ஊட்டி:"பருவமழை மாற்றம் காரணமாக மண்புழு உட்பட லட்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருவதாக' கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், காத்தாடிமட்டம் அரசு மேல்நிலை பள்ளி நாட்டு நலப்பணி திட்டம், நெஸ்ட் அறக்கட்டளை சார்பில், காத்தாடிமட்டத்தில், மண்வளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
தலைமையாசிரியர் சங்கரன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் சாரதா முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், "பூமியில் ஏற்படும் மாற்றங்களால் அனைத்து உயிரினங்களும் பாதிக்கின்றன. இதில் மனிதர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மண் தன்னை தானே சுத்தப்படுத்தி கொள்ளும் தன்மை உடையது. மண்ணை வளப்படுத்துவது நம் கடமை,' என்றார்.
"நெஸ்ட்' அறக்கட்டளை நிறுவனர் சிவதாஸ் பேசுகையில், "படிமட்ட விவசாயம் செய்தால், மண் அரிப்பை தவிர்க்கலாம். ஆண்டுதோறும் சுமார் 50 ஏக்கர் நிலம் வரை தரிசாக மாறுகின்றன.
புல்வெளிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களிலும் விவசாய நிலங்கள், வீடுகள் மற்றும் காட்டேஜ்கள் கட்டுவதற்காக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கபடுவதுடன் பேரிடர்களுக்கு வழி வகுக்கிறது.
நீலகிரி மாவட்டம் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க பட்டுள்ள நிலையில், பருவ நிலை மாற்றத்தினால், மழையின் அளவும் அடிக்கடி மாறிமாறி பெய்வதால், பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனால் விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படும் மண்புழு , உட்பட பல லட்கணக்கான உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இயற்கையை நாம் அழிக்காமல், அதனை காப்பாற்ற ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்,' என்றார்.
இந்த முகாமில், நட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா வரவேற்றார். ஆசிரியர்கள் அர்ஜுனன், கணேசன், சிவகுமார், சந்திரன் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக