கூடலூர், : கூடலூர் மின்பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர் பெயர் மாற்றும்
முகாம் நடந்தது.
மேற்பார்வை பொறியாளர் ஆல்துரை தலைமை வகித்தார்.
செயற்பொறியாளர் சிவராஜ், உதவி செயற்பொறியாளர்கள் முரளிதரன், பிரேம்குமார்,
நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிறுவனர் சிவசுப்பிரமணியம் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.
பெயர் மாற்றம் தொடர்பாக 120 மனு பெறப்பட்டு, 60 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுஉடனடியாக சான்று வழங்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் மற்ற மனு பரிசீலனையில் உள்ளது.
மேற்பார்வை பொறியாளர் ஆல்துரை கூறும் போது,`பொதுமக்கள் தாங்கள் வாங்கும் வீடு மற்றும் பாகப்பிரிவினையின் போது, அதற்கான பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களில் முறையாக பெயர் மாற்றம் செய்கின்றனர். ஆனால், மின்இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். பின்னர் மின்தொடர்பான பிரச்னையின் போது,
ஆவண ரீதியான சிக்கல் ஏற்பட்டு, காலதாமதம் உண்டாகிறது.
அதனால் நுகர்வோர், மின்இணைப்புக்கான பெயர் மாற்றத் தை விரைவில் செய்ய வேண் டும். அதற்கு இது போன்ற முகாமை, பயன்படுத்தி கொள்ள வேண்டும். குண்டுபல்பு உபயோகத்தை தவிர்த்து, சிஎப் பல்பை பயன்படுத்தி பொதுமக்கள் மின்சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்‘என்றார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல்
பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக