ஊட்டி:மாநில அரசின் சார்பில், கல்வி ஊக்க தொகையாக வழங்கப்பட்ட முதலீட்டு பத்திரத்திற்கு பணம் கிடைக்காததால், மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த, மாணவ, மாணவியரின் இடை நிற்றலை தவிர்க்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, மாணவ, மாணவியர் மேல்நிலைக் கல்வியை தொடர, அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க திட்டமிடப் பட்டது.
இதன்படி,"கடந்த 2011-'12ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்களுக்கு 1,000 ரூபாய், 11ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு 1,500 ரூபாய், 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு 2,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமையின் மூலம், அதற்கான முதலீட்டுப் பத்திரம், மாணவ, மாணவி யருக்கு வழங்கப்பட்டது.
இந்த பத்திரத்தை பெற்ற மாணவ, மாணவியர் தங்களது பெயரில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி, அந்த வங்கிகளில் இந்த பத்திரத்தை செலுத்த வேண்டும் எனவும், அவர்களது வங்கி கணக்கில், முதலீட்டு பத்திரத்திற்குரிய தொகை செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதலீட்டுப் பத்திரம் பெற்ற மாணவ, மாணவியர், அவசர, அவசரமாக வங்கி கணக்கு துவக்கி, வங்கி கணக்கு எண், முதலீட்டுப் பத்திரத்தை பள்ளிகளில் சமர்பித்தனர்.
ஆனால், இந்த பத்திரத்தை பெற்ற மாணவ, மாணவியரின் வங்கி கணக்கில், இதுவரை
முதலீட்டு பத்திரத்திற்கான ஊக்கத் தொகை செலுத்தப்படவில்லை.
இதுகுறித்து, கல்வி அதிகாரிகளிடம் கேட்கும் போது, " முதலீட்டு நிதி பத்திரம், மாணவ, மாணவியரின் வங்கி கணக்கு எண் உட்பட விபரங்கள், சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது; வேறெதுவும் எங்களால் சொல்ல முடியாது' என்றனர்.
பள்ளி மாணவ, மாணவியரை ஊக்குவிக்க அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம், பெயரளவில் மட்டுமே இருப்பது, மாணவ, மாணவியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலை
வர் சிவசுப்ரமணியம், மாநில முதல்வருக்கு மனு அனுப்பியுள் ளார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக