பந்தலூர்
பகுதியில் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புக்கான மாணவர்
சேர்க்கை நடைப்பெறுகின்றது. பந்தலூர் மற்றும்
கூடலூர் பகுதியில் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும்
பெரும்பாலனவர்கள் பயிற்சி இன்றி தேர்வுகளில் வெற்றி பெறுவதில்லை. போட்டி தேர்வுகளில் பங்கேற்ற முறையான பயிற்சி மற்றும்
தொடர்முயற்சியும் மட்டுமே வெற்றியை கொடுக்கும்.
இதனை கருத்தில் கொண்டுகூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,
கூடலூர் காசிகா டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன
இணைந்து பந்தலூர் பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள்
மற்றும் சிறு குறு விவசாயிகளின் பிள்ளைகள் அரசு பணிகளில் சேர தேவையான வழிகாட்டல்கள்
மற்றும் பயிற்சியினை பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. பந்தலூர் புனித சேவியர் பெண்கள் பள்ளி மற்றும்
கூடலூர் காசிகா பயிற்சி மையங்களில் நடைப்பெறும் பயிற்சிகளில் தற்போது தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்
1 மற்றும் விரைவில் அறிவிக்க உள்ள அரசு பணியாளர்கள் போட்டி தேர்வுக்கான பயிற்சிகள்
தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
பத்தாம்
வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் கூடுதலாக இந்த பயிற்சியினை பெறலாம் கூடலூரில்
தினசரி பயிற்சி நடத்தப்படுகின்றது. பந்தலூரில்
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை பயிற்சி நடத்தப்படுகின்றது. மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாதிரி போட்டி தேர்வும் நடத்தப்படும். இப்பயிற்சியில் ஏற்கனவே
பயிற்சி பெறுபவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறலாம் பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பவர்கள்,
படித்துவிட்டு தனியார் துறைகளில் பணியில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம் புதிதாக பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பயிற்சி மையங்களை அனுகி பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் மேலும் விவரங்களுக்கு கூடலூர் பயிற்சி மைய பயிற்றுனர்
சுரேஸ்குமார் 9894006772 பந்தலூர் பயிற்சி
மையத்திற்கு 9488520800, 9489586999, 9489874075 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக