கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம்
பந்தலூர்: "நுகர்வோர்
சட்டங்கள், பயன்கள் குறித்து மாணவ சமுதாயம் தெரிந்துக்கொள்ள முன்வர
வேண்டும்' என அழைப்பு விடுக்கப்பட்டது.
உப்பட்டி எம்.எஸ்.எஸ். மாணவர்
நுகர்வோர் மன்றம்; கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு
மையம் ஆகியவை இணைந்து பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தின.
ஆசிரியர் பிரதீஷ்பாபு வரவேற்றார்.
தலைமையாசிரியர் கவிதா பேசுகையில்,""மாணவ
பருவத்தில் கூறும் கருத்துக்கள் மனதில் பதியும் என்பதுடன், எதிர்கால
வாழ்வுக்கும் சிறப்பான வழி வகுக்கும் என்பதால் நுகர்வோர் சட்டங்கள்,
பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து
தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.
நுகர்வோர் மைய
தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,
""நுகர்வோர்களுக்கு 8 வகையான சட்டங்கள்
முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் தேர்வு செய்யும் உரிமை, கல்வி உரிமை,
அடிப்படை தேவைகளுக்கான உரிமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த பொருளை
வாங்கினாலும் அவற்றின் விபரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து
வாங்குவதுடன், நுகர்வோர் சட்டங்களை தெரிந்துக்கொண்டு உரிமைகளை
செயல்படுத்திடவும் முன்வரவேண்டும்,'' என்றார்.
சேரன்ஸ் அறக்கட்டளை
இயக்குனர் தங்கராஜா, செயலாளர் சில்வஸ்டார், நுகர்வோர் மைய செயலாளர்
கணேசன் செல்வராஜ், பள்ளி நிர்வாகி ஐமுட்டி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக