அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 3 ஆகஸ்ட், 2013

வாழும் புலிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது

உலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளின் காடுகளில் புலிகள் உயிர்வாழ்கின்றன. கடந்த 1900ம் ஆண்டில், உலகில் லட்சம் புலிகள் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் தேசிய விலங்கு புலி. மேற்கு வங்க மாநில விலங்கும், வங்கதேசத்தின், தேசிய மிருகமும் புலிதான். 

19ம் நூற்றாண்டில், இந்தியாவில் 37 ஆயிரம் புலிகள் இருந்ததாகவும், 1969ல், புலிகள் எண்ணிக்கை 2,500 ஆக குறைந்துவிட்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது. இதன்படி 2011ம் ஆண்டில், 1706 புலிகள் உள்ளதாக தெரியவந்தது. கடந்த 2006ல் இருந்த எண்ணிக்கையைவிட 296 புலிகள் அதிகமாகியுள்ளன. வங்கப்புலி, மலேயப்புலி, சுமத்ரா (இந்தோனேசியா) புலி, சைபீரியன் புலி, தென் சீனப்புலி என, பல வகை புலிகள் உள்ளன. புலியின் மீதுள்ள கோடுகள் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசப்படும். அதன் எலும்பு, பற்கள், நகம், தோல் என அனைத்து உறுப்புகளும் மருத்துவ குணம் கொண்டவையாக கருதப்படுகிறது. சீனாவில், இவற்றைக் கொண்டு நாட்டு மருந்தும் தயாரிக்கின்றனர். மத்திய அரசு 1970ல், புலி வேட்டைக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இந்தியாவில், புலிகளுக்கான முதல் சரணாலயம், உத்தரப்பிரதேசம் நைனிடால் மாவட்டத்தில், 1973ம் ஆண்டு, ஏப்.,1ல் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு, மார்ச் 15ல், சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில், மொத்தம் 43 சரணாலயங்கள் உள்ளன.

தபால்துறை முன்னாள் அதிகாரி ஹரிஹரன் கூறுகையில், ""இந்தியாவில், வெள்ளைப்புலி தபால் தலை 1987ல், நவ.,11ல் வெளியிடப்பட்டது. ஜிம் கார்பெட் நேஷனல் பார்க் ஸ்தாபகரின் பிறந்த நாளையொட்டி 1976ல், ஜன., 24ல், 25 பைசா தபால் தலையும், "புராஜெக்ட் டைகர்' திட்டத்திற்காக, 1983ல், நவ.,22ல் இரண்டு ரூபாய் தபால் தலையும் வெளியிடப்பட்டது,'' என்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு தலைவர் முகமது சலீம் கூறுகையில், ""புலிகள் இருந்தால்தான், காடு பாதுகாப்பாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும். புலி இருந்தால், அங்கு புள்ளி மான், யானைகள் அதிகளவில் இருக்கும். உணவுக்கு மான் போன்ற விலங்கினங்கள் இல்லாதபோது புலிகள் நாட்டிற்கு உள்ளேயும் ஊடுருவுகின்றன. புலி, யானை போன்றவை, இடம்விட்டு இடம் பெயரும் தன்மை கொண்டவை. 50 கி.மீ., சுற்றளவில் அவை இடம்பெயர்கின்றன. "புலிகளை ஏன் காப்பாற்ற வேண்டும்' என்ற விழிப்புணர்வை, மாணவர்களிடம் ஏற்படுத்த, பீளமேடு, சந்திரகாந்தி பள்ளி இருந்து, புலிகள் பற்றிய படங்கள், தகவல்கள் அடங்கிய கண்காட்சி வாகனம், இன்று காலை 9:00 மணிக்கு துவக்கி வைக்கப்படுகிறது,' என்றார்.

காப்போம் காட்டு காவலனை : இந்தியாவின் தேசிய விலங்கு புலி. ஆனால் இன்று புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால் தான், வனத்தின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லையெனில் மேய்ச்சல் விலங்குகள் எண்ணிக்கை அதிகமாகி, காடுகளின் வளம் குறையும். காடுகளின் காவலனாக இருக்கும் புலிகளை பாதூக்க வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூலை 29ம் தேதி, உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

97 சதவீதம்: உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது. 
என்ன காரணம்:புலிகள் மற்றும் யானைகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்பினால், பல ஆண்டுகளாக மனிதர்கள் புலிகளை சட்ட விரோதமாக வேட்டையாடி வந்தனர். இதன் காரணமாக புலிகள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகள் அழிகின்றன. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் பெங்காலி புலிகள் என அழைக்கப்படுகின்றன. இருப்பினும் இப்பகுதியில் வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளதால், இங்கு வாழும் புலிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக