அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 29 ஜூலை, 2016

ஸ்கேன் பயிற்சி பெற்ற மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என கேட்டல் சார்பாக.

பெறுனர்
மான்புமிகு தமிழக முதல்வா் அம்மா அவா்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமை செயலகம், சென்னை.


                பொருள்:  நீலகிரி மாவட்டம், கூடலூா் பந்தலூா்  பகுதிகளில்  அரசு மருத்துவமனைகளில்
     ஸ்கேன் எடுக்க இயலாமல் மக்கள் அவதி  /  ஸ்கேன் பயிற்சி பெற்ற
     மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என கேட்டல் சார்பாக.

மான்புமிகு தமிழக முதல்வா் அம்மா அவர்களுக்கு  பணிவான  வணக்கங்கள்,  

நீலகிரி மாவட்டம் கூடலூா் பந்தலூா் தாலுக்காவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனா்.   இப்பகுதியில் பெரும்பாலும் தோட்ட தொழிலாளா்கள் மற்றும் சிறு குறு விவசாயிகள், அன்றாட கூலி வேலை செய்பவா்கள் ஆதிவாசிகள் என ஏழை எளிய மக்களே அதிகம் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில்  இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ உதவி பெற கூடலூா், பந்தலூா் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் நெலாக்கோட்டை வட்டார சமுதாய சுகாதார நிலையம், அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, கப்பாலா, ஓவேலி, ஸ்ரீமதுரை,  உப்பட்டி, மசினகுடி உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், தேவாலா கூடலூா் நகர சுகாதார மையங்களும், கூடலூா் மருந்தகமும் அரசு மூலம் செயல்படுத்தி வருகின்றது.
இங்கு போதிய மருத்துவா்கள் இல்லாத சூழ்நிலையிலும் இப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளையே அதிகம் நம்பி வருகின்றனா்.  இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்ப்பினி பெண்கள் குழந்தையின் தன்மை குறித்து அறிந்து கொண்டு சிகிச்சை பெற ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்பட்டது.  அதன் பின்னா் நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையம் மற்றும் கூடலூா், பந்தலூா் அரசு மருத்துவமனைகளில் மட்டும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. 
ஆனால் தற்போது ஸ்கேன் எடுக்கும் பயிற்சி பெற்ற மருத்துவா்கள் இடமாற்றம் பெற்று சென்று விட்டதால்  பந்தலூா் அரசு மருத்துவமனை மற்றும் நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையங்களில் ஸ்கேன் எடுக்க பயிற்சி பெற்ற மருத்துவா்கள் இல்லாமல் ஸ்கேன் எடுப்பதில்லை. 
இதனால் இப்பகுதியில் உள்ள கா்ப்பினி பெண்கள் பலா் கூடலூரில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டா்களில் ஸ்கேன் எடுக்க கட்டாய படுத்தபடுவதாக புகார்கள் வருகின்றனா்.  தற்போது தனியார் மருத்துவமனைகளில் ஒரு முறை ஸ்கேன் எடுக்க 500 முதல் 750 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே ஏழை எளிய மக்கள் பெரும்பாண்மையாக வசிக்கும் இப்பகுதியில் ஸ்கேன் எடுக்க பயிற்சி பெற்ற மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகல்                                                                                                                                                                     
                உயர்திரு ஆணையாளர் அவா்கள் உணவுப்பொருள் வழங்கல்
மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு துறை  சென்னை.
உயர்திரு இயக்குனா் அவா்கள் சுகாதார துறை சென்னை                                       
உயர்திரு மாவட்ட ஆட்சியா் அவா்கள்         

 இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம்   தலைவா்  கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக