை£க பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்களுக்கு ரூ.1000ம், பிளஸ் 1வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500ம், பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2000ம் ஊக்க தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மாணவர்களுக்கு அதற்கான முதலீட்டு பத்திரம் தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்பட்டது. அத்ª தாகை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு துவங்கி அதன் நகலை பள்ளிகளில் வழங்கினார்கள்.ஆனால் அவர்களுக்கு இது நாள் வரை மேற்சொன்ன இடைநிற்றல் மற்றும் மேல்கல்விக்கான ஊக்க தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளது. பள்ளிகளில் பல முறை தகவல் கேட்டதன் அடிப்படையில் முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். மாணவர்கள் மேற்கல்வியில் சேர்ந்தவர்களும் பயன்பெறாமல் உள்ளனர். அதனால் விரைவில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு எரிசக்தி முகமை மூலம் வழங்கப்பட்ட நிதி பத்திரத்திற்கு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக