அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 29 ஜூலை, 2016

உதகை மண்டலம் போக்குவரத்து கழக குறைபாடுகள் கோரிக்கைகள்

பெறுனர்

பொது மேலாளர் அவர்கள்,
த.ந.அ.போ.கழகம்,
உதகை மண்டலம்.

பொருள்: உதகை மண்டலம் போக்குவரத்து கழக குறைபாடுகள்
     கோரிக்கைகள் / நிறைவு செய்ய கேட்டல் சார்பாக.

அய்யா அவர்களுக்கு வணக்கம்
நமது போக்குவரத்து கழக குறைபாடுகளை குறித்து அளிக்கும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து தந்து உதவியமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சில கோரிக்கைகள் இதன்மூலம் சமர்பிக்கின்றோம் அவற்றுக்கும் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றி தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
1.   கூடலூர் கிளை கழகத்தில் இயக்கப்படும் பல பேருந்துகள் ஒழுகுகின்றன.  இதனால் பயனிகள் மிகவும் சிரம்மப்படும் நிலை ஏற்படுகின்றது.  ஓட்டுனர் நடத்துனர்கள் ஏற்கனவே புகார் பதிவு செய்து கிளை கழகம் மூலம் மேற்படி நடவடிக்கை எடுக்க வில்லை என்ற புகாரும் உள்ளது.  பயனிகள் நலன் கருதி அனைத்து பேருந்துகளும் ஒழுகுதல் குறித்து ஆய்வு செய்து ஒழுகும் பேருந்துகளை மேற்கூரை ஒட்டி தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

2.   சில பேருந்துகள் பக்கவாட்டு கண்ணாடிகளில் ஒழுகுகின்றன.  இவற்றுக்கு மேற்பகுதி கண்ணாடியில் உள்ள வயர் சேதமடைந்து உள்ளது ஒரு காரணமாகும்.  இதற்கு புட்டி எனப்படும் பசையினை ஒட்டினால் ஒழுகுவது குறைக்க்ப்படும் என கருதுகின்றோம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலூர் போக்குவரத்து கழிப்பிடம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது என்பது வேதனை அளிக்க கூடியதாக உள்ளது.  உள்ளே வெளிச்சம் இல்லை. உடைந்த நிலையில் உள்ளது.  துர்நாற்றம் வீசுகின்றது.  உள்ளே செல்பவர்களுக்கு நோய்கள் இலவசம் என்ற நிலை உள்ளது. ஆனால் கட்டணம் ரூ,5 கட்டாயம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இவற்றை சரிசெய்ய வேண்டும்.

3.   இதே நிலை உதகை போக்குவரத்து கழக கழிப்பிடமும் இதே நிலை உள்ளது.  கதவுகள் இல்லை. பெண்கள் பகுதி மிகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் பெண்கள் தரப்பில் புகார் கூறுகின்றனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.   சில ஓட்டுனர் நடத்துனர்கள் மாணவ மாணவிகளிடம் தரக்குறைவாக பேசுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.   எங்களிடம் புகார் தெரிவிப்பவர்கள் மீது சம்பந்தபட்ட கிளை கழகத்தில் புகார் தெரிவிக்கப்படுகின்றது.  எனினும் இந்நிலை வெவ்வேறு பகுதிகளிலும் தொடர்வதால் இதுகுறித்து ஓட்டுனர் நடத்துனர்கள் கலந்தாய்வு கூட்டங்களில் ஆலோசனை வழங்க கேட்டுக்கொள்கின்றோம்.



இந்நிலை தொடரும் பட்சத்தில் சம்பந்தபட்ட ஓட்டுனர் நடத்துனர் குறித்து புகார்கள் தர தயாராக உள்ளோம் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கினறோம்.

5.   பந்தலூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்கின்றன.  ஆனால் 5 நிமிடங்களாவது நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருப்போருக்கு பயன் அளிக்கும்.  பேருந்து நிலையத்தில் நேரக்காப்பாளர் வெளிபக்கம் இருப்பதால் பேருந்துகள் வயிற்பகுதியிலோயே நிறுத்தி கையெழுத்து போட்டுவிட்டு வருகின்றனர் இதனால் பேருந்து உள்பகுதியில் நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகின்றது.  எனவே, நேரக்காப்பாளர் உள் பகுதியில் அமர ஏதுவாக இடம் அமைத்து தர நெல்லியாளம் நகராட்சிக்கு தங்கள் துறை சார்பான கடிதம் மூலம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக அமையும்.

6.   பந்தலூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு தங்கி காலையில் கோவை அல்லது திருப்பூர் உதகை பகுதிக்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7.   பந்தலூர் வழியாக பாட்டவயல் அய்யன்கொல்லி வழித்தடத்தில் காலை 6.15 மணிக்கு கூடலூரில் இருந்து பாட்டவயலுக்கு சென்றால் இதே வழித்தடத்தில் அடுத்தாக 9.30 மணிக்கு தான் அடுத்த நடை இயக்கப்படுகின்றது.  பந்தலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கூலி வேலை மற்றும் பல்வேறு தேவைகளுக்கு பாட்டவயல் மற்றும் கேரளா மாநிலத்திற்கு செல்லக்கூடியவர்கள் இந்த பேருந்தையே அதிகம் நம்பி உள்ளனர்.  இதனால் இந்த பேருந்தில் அதிக கூட்டம் ஏறி செல்கின்றது.  பலரை ஏற்றி செல்ல இயலாத நிலையும் உள்ளது.  பலரும் தனியார் வாகணங்களிலேயே செல்லும் நிலை உள்ளது.
அதுபோல பாட்டவயல் பகுதியில் இருந்து பொன்னானி பந்தலூர் வழியாக கூடலூருக்கு காலை 7 மணிக்கு பின் 9 மணிக்கே பேருந்து உள்ளது.  இதனால் இரு பேருந்துகளிலும் பலர் ஏறிச்செல்கின்றனர்.  இதிலும் பல நேரங்களில் பொன்னானி , நெல்லியாளம், உப்பட்டி உள்ளிட்ட சில நிறுத்தங்களில் பயனிகளை ஏற்றமுடியாமல் செல்லும் நிலையே உள்ளது.
எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்து ஒன்றினை காலை 6.45 மணியளவில் கூடலூரில் இருந்து பந்தலூர் வழியாக பாட்டவயல் வரை இயக்கி மீண்டும் இப்பேருந்து பந்தலூர் வழியாக இயக்கினால் பலர் பயன்பெறுவார்கள் இதற்கான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
8.   வழித்தடத்திற்கு ஒதுக்கிய பல பேருந்துகள் உரிய வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை.  இதனால் வேறு பேருந்துக்காக காத்திருந்து பல நேரங்களில் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படாமல் பயணிகள் பெரிதும் பாதிக்கும் நிலை உள்ளது.  எனவே வழித்தடத்திற்கு ஒதுக்கிய பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும்


9.   பேருந்துகள் பழுது என நிறுத்தும் பேருந்துகள் பல வேறு வழித்தடத்திற்கு மாற்றி இயக்கப்படுகின்றதே தவிர பழுது முறையாக சரிசெய்ய படுவதில்லை.  இதனால் பேருந்துகள் விரைவில் அதிகமாக பழுதடையும் நிலையே உருவாகி வருகின்றது.   எனவே குறிப்பிட்ட பழுதுகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10.          மாற்றுப்பேருந்துகள் கூடலூர் கிளைகழகத்தில் உள்ளதா--? இருப்பின் பல நேரங்களில் பேருந்து இல்லாமல் வழித்தட பேருந்து இயக்கப்படாமல் உள்ளது குறிப்பிடதக்கது.  மாற்றுப்பேருந்துகள் உரிய பராமரிப்பு செய்து வழித்தட பேருந்து பழுதடையும் போது மாற்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11.        பேருந்துகள் உள்பகுதியில் சேரும் குப்பைகள் அடிக்கடி கூட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

12.        சமீபத்தில் பேருந்து படிக்கட்டு உடைந்து அதிர்ஷ்டவசமாக பயனிகள் பாதிப்பின்றி தப்பித்தனர்.   எனவே பேருந்துகளில் உள்ள படிக்கட்டுகள், உள்பகுதியில் உள்ள பலகைகள் தரத்தினை அவ்வப்போது பரிசோதிப்பதன் மூலம் பெரும் வகையிலான விபத்து தடுக்கப்படும்.  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13.        முதலுதவி பெட்டிகளில் மருந்துகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

14.        அவசர கால வழி சில பேருந்துகளில் திறக்க இயலாமல் உள்ளது.  சில பேருந்துகளில் கயிறு கட்டப்பட்டுள்ளது.  இரு நிலைகளையும் மாற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

15.        உதகை மத்திய பேருந்து நிலையத்தில் முன்பகுதியில் உள்ள குழிகளை அகற்றி புதுப்பித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                       
இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம்
தலைவர், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
மின் நுகர்வோர் குறை தீர் மன்ற உறுப்பினர், நீலகிரி மின் பகிர்மான வட்டம்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஸ்கேன் மருத்துவர்கள் இல்லாத கூடலூர், பந்தலூர் தாலுகா அரசு மருத்துவமனைகள்:தனியார் மருத்துவமனையை நாடும் பொதுமக்கள்

ஸ்கேன் மருத்துவர்கள் இல்லாத கூடலூர், பந்தலூர் தாலுகா அரசு மருத்துவமனைகள்:தனியார் மருத்துவமனையை நாடும் பொதுமக்கள்

First Published : 14 July 2016 04:16 AM IST

கூடலூர், பந்தலூ தாலுகா அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்கப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனையை நாடும் நிலைமைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் வட்டங்களில் பெரும்பான்மையாக தோட்டத் தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள், ஆதிவாசிகள் என சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் மருத்துவ உதவி பெற கூடலூர் பந்தலூர் பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகள், நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையம், அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, கப்பாலா, ஓவேலி, ஸ்ரீமதுரை, உப்பட்டி, மசினகுடி ஆகிய பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையம், கூடலூர், பந்தலூர் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களின் பரிசோதனைக்காக ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
ஆனால், தற்போது ஸ்கேன் எடுக்கும் பயிற்சிப் பெற்ற மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். இதனால், பந்தலூர் அரசு மருத்துவமனை, நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையத்தில் ஸ்கேன் எடுக்கப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாததால் அங்கு ஸ்கேன் எடுப்பதில்லை. இதனால், அப்பகுதியிலுள்ள கர்ப்பிணிப் பெண்கள் கூடலூரில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.500 முதல் ரூ.750 செலுத்தி ஸ்கேன் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஏழை மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்கப் பயிற்சி பெற்ற மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பாதுகாப்பு இல்லாமல் விற்கப்படும் மீன்களை கணிக்கணிக்க வேண்டும்

பெறுனர்

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நீலகிரி மாவட்டம்.

மாவட்ட உணவு பாதுகாப்பு தர நிர்ணய அலுவலர்,
உதகை மண்டலம்.


அய்யா அவர்களுக்கு வணக்கம்
நீலகிரி மாவட்டத்தில் சுகாதார   பாதுகாப்பு  இல்லாமல்  விற்கப்படும்  மீன்களை  கணிக்கணிக்க  சுகாதாரத்துறை  அதிகாரிகள்  நடவடிக்கை  எடுக்கவேண்டுமென  கேட்டுக்கொள்கின்றோம்.
       அதிக  சுவைக்காகவும், அதிக  லாபத்திற்காகவும்  உணவு  பொருட்களில்  கலப்படங்கள்  சேர்ப்பது  முழுமையாக  கட்டுபடுத்த  முடியாத  நிலையே மாவட்டத்தில்  காணப்படுகிறது. உணவு    பாதுகாப்பு  துறை  அதிகாரிகள்   நடத்தப்படும்  சோதனைகள்  மேற்கொள்ளும்  நடவடிக்கைகள்  குறிப்பிட்ட  அளவில் பலன்  தராத  நிலையே  காணப்படுகிறது.  
பாக்கெட்  பொருட்களில்  உற்பத்தி  நாட்கள்  பார்த்து  நடவடிக்கை  எடுக்கும்  அதிகாரிகள்  அனைத்து  உணவு  பொருட்களும்  பாதுகாப்பாக விற்கப்படுகிறதா  என்ற  முறையான  கண்காணிப்பு  தேவை.
இதுபோன்று   மாவட்டத்தில்   மீன்   விற்பனைக்கு  எந்தவித  கண்காணிப்பும்  அதிகாரிகள்  மேற்கொள்வதில்லை  என்ற  குற்றச்சாட்டு  பரவலாக  உள்ளது.
மாவட்ட    மக்கள்  விரும்பி சாப்பிடும்  உணவு  வகைகளில்  ஒன்றாக  மீன்  உள்ளது. சத்தான  மீன்  உணவு  கலப்படம்  சேர்க்கப்பட்டால்  உடம்பிற்கு  மிகுந்த  ஆபத்தையும்  உருவாக்கும். சாதாரணமாக  மாவட்டத்தில்  மீன்  வியாபாரத்தை  கூடுதலாக  அதிகாரிகள்  கண்காணிப்பதில்லை. இதனால்  மீன்  அதிக  நாட்கள்  கெட்டுப்போகாமல்  பாதுகாக்க  ரசாயன  பொருட்களை  கலக்கும்    அவலம்  அதிகரித்து  வருகிறது.
முன்  காலங்களில்   ஒருநாள்   விற்பனையில்  மீதிவரும்  விற்கப்படாத  மீன்களை  அழித்துவிடும்  பழக்கத்தை  மீன்  வியாபாரிகள்  கடைபிடித்து  வந்தனர்.  ஆனால்  தற்போது  மீதிவரும்  மீன்களை  அமோனியா  கலக்கப்பட்டு  பாதுகாத்து  பல  நாட்கள்  விற்கப்படுகிறது.
கேரளாவில் மீதமான மீன்கள் மாலை நேரங்களில் வாகணங்கள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறி கூவி கூவி விற்கின்றனர்.  பண்டிகை கலங்களில் விற்பனை  செய்ய  மொத்த  வியாபாரிகள்  முன்கூட்டியே  இம்முறையில்  மீன்கள்  அதிக  அளவில்  பாதுகாத்து  வைக்கின்றனர். சிலர்  அமோனியா  தூளும்,  மாற்றுச் சிலர்  அமோனியா  கலக்கப்பட்ட  தண்ணீரை  ஐஸ்  கட்டைகளாக  மாற்றப்பட்டு  மீன்களை  பாதுகாக்கின்றனர்.
நம்  அண்டை  மாநிலத்தில்  இடையிடையே  சோதனைகள்  நடத்தப்பட்டு  இதுபோன்ற  மீன்கள்  அழிக்கப்படுகின்றன. ஆனால்  நம்  மாவட்டத்தில்  உணவு  பாதுகாப்பு  அதிகாரிகளோ, சுகாதார  துறையினரே  அவலத்தை  கண்டு கொள்வதில்லை.
இதனால்  சுகாதாரமற்ற  மீன்களை  சாப்பிடும்  பொதுமக்களுக்கு  நோய்கள்  உருவாகிறது. மிகவும்  ஆபத்தான  நிலைக்கு  நிலைமை  மாறிவரும்  உண்மையை  உணர்ந்து  சம்பந்தப்பட்ட  அதிகாரிகள்  நடவடிக்கை  எடுக்கவேண்டும். 
மழைக்காலம்  தொடரும்  நிலையில்  உணவு  பொருட்களில்  கலப்படம்  கூடுதல்  பாதிப்புகளை  ஏற்படுத்தும்  ஆகவே  சம்பந்தப்பட்ட  அதிகாரிகள்  தகுந்த  நடவடிக்கை  எடுக்க  முன்வரவேண்டும்  என  பொதுமக்கள்  கோரிக்கை  வைக்கின்றனர்.
மாவட்ட  நிர்வாகம்  மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரும் உரிய ஆய்வுகள் மற்றும்  கண்காணிப்பிற்கும்  முன்வர வேண்டும்.  

S. Sivasubramaniam  President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.
94 88 520 800 - 94 88 315 600  94 88 315 600   -  944 29 740 75  -
Facebook:   http://facebook.com/cchepnilgirisகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பழங்களில்

மாம்பழம்
மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். வைட்டமின் ‘ஏ’ குறைவால் பார்வைக்கோளாறு, மலைக்கண் நோய் ஏற்படும். இப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ 2743 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருட்களும் உள்ளன.
ஆரஞ்சுப்பழம்
ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ‘ஏ’ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.
பப்பாளிப்பழம்
பப்பாளிப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ 666 மைக்ரோகிராம் உள்ளது. மேலும் வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம்.
நெல்லிக்கனி
நெல்லிக்கனியில் வைட்டமின் ‘சி’ 600 மில்லி கிராம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களுடன் வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’ சிறிதளவு உள்ளன. எனவே இந்த நெல்லிக்கணி உடலுக்கு உரம் தரும், பசியைத் தூண்டும், சிறுநீரைப் பெருக்கும். வைட்டமின் ‘சி’ குறைவினால் ஈறுகளில் ரத்தக்கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘சி’ 212 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின்கள் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும், பற்களுக்கு நல்ல உறுதி தரும்.
சாத்துக்குடி
சாத்துக்குடியில் வைட்டமின் ‘சி’ 45 மில்லிகிராம் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. வைட்டமின் ‘சி’ குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும்.
Siragu fruits2எலுமிச்சை
எலுமிச்சையில் கால்சியம் 70 மில்லிகிராம், வைட்டமின் ‘சி’ 39 மில்லிகிராம், இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும், வைட்டமின் ‘பி’ சிறிதளவும் உள்ளன. அசீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும், கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.
கறுப்பு திராட்சை
கறுப்பு திராட்சையில் வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. இப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
பச்சை திராட்சை
பச்சை திராட்சையில் வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்கள் உள்ளன. அதோடு நார்ச்சத்து 2.9 கிராம் உள்ளது. இப்பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும், நாக்கு வறட்சி நீங்கும்.
பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து 7.3 மில்லிகிராம், கால்சியம் 120 மில்லிகிராம், பாஸ்பரஸ் 50 மில்லிகிராம் மற்றும் வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ சிறிதளவு உள்ளன. ரத்தக்சோகையைப் போக்கும்.
சப்போட்டா
சப்போட்டாவில் மாவுச்சத்து, 21.4 கிராம், இரும்புச்சத்து 2 மில்லிகிராம் உள்ளது. வைட்டமின் ‘ஏ’, ‘பி’ மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. இப்பழத்தை சாப்பிடுவதால் ரத்தசோகையைப் போக்கலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் (116 கலோரிகள்) அதிகமாக உள்ளது. தவிர வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ உள்ளன. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் இதில் உள்ளன. வாழைப்பழங்களில் பூவன் பழம் மலச்சிக்கலைப் போக்கவல்லது, நேந்திரன் பழம் ரத்தசோகையைப் போக்கும், மலைவாழைப்பழம் ரத்த விருத்தி செய்யும்.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும், பற்களின் உறுதித் தன்மைக்கும் இப்பழம் உதவும்.
தர்பூசணி
தர்பூசணியில் இரும்புச்சத்து 7.9 கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன. நீர்ச்சுருக்கைப் போக்கும், கோடையில் தாகத்தை தணிக்கும்.
புளி
புளியில் இரும்பு 17 மில்லிகிராம், கால்சியம் 170 மில்லிகிராம், பாஸ்பரஸ் 110 மில்லிகிராம் மற்றும் வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச்சத்து குறைவினால் ரத்தசோகை ஏற்படும்.
சீத்தாப்பழம்
சீத்தாப்பழத்தில் பொட்டாசியம் 340 மில்லிகிராம், நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளது. இது தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் வைட்டமின்கள் ‘பி’, ‘சி’ -யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச்சிக்கல் ஏற்படும், பொட்டாசியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும். மேற்கண்ட நோய்கலைத் தீர்க்கும் இப்பழம்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ உள்ளன. நார்ச்சத்து 0.5 கிராம், கால்சியம் 20 மில்லிகிராம், மாவுப்பொருள் 10.8 கிராம் உள்ளது. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
மாதுளம்பழம்
மாதுளம்பழத்தில் பாஸ்பரஸ் 70 மில்லிகிராம் உள்ளது. கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும், வைட்டமின்கள் ‘பி’, ‘சி’ சிறிதளவும் உள்ளது. கால்சியம் உடலில் சேர்வதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது. ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஸ்கேன் பயிற்சி பெற்ற மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என கேட்டல் சார்பாக.

பெறுனர்
மான்புமிகு தமிழக முதல்வா் அம்மா அவா்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமை செயலகம், சென்னை.


                பொருள்:  நீலகிரி மாவட்டம், கூடலூா் பந்தலூா்  பகுதிகளில்  அரசு மருத்துவமனைகளில்
     ஸ்கேன் எடுக்க இயலாமல் மக்கள் அவதி  /  ஸ்கேன் பயிற்சி பெற்ற
     மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என கேட்டல் சார்பாக.

மான்புமிகு தமிழக முதல்வா் அம்மா அவர்களுக்கு  பணிவான  வணக்கங்கள்,  

நீலகிரி மாவட்டம் கூடலூா் பந்தலூா் தாலுக்காவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனா்.   இப்பகுதியில் பெரும்பாலும் தோட்ட தொழிலாளா்கள் மற்றும் சிறு குறு விவசாயிகள், அன்றாட கூலி வேலை செய்பவா்கள் ஆதிவாசிகள் என ஏழை எளிய மக்களே அதிகம் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில்  இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ உதவி பெற கூடலூா், பந்தலூா் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் நெலாக்கோட்டை வட்டார சமுதாய சுகாதார நிலையம், அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, கப்பாலா, ஓவேலி, ஸ்ரீமதுரை,  உப்பட்டி, மசினகுடி உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், தேவாலா கூடலூா் நகர சுகாதார மையங்களும், கூடலூா் மருந்தகமும் அரசு மூலம் செயல்படுத்தி வருகின்றது.
இங்கு போதிய மருத்துவா்கள் இல்லாத சூழ்நிலையிலும் இப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளையே அதிகம் நம்பி வருகின்றனா்.  இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்ப்பினி பெண்கள் குழந்தையின் தன்மை குறித்து அறிந்து கொண்டு சிகிச்சை பெற ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்பட்டது.  அதன் பின்னா் நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையம் மற்றும் கூடலூா், பந்தலூா் அரசு மருத்துவமனைகளில் மட்டும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. 
ஆனால் தற்போது ஸ்கேன் எடுக்கும் பயிற்சி பெற்ற மருத்துவா்கள் இடமாற்றம் பெற்று சென்று விட்டதால்  பந்தலூா் அரசு மருத்துவமனை மற்றும் நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையங்களில் ஸ்கேன் எடுக்க பயிற்சி பெற்ற மருத்துவா்கள் இல்லாமல் ஸ்கேன் எடுப்பதில்லை. 
இதனால் இப்பகுதியில் உள்ள கா்ப்பினி பெண்கள் பலா் கூடலூரில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டா்களில் ஸ்கேன் எடுக்க கட்டாய படுத்தபடுவதாக புகார்கள் வருகின்றனா்.  தற்போது தனியார் மருத்துவமனைகளில் ஒரு முறை ஸ்கேன் எடுக்க 500 முதல் 750 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே ஏழை எளிய மக்கள் பெரும்பாண்மையாக வசிக்கும் இப்பகுதியில் ஸ்கேன் எடுக்க பயிற்சி பெற்ற மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகல்                                                                                                                                                                     
                உயர்திரு ஆணையாளர் அவா்கள் உணவுப்பொருள் வழங்கல்
மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு துறை  சென்னை.
உயர்திரு இயக்குனா் அவா்கள் சுகாதார துறை சென்னை                                       
உயர்திரு மாவட்ட ஆட்சியா் அவா்கள்         

 இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம்   தலைவா்  கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

மாபெரும் இரத்த தான முகாம்


கூடலூர் பாரதியார் கலை  அறிவியல் கல்லூரி நட்டு நலப்பணி திட்டம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம். உதகை அரசு மருத்துவ மனை தலைமை இரத்த வங்கி. நெலாக்கோட்டை  சமுதாய சுகாதார நிலையம் மாவட்ட எயிட்ஸ் கட்டுப்பட்டு மையம். இந்திய அரசு நேரு யுவ கேந்திரா  ஆகியன இனைந்து கூடலூர் கல்லூரியில் மாபெரும் இரத்த தான முகாமினை நடத்தின.

அப்துல் கலாம்  அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்திய இந்த முகாமிற்க்கு நெலாக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் ஆலோசகர் காளிமுத்து தேவாலா பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

உதகை தலைமை மருத்துவ மனை மருத்டுவ அலுவலர் நவாஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கல்லூரி நட்டு நலப்பணி திட்ட மாணவர்களிடம் இரத்தம் சேகரித்தனர். 50 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கினார்கள்.  இவை உதகை கூடலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று ஏழை எளிய நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்

முகாமிற்க்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மகேஸ்வரன். சிவசங்கரன். மேரி சுஜி உள்ளிட்ட அலுவலர்கள் செய்து இருந்தனர்.
முகாமில் கூடலூர் வருவாய் ஆய்வாளர் கணிசுந்தரம். நாடுகானி  கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல். சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள மாணவா்களுக்கு அறிவுரை

பந்தலூா்

பந்தலூா் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் மற்றும்
கூடலூா் நுகா்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில்
 அப்துல்கலாம் நினைவு  தின  சிறப்பு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு   பரிசளிப்பும்

கடந்த 2015 - 16 ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பு  பொது தோ்வில்
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு
வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு  பள்ளி தலைமை ஆசிரியா் கண்ணன் தலைமை தாங்கினார்.
கூடலூா் நுகா்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகா் காளிமுத்து,
மகாத்மா காந்தி பொது சேவை மைய ஆலோசகா் செந்தாமரை,
பள்ளி உதவித்தலைமை ஆசிரியா் ஷமிர் உசேன்,
பள்ளி குடிமக்கள் நுகா்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி,
பெற்றோர் ஆசிரியா் கழக தலைவா் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

தேவாலா அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியா் சமுத்திரபாண்டியன் பேசும்போது

அப்துல் கலாம் அவா்களின் கனவு போல மாணவா்கள் உயா்ந்த லட்சியத்தினை உறுதிப்படுத்தி, அந்த லட்சியத்தை நோக்கி  சரியான வழியில் நமது அடிகளை எடுத்து வைக்கவேண்டும்.

 மாணவா்கள் விடா முயற்சியுடன் குறிக்கோளை நோக்கி போராடினால் வெற்றி பெற முடியும்.  
கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டால் நாம் சாதிக்க முடியும்,
தோல்விகளளை கண்டு துவண்டு விட கூடாது என்றார்.

கூடலூா் நுகா்வோர் பாதுகாப்பு மைய தலைவா் சிவசுப்பிரமணியம் பேசும் போது
மாணவா்கள் பள்ளி படிப்போடு மட்டும் இல்லாமல் பொது அறிவை மேம்படுத்தும் விதமாக தினசரி செய்தி தாள்கள் மற்றும்
புத்தகங்களை வாசிப்பதை பழக்கமாக கொண்டால் இன்றைய போட்டி நிறைந்த நிலையில் 
பொது தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்றார்.

தொடா்ந்து பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பில்
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவா்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும்
கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்சியில் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் சாதிக், சலிம், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக பள்ளி வரலாற்று ஆசிரியா் சிவகிருஷ்ணன் வரவேற்றார்

முடிவில் பள்ளி உதவித்தலைமை ஆசிரியா் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்