குன்னூர்:"தேயிலை
உற்பத்தியில் கலப்படம் செய்தால் குண்டர் சட்டம் பாயும்' என, தேயிலை
வாரியம் எச்சரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகா பகுதிகளில் 200க்கு மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற் சாலை, 15க்கு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. தேயிலை பயிரில் தரமான தேயிலை கொள்முதல் செய்வது குறித்து விவசாயிகளுக்கு குன்னூர் தேயிலை வாரியம் சார்பில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தரமான பசுந்தேயிலை ஒருபுறம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், சில தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்தியில் கலப்படம் செய்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

தேயிலை வாரியம் சார்பில், அடிக்கடி அதிரடி
நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த ஒரு
ஆண்டில் மட்டும் 8 டன் கலப்பட தேயிலை தூள் கண்டுபிடிக்கப்பட்டு
அழிக்கப்பட்டுள்ளது. கலப்பட தேயிலை தூள் குறித்து டீக்கடை, ஓட்டல்களில்
போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை. நீலகிரி மாவட்டத்தில் துவங்கி,
தென்மாநில அளவில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் திடீர் ஆய்வுகள் செய்து,
கலப்பட தேயிலை தூளை கண்டுபிடித்து அழிக்க, தேயிலை வாரியம் பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உணவு பாதுகாப்பு துறையினரும் கலப்படத்தை
கண்டுபிடிக்க அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேயிலை உற்பத்தியில் கலப்படம் செய்தால் போலீசார் உதவியுடன்
குண்டர் சட்டம் பாய்வதுடன், மோசடி வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை
மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து தேயிலை வாரிய செயல்
இயக்குனர் அம்பலவாணன் கூறுகையில், ""தேயிலை கலப்படத்தை கண்டுபிடித்து
ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இனியும் இது போன்ற
செயலில் ஈடுபட்டால், குண்டர் சட்டம் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்து,
மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,''
என்றார்.
--
S.Sivasubramaniam
President CCHEP
Center for Consumer Human resources & Environment protection
Citizen Center
Pandalur Pandalur (Po & Tk)
The Nilgiris 643 233
Tamilnadu
email. cchep.siva@gmail.com
cell:94898 60250 9488 520 800
www.cchepeye.blogspot.com
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்--
S.Sivasubramaniam
President CCHEP
Center for Consumer Human resources & Environment protection
Citizen Center
Pandalur Pandalur (Po & Tk)
The Nilgiris 643 233
Tamilnadu
email. cchep.siva@gmail.com
cell:94898 60250 9488 520 800
www.cchepeye.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக