பொருள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட கூட்டம்
தொடர்பான கருத்துருக்கள்
வணக்கம்
உணவு
பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில்
மேம்படுத்த வேண்டும். மக்களுக்கு இன்னும் இச்சட்டம் முலம் பயன் கிடைக்கும்
வகையில் செயல் படுத்த கீழ் கண்ட கோரிக்கை களையும் நிறைவேற்றி தர வேண்டும்
என கேட்டுகொள்கின்றோம்.
- மாவட்ட வாரியாக உணவு கலப்படம் குறித்து ஆய்வு செய்ய பரிசோதனை கூடங்கள் அமைக்க வேண்டும். இதனால் பொது மக்கள் மற்றும் நுகர்வோர் ஆர்வலர்கள் எளிதில் கலப்படம் குறித்து கண்டறிய முடியும். வழக்கு தொடர விரைவான நடவடிக்கை எடுக்க முடியும்.
- காலியாக உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
- உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் அலுவலக தொடர்பு எண்கள் மக்கள் பார்க்கும் வகையில் ரேசன் கடைகள், பேருந்து நிலையங்கள், வட்ட அலுவலகங்கள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட இடங்களில் எழுதி வைக்க வேண்டும்.
- வட்டம் அல்லது நகரம் அல்லது கடைகள் எண்ணிக்கை அடிப்படையில் முகாம் நடத்தி வியாபாரிகள் பதிவு செய்ய உரிமம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் பல வியாபாரிகளுக்கு இதற்க்கான தகவல்கள் தெரிய வில்லை. பலர் மிக அதிக தொலைவிற்கு சென்று பதிவு செய்ய தயங்குகின்றனர். முகாம் முலம் அனைத்து வியாபாரிகளும் உரிமம் பெற செய்வதனால் நுகர்வோருக்கு தரமான பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க முடியும்.
- பிஸ்கட், குளிர்பானங்கள், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் கலாவதி தேதியை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விரும்பிய படி நிர்ணயிக்கின்றனர். இதற்கான கால அளவை நிர்ணயித்து அனைத்து உற்பத்தியாளர்களும் ஒரே மாதிரியான கலாவதி காலத்தினை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்த சட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பல அலுவலர்கள் சட்டம் குறித்து விளக்கம் அளிக்க முன் வருவதில்லை. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
பொன் கணேசன் சு.சிவசுப்பிரமணியம்
செயலாளர் தலைவர்கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக