அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 29 ஜூலை, 2016

பழங்களில்

மாம்பழம்
மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். வைட்டமின் ‘ஏ’ குறைவால் பார்வைக்கோளாறு, மலைக்கண் நோய் ஏற்படும். இப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ 2743 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருட்களும் உள்ளன.
ஆரஞ்சுப்பழம்
ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ‘ஏ’ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.
பப்பாளிப்பழம்
பப்பாளிப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ 666 மைக்ரோகிராம் உள்ளது. மேலும் வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம்.
நெல்லிக்கனி
நெல்லிக்கனியில் வைட்டமின் ‘சி’ 600 மில்லி கிராம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களுடன் வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’ சிறிதளவு உள்ளன. எனவே இந்த நெல்லிக்கணி உடலுக்கு உரம் தரும், பசியைத் தூண்டும், சிறுநீரைப் பெருக்கும். வைட்டமின் ‘சி’ குறைவினால் ஈறுகளில் ரத்தக்கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘சி’ 212 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின்கள் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும், பற்களுக்கு நல்ல உறுதி தரும்.
சாத்துக்குடி
சாத்துக்குடியில் வைட்டமின் ‘சி’ 45 மில்லிகிராம் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. வைட்டமின் ‘சி’ குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும்.
Siragu fruits2எலுமிச்சை
எலுமிச்சையில் கால்சியம் 70 மில்லிகிராம், வைட்டமின் ‘சி’ 39 மில்லிகிராம், இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும், வைட்டமின் ‘பி’ சிறிதளவும் உள்ளன. அசீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும், கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.
கறுப்பு திராட்சை
கறுப்பு திராட்சையில் வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. இப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
பச்சை திராட்சை
பச்சை திராட்சையில் வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்கள் உள்ளன. அதோடு நார்ச்சத்து 2.9 கிராம் உள்ளது. இப்பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும், நாக்கு வறட்சி நீங்கும்.
பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து 7.3 மில்லிகிராம், கால்சியம் 120 மில்லிகிராம், பாஸ்பரஸ் 50 மில்லிகிராம் மற்றும் வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ சிறிதளவு உள்ளன. ரத்தக்சோகையைப் போக்கும்.
சப்போட்டா
சப்போட்டாவில் மாவுச்சத்து, 21.4 கிராம், இரும்புச்சத்து 2 மில்லிகிராம் உள்ளது. வைட்டமின் ‘ஏ’, ‘பி’ மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. இப்பழத்தை சாப்பிடுவதால் ரத்தசோகையைப் போக்கலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் (116 கலோரிகள்) அதிகமாக உள்ளது. தவிர வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ உள்ளன. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் இதில் உள்ளன. வாழைப்பழங்களில் பூவன் பழம் மலச்சிக்கலைப் போக்கவல்லது, நேந்திரன் பழம் ரத்தசோகையைப் போக்கும், மலைவாழைப்பழம் ரத்த விருத்தி செய்யும்.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும், பற்களின் உறுதித் தன்மைக்கும் இப்பழம் உதவும்.
தர்பூசணி
தர்பூசணியில் இரும்புச்சத்து 7.9 கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன. நீர்ச்சுருக்கைப் போக்கும், கோடையில் தாகத்தை தணிக்கும்.
புளி
புளியில் இரும்பு 17 மில்லிகிராம், கால்சியம் 170 மில்லிகிராம், பாஸ்பரஸ் 110 மில்லிகிராம் மற்றும் வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச்சத்து குறைவினால் ரத்தசோகை ஏற்படும்.
சீத்தாப்பழம்
சீத்தாப்பழத்தில் பொட்டாசியம் 340 மில்லிகிராம், நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளது. இது தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் வைட்டமின்கள் ‘பி’, ‘சி’ -யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச்சிக்கல் ஏற்படும், பொட்டாசியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும். மேற்கண்ட நோய்கலைத் தீர்க்கும் இப்பழம்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ உள்ளன. நார்ச்சத்து 0.5 கிராம், கால்சியம் 20 மில்லிகிராம், மாவுப்பொருள் 10.8 கிராம் உள்ளது. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
மாதுளம்பழம்
மாதுளம்பழத்தில் பாஸ்பரஸ் 70 மில்லிகிராம் உள்ளது. கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும், வைட்டமின்கள் ‘பி’, ‘சி’ சிறிதளவும் உள்ளது. கால்சியம் உடலில் சேர்வதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது. ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக