அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 12 மார்ச், 2011

District Collectors

District Collectors
Ariyalur District

   Thiru T K Ponnusamy IAS
   District Collector
   Collectorate & Multi Departmental Complex,
   Jayankondam Road, Ariyalur - 621704

   Phone: 04329 - 223351 (O)
              04329 - 223331 (R)
            
   Fax:     04329 - 223351
   E-Mail: collrari@nic.in

District Map

   Tmt V Shobana IAS
   District Collector
   Collectorate
   62, Rajaji Salai, Chennai - 600 001

   Phone: 044-25228025 (O)
                           
   Fax:     044-25228025
   E-Mail: collrchn@nic.in

District Map

   Dr P Umanath IAS
   District Collector
   Collectorate, Coimbatore - 641 018

   Phone: 0422-2301320 (O)
              0422-2222230, 2222630 (R)
   Fax:    0422-2222630
   E-Mail: collrcbe@nic.in

District Map

  
 Thiru P. Seetharaman IAS
   District Collector
   Collectorate, Cuddalore - 607 001

   Phone: 04142-230999 (O)
              04142-230666 (R)
              
   Fax:     04142-230555
   E-Mail: collrcud@nic.in

District Map

   Dr R Anandakumar IAS

    District Collector
    Collectorate, Dharmapuri - 636 705

   Phone: 04342 - 230500 (O)
              04342 - 232800 (R)
   Fax:    04342 - 230886 (O), 232300 (R)
   E-Mail: collrdpi@nic.in

District Map

  Thiru M Vallalar IAS
   District Collector
   Collectorate, Dindigul - 624 004

   Phone: 0451-2461199, 2460080 (O)
              0451-2432133 (R)
   Fax:     0451- 2432600
   E-Mail: collrdgl@nic.in

District Map
  Thiru T Soundiah   IAS
  
District Collector
   Collectorate, Erode - 638 011

   Phone: 0424-2266700, 2260207-11 (O)
24729494  (R)
   Fax:     0424-2261444
   E-Mail: collrerd@nic.in

District Map

 
Thiru Ashish Chatterjee IAS
   District Collector
   Collectorate, Kancheepuram - 631 501

   Phone: 044-27237433 (O)
              044-27238478 (R)
   Fax:     044-27237789,  27238477
   E-Mail: collrkpm@nic.in
              

            
District Map

   Thiru Rajendra Ratnoo IAS
   District Collector
   Collectorate, Kanniyakumari District,
   Nagercoil - 629 001

   Phone: 04652-279555 (O)             
   Fax:     04652-260999
   E-Mail: collrkkm@nic.in

District Map

  
Dr. J. Uma Maheswari IAS
   District Collector
   Collectorate, Karur - 639 005

   Phone: 04324-257555 (O)
              04324-255444, 257112 (R)
   Fax:     04324-257800
   E-Mail: collrkar@nic.in

District Map

  
Thiru V Arun Roy IAS
   District Collector
   Collectorate, Krishnagiri

   Phone: 04343 - 239500 (O)
               04343 - 239400 (R)

   Fax:     04343 - 239300 (O)
               04343 - 239100 (R)
   E-Mail: collrkgi@nic.in

District Map

   Thiru C Kamaraj IAS
   District Collector
   Collectorate, Madurai - 625 001

   Phone: 0452-2531110 (O)
              0452-2532290 (R)
   Fax:     0452-2530925
   E-Mail: collrmdu@nic.in

District Map

   Thiru C Munianathan  IAS
   District Collector
   Collectorate, Nagapattinam - 611 003

   Phone: 04365-252700 (O)
              04365-247800 (R)
   Fax:     04365-253086
   E-Mail: collrngp@nic.in
           

District Map

   Tmt S Madumathi IAS
   District Collector
   Collectorate, Namakkal - 637 001

   Phone: 04286-281101 (O)
              04286-280111, 280222 (R)
   Fax:     04286-280888 (R)
              04286-281106 (O)
   E-Mail: collrnmk@nic.in

District Map

  Thiru M Vijayakumar  IAS
   District Collector
   Collectorate, Perambalur - 621 220

   Phone: 04328-225700 (O)
              04328-224200 (R)
   Fax:     04328-224200 (R)
   E-Mail: collrpmb@nic.in

District Map

   Selvi A Suganthi IAS
   District Collector
   Collectorate, Pudukottai - 622 001

   Phone: 04322-221663, 221624-27  (O)
              04322-221690 (R)
   Fax:     04322-221690
   E-Mail: collrpdk@nic.in

District Map

   Thiru T.N Hariharan IAS
   District Collector
   Collectorate, Ramanathapuram - 623 501

   Phone: 04567-231220 (O)
              04567-221349, 220648 (R)
   Fax:     04567-231220
   E-Mail: collrrmd@nic.in

District Map

   Thiru J. Chandrakumar IAS
   District Collector
   Collectorate, Salem - 636 001

   Phone: 0427-2330030 (O)
               0427-2400200 (R)
   Fax:      0427-2400700
   E-Mail: collrslm@nic.in

District Map

 Thiru V Sampath IAS
   District Collector
   Collectorate, Sivaganga - 623 562

   Phone:  04575-241466  (O)
               04575-241455  (R)
   Fax:      04575-241585 (O)
                04575-241581 (R)      
   E-Mail: collrsvg@nic.in

District Map

   
Thiru M S Shanmugam, IAS
   District Collector
   Collectorate, Thanjavur - 613 001

   Phone: 04362-230102 (O)
              04362-230201 (R)
   Fax:     04362-230857  (O)
               04362-230627 (R)
   E-Mail: collrtnj@nic.in

District Map

   Tmt Archana Patnaik IAS
   District Collector
   Collectorate, The Nilgiris District
   Udhagamandalam (Ooty) - 643001

   Phone: 0423-2442344 (O)
               0423-2442233 (R)
   Fax:      0423-2443971
   E-Mail: collrnlg@nic.in

District Map

   Thiru P Muthuveeran IAS
   District Collector
   Collectorate, Theni - 625 531
   Phone: 04546-254732, 254762 (O)
               04546-253626 (R)
   Fax:     04546-251466, 
   E-Mail: collrthn@nic.in

District Map

  Thiru T.P Rajesh IAS
   District Collector
   Collectorate, Thiruvallur - 602 001

   Phone: 044 - 27661600 (O)
              044 - 27662233 (R)
                           
   Fax: 044 - 27661200
   E-Mail: collrtlr@nic.in

District Map

   
 Thiru K. Baskaran IAS
   District Collector
   Collectorate, Thiruvarur - 610 001
   Phone: 04366-223344 (O)
              04366-243242 (R)
   Fax:     04366-221033
   E-Mail: collrtvr@nic.in

District Map

  Thiru C.N Maheswaran IAS
   District Collector
   Collectorate, Thoothukudi - 628 001

   Phone: 0461-2340600 (O)
              0461-2320050 (R)
   Fax:     0461-2340606
   E-Mail: collrtut@nic.in

District Map

   Thiru Mahesan Kasirajan   IAS
   District Collector
   Collectorate, Tiruchirappalli - 620 001
   Phone: 0431-2415358 (O)
               0431-2420181 (R)  
   Fax:      0431-2411929, 2420181
   E-Mail: collrtry@nic.in
District Map

  Thiru M Jayaraman IAS
   District Collector
   Collectorate, Tirunelveli - 627 009

   Phone: 0462-2500828 (O)
               0462-2577655, 2577983 (R)
   Fax:      0462-2500244
   E-Mail: collrtnv@nic.in

Tirupur District

   Thiru C Samayamoorthy IAS
   District Collector
   Cotton Market Building,
   Palladam Road, Tiruppur- 641604

   Phone: 0421-2218811 (O)
              0421-2474722 (R)
   Fax:     0421-2218822 (O)
              0421-2474722 (R) 
   E-Mail: collrtup@nic.in

   
District Map

   Dr. M Rajendran IAS
   District Collector
   Collectorate, Thiruvannamalai - 606 601

   Phone: 04175-233333 (O)
              04175-233366 (R)
   Fax:     04175-232222
   E-Mail: collrtvm@nic.in

District Map

   Thiru
C Rajendran IAS
   District Collector
   Collectorate, Vellore - 632 009

   Phone: 0416-2252345 (O)
               0416-2222000 (R)
   Fax:      0416-2253034 (O)
                0416-2228029 (R) 
   E-Mail: collrvel@nic.in

District Map

   Dr. R. Palaniswamy IAS
   District Collector
   Collectorate, Villupuram - 605 602

   Phone: 04146-222470 (O)
               04146-222480 (R)
   Fax:     04146-222470
   E-Mail: collrvpm@nic.in

District Map

    Dr. V.K. Shanmugam IAS
   District Collector
   Collectorate, Virudhunagar - 626 002

   Phone: 04562-252525 (O)
              04562-252345 (R)
   Fax:     04562-252500
   E-Mail: collrvnr@nic.in

ஜனவரியில், 8 ம் தேதி இன்று ஆம்புலன்ஸ் தினமாக

ஜனவரியில், 8 ம் தேதி இன்று ஆம்புலன்ஸ் தினமாக

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என "மினி மொபைல் ஆஸ்பத்திரி'யாக வலம் வருகிறது.

இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் "இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.



ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் "108' என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப, "108' ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. "108'ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான இந்த ஜனவரியில், 8 ம் தேதியான இன்று ஆம்புலன்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

வியாழன், 10 மார்ச், 2011

"ரத்த தானத்தால் வாழ்நாளில் 100 பேருக்கு உயிர் கொடுக்கலாம்': விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

ஊட்டி : " ரத்த தானம் மூலம் வாழ்நாளில் 100 பேருக்கு உயிர் கொடுக்கலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து லவ்டேல் நீலகிரி மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளியில் உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. 

பள்ளி தாளாளர் ரெமா பத்மநாபன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சேன்டி வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர் அமராவதிராஜன் பேசுகையில், ""இன்றைய நிலையில் உடல் உறுப்பு தானம் மிகவும் அத்தியாவசியமானது. நமது உடலில் பல உறுப்புகளை தானமாக வழங்க முடியும். ஆகவே, சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், கணையம், கண் விழித்திரை (கார்னியா), எலும்பு மஜ்ஜை, தோல் எலும்பு, இதய வால்வுகள், உடல் திசுக்களை தானம் செய்யலாம். உயிருடன் வாழும்போது, பலருக்கு உதவும் வகையில் ரத்ததானம் செய்ய முடியும். 18 வயதுக்கு மேற்பட்டோர், தனது உடலில் உள்ள ரத்தத்தில் 350 மில்லி மட்டும் தானமாக வழங்க முடியும். நமது உடலில் 6.5 லிட்டர் ரத்தம் இருக்க வேண்டும். இதில், 60 சதவீதம் திரவ தன்மை கொண்டது. ஹிமோகுளோபின், சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் ஆகியன நிறைந்துள்ளன. ரத்த தானம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்யலாம். இதனடிப்படையில் வாழ்நாளில் 100 உயிரை காப்பற்ற முடியும். அதுபோலவே கண் தானமும் மிகவும் அவசியமாகிறது. கண் விபத்தினால் பாதிக்கப்படும்போது கார்னியா பகுதியில் ஏற்படும் பாதிப்பை கண் தானம் பெறுவதன் மூலம் சரி செய்ய முடியும். இரு உறவினர்கள் ஒப்புதலோடு கண் தானம் செய்ய உறுதிமொழி எடுத்து கொண்டு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கண்தானம், உடல்தானம், ரத்த தானம் குறித்து எல்லா நிலை மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்,'' என்றார்.


மக்கள் சட்ட மைய நிறுவனர் வக்கீல் விஜயன் பேசுகையில்,"" சமீபத்தில் இதயேந்திரனின் இதய தானம் நிகழ்வு மூலம், உடல் உறுப்பு தானம் பரவலாகியது. அதுபோல நாமும் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும். இந்த தானத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் நேரிலோ, அமைப்புகள் வாயிலாகவோ வழங்கலாம்,''என்றார். 

 ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்த்தன், 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு-மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

திங்கள், 7 மார்ச், 2011

தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக

மாணவன் இதயேந்திரன் தானமாக வழங்கிய இதயம், ஓராண்டில் தனது துடிப்பை நிறுத்திக்கொண்டபோதும், தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருவது அதிகரித்துள்ளது. மனித உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது தொடர்பாக மத்திய அரசு, 1994ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இச்சட்டத்திற்கு 1994ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அப்போதைய ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இச்சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தால், இரு நபர்கள் முன்னிலையில் எழுதித்தர வேண்டும். அந்த இரு நபர்களில் ஒருவர், உறவினராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டோரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க, பெற்றோர் அனுமதி வழங்க வேண்டும்.


உடல் உறுப்பு தானத்தை வர்த்தகமயமாக்குவதைத் தடுக்கவும், சட்டத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒருவரது உடல் உறுப்புகளை அனுமதியின்றி அகற்றுபவர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. 2007ம் ஆண்டு தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசும் கடும் நடவடிக்கைகளை எடுத்தது. உறுப்புகளை தானமாக வழங்க முன்வருபவர்களுக்கு, டி.பி., போன்ற தொற்றுநோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் இருக்கக் கூடாது. தானமாக வழங்கப்படும் உறுப்புகளை எடுக்கும்போது, டாக்டர்கள் இது குறித்து கவனமாக பரிசோதனை நடத்துகின்றனர். ரத்த வகை, உடல் உறுப்பின் அளவு ஆகியவற்றை பொறுத்து, ஒருவரது உடல் உறுப்புகள், மற்றொருவருக்கு பொருத்தப்படுகின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்நாட்டில் உடல் உறுப்பு தானம் மிகவும் குறைவாக உள்ளது. 10 லட்சம் மக்கள் தொகையை அடிப்படையாக கொள்ளும்போது, ஸ்பெயினில் 32 பேர், அமெரிக்காவில் 21 பேர், போர்ச்சுக்கலில் 17 பேர், போலந்தில் ஆறு பேர், தாய்லாந்தில் ஒருவர் உடல் உறுப்பை தானமாக வழங்குகின்றனர். ஆனால் நம் நாட்டில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 0.05 பேர் மட்டுமே தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருகின்றனர். தேசிய சராசரியை விட அதிகமாக, தமிழகத்தில் 10 லட்சம் பேரில் 0.8 சதவீதம் பேர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருகின்றனர்.


சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன், புஷ்பாஞ்சலியின் மகன் இதயேந்திரன் (17) சாலை விபத்தில் சிக்கினான். டாக்டர்கள், இதயேந்திரனின் மூளை செயலிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவனது பெற்றோர், இதயேந்திரனின் இதயம், கண்கள், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இதற்காக இதயேந்திரனின் தாயார் புஷ்பாஞ்சலிக்கு தமிழக அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தது. இதயேந்திரன் பெற்றோரின் தியாகத்துக்குப் பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்தது. துணை முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இதயேந்திரனின் இதயத்தை தானமாக பெற்ற ஒன்பது வயது மாணவி, நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். மாணவன் இதயேந்திரன் தானமாக வழங்கிய இதயம் ஓராண்டில் தனது துடிப்பை நிறுத்திக் கொண்ட போதும், தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருவது அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் 2008ம் ஆண்டு அக்டோபர் முதல் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, 120 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 76 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள், 31 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், 13 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் அடங்கும். தமிழகத்தில் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு மட்டுமே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள, ஆறு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள 48 மருத்துவமனைகளுக்கும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஐந்து மருத்துவமனைகளுக்கும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இரு மருத்துவமனைகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் தானமாக தேவைப்படும் நோயாளிகள் விவரங்கள், இணையதளம் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. உடல் உறுப்புகள் தானமாக கிடைக்கும் போது, பதிவு மூப்பு அடிப்படையில், அவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.


மாநிலம் முழுவதும் தானமாக வழங்கப்படும் உடல் உறுப்புகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், சென்னை பொது மருத்துவம�னையில் உள்ள உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்ட மையத்தில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அமலேர்பவநாதன் கூறுகையில், ""மாணவன் இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதன்பிறகு, பலரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்,'' என்றார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமச்சந்திரா புரத்தில் வசிக்கும் தொழிலதிபர் சேகரின் மகள் அபிராமி(9). இவருக்கு, கடந்தாண்டு செப்டம்பர் 23ல், சென்னை முகப்பேரில் உள்ள, "பிராண்டியர் லைப் லைன்' மருத்துவமனையில், இதயேந்திரனின் இதயம் பொருத்தப்பட்டது. டாக்டர் செரியன் தலைமையிலான டாக்டர்கள், 45 நிமிடம் போராடி, சிறுமி அபிராமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் சிறுமிக்கு இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. தொடர் கண்காணிப்புக்குப் பிறகு சிறுமி அபிராமி, மீண்டும் சுட்டிக் குழந்தையாக இவ்வுலகை வலம் வந்தாள். இச்சம்பவத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பன்மடங்கு பெருகியது.


கடந்த மாதம் வரை பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த அபிராமிக்கு, 10 நாட்களுக்கு முன், பழைய முறையிலான நோய் அறிகுறிகள் தென்பட்டன. உடனே, சென்னைக்கு வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு பகலாக டாக்டர்கள் அவளைக் கண்காணித்து வந்தனர். ஆனால், பொருத்தப்பட்ட இதயம் ஒத்துழைக்காததால், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி அபிராமி இறந்து போனாள். இடைவிடாத முயற்சியினால், அபிராமியின் உயிரை மீட்டெடுத்த அவளது பெற்றோருக்கு அவளது மரணம், பேரிடியாக இருந்தது. அதையும் அவர்கள் தாங்கிக்கொண்டு, கண்ணீரோடு, அபிராமியின் கண்களை எழும்பூர் கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தனர். அன்று நள்ளிரவே அவளது உடலை பெங்களூரு கொண்டு சென்றனர். இறந்தும் கண்களை தானமாக விட்டுச் சென்ற அபிராமி, மீண்டும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுவிட்டாள். ஆனால், அவளின் திடீர் மரணமோ, இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட டாக்டர்கள் மற்றும் உறுப்பு தான விழிப்புணர்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.


உறுப்பு தானத்தை இயக்கமாக மாற்றிய இதயேந்திரன்: மாணவன் இதயேந்திரன் தானமாக வழங்கிய இதயம், ஓராண்டில் தனது துடிப்பை நிறுத்திக்கொண்டபோதும், தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருவது அதிகரித்துள்ளது. மனித உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது தொடர்பாக மத்திய அரசு, 1994ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இச்சட்டத்திற்கு 1994ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அப்போதைய ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இச்சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தால், இரு நபர்கள் முன்னிலையில் எழுதித்தர வேண்டும். அந்த இரு நபர்களில் ஒருவர், உறவினராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டோரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க, பெற்றோர் அனுமதி வழங்க வேண்டும்.


உடல் உறுப்பு தானத்தை வர்த்தகமயமாக்குவதைத் தடுக்கவும், சட்டத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒருவரது உடல் உறுப்புகளை அனுமதியின்றி அகற்றுபவர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. 2007ம் ஆண்டு தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசும் கடும் நடவடிக்கைகளை எடுத்தது. உறுப்புகளை தானமாக வழங்க முன்வருபவர்களுக்கு, டி.பி., போன்ற தொற்றுநோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் இருக்கக் கூடாது. தானமாக வழங்கப்படும் உறுப்புகளை எடுக்கும்போது, டாக்டர்கள் இது குறித்து கவனமாக பரிசோதனை நடத்துகின்றனர். ரத்த வகை, உடல் உறுப்பின் அளவு ஆகியவற்றை பொறுத்து, ஒருவரது உடல் உறுப்புகள், மற்றொருவருக்கு பொருத்தப்படுகின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்நாட்டில் உடல் உறுப்பு தானம் மிகவும் குறைவாக உள்ளது. 10 லட்சம் மக்கள் தொகையை அடிப்படையாக கொள்ளும்போது, ஸ்பெயினில் 32 பேர், அமெரிக்காவில் 21 பேர், போர்ச்சுக்கலில் 17 பேர், போலந்தில் ஆறு பேர், தாய்லாந்தில் ஒருவர் உடல் உறுப்பை தானமாக வழங்குகின்றனர். ஆனால் நம் நாட்டில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 0.05 பேர் மட்டுமே தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருகின்றனர். தேசிய சராசரியை விட அதிகமாக, தமிழகத்தில் 10 லட்சம் பேரில் 0.8 சதவீதம் பேர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருகின்றனர்.


சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன், புஷ்பாஞ்சலியின் மகன் இதயேந்திரன் (17) சாலை விபத்தில் சிக்கினான். டாக்டர்கள், இதயேந்திரனின் மூளை செயலிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவனது பெற்றோர், இதயேந்திரனின் இதயம், கண்கள், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இதற்காக இதயேந்திரனின் தாயார் புஷ்பாஞ்சலிக்கு தமிழக அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தது. இதயேந்திரன் பெற்றோரின் தியாகத்துக்குப் பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்தது. துணை முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இதயேந்திரனின் இதயத்தை தானமாக பெற்ற ஒன்பது வயது மாணவி, நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். மாணவன் இதயேந்திரன் தானமாக வழங்கிய இதயம் ஓராண்டில் தனது துடிப்பை நிறுத்திக் கொண்ட போதும், தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருவது அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் 2008ம் ஆண்டு அக்டோபர் முதல் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, 120 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 76 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள், 31 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், 13 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் அடங்கும். தமிழகத்தில் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு மட்டுமே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள, ஆறு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள 48 மருத்துவமனைகளுக்கும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஐந்து மருத்துவமனைகளுக்கும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இரு மருத்துவமனைகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் தானமாக தேவைப்படும் நோயாளிகள் விவரங்கள், இணையதளம் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. உடல் உறுப்புகள் தானமாக கிடைக்கும் போது, பதிவு மூப்பு அடிப்படையில், அவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.


மாநிலம் முழுவதும் தானமாக வழங்கப்படும் உடல் உறுப்புகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், சென்னை பொது மருத்துவம�னையில் உள்ள உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்ட மையத்தில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அமலேர்பவநாதன் கூறுகையில், ""மாணவன் இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதன்பிறகு, பலரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்,'' என்றார்.


மாற்று இதயம் நீண்ட கால தீர்வா? நம் வாழ்நாளில் சராசரியாக 250 கோடி முறை இதயம் துடிக்கிறது. ஒருவர் உடலிலிருந்து இதயம் எடுக்கப்பட்டுவிட்டால், அது 4 - 6 மணி நேரத்துக்குள் இன்னொருவருக்கு பொருத்திவிட வேண்டும். இது ஆபரேஷன் நடக்கும் நேரத்தையும் உள்ளடக்கியது. கடந்த ஆண்டு செப்., 23ல் இதயேந்திரன் இதயம், பெங்களூருவைச் சேர்ந்த சிறுமி அபிராமிக்குப் பொருத்தப்பட்டது. இச்சிறுமி ஓர் ஆண்டுக்குள் உயிரிழந்துவிட்டார். பொதுவாக, முதல் ஐந்து ஆண்டுகளில், மாற்று இதயம் பெற்றவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துவிடுகின்றனர். மாற்று இதயம் பெற்றவர்களில் 81 சதவீதம் பேர் ஓர் ஆண்டும், 75 சதவீதம் பேர் மூன்று ஆண்டும், 68 சதவீதம் பேர் ஐந்து ஆண்டு வரையும் உயிர் வாழ்கின்றனர். 10 ஆண்டுகளுக்குள் 50 சதவீதம் மரணமடைந்துவிடுகின்றனர்.


இதயம் தொடர்பான நோய்களே, மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. 1978ல் மாற்று இதயம் பெற்ற டோனி ஹியூஸ்மென் என்பவர், 31 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்து 2009 ஆகஸ்ட் 10ல் உயிரிழந்தார். 1967ல் தான் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்ரிக்காவில் நடந்தது. 1994ல் இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்தியாவில் ஆண்டுதோறும் 4 - 5 ஆயிரம் பேருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 1994ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை 43 பேருக்குத் தான் இதயம் மாற்றப்பட்டது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2,000 இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகின்றன. உலகம் முழுவதும் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 3,000 ஆக உள்ளது

உட‌ல் உறு‌ப்பு தான‌ம்: ‌வி‌திமுறை தள‌ர்வு

விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி மூளை‌ச்சாவு ஏ‌ற்படுபவ‌ர்களது உட‌ல் உறு‌ப்புகளை தான‌‌ம் செ‌ய்ய அவ‌ர்களது உற‌வின‌ர்க‌ள் மு‌ன் வருவது த‌ற்போது அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. எ‌னினு‌ம், உறு‌ப்புகளை உ‌ரிய நேர‌த்‌தி‌ல் பய‌ன்படு‌த்த இயலாம‌ல் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் ச‌ட்ட‌ நடவடி‌க்கைக‌ள் ஏராளமாக உ‌ள்ளன.
எனவே, உட‌ல் உறு‌ப்பு தான‌த்து‌க்கு உ‌ள்ள ச‌ட்ட நடவடி‌க்கைகளை த‌ள‌ர்‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ஏராளமானோ‌ர் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர். இதையடு‌த்து உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் கொடு‌ப்ப‌தி‌ல் உ‌ள்ள மரு‌த்துவ‌‌ம் சா‌ர்‌ந்த ச‌ட்ட நடவடி‌க்கைக‌ளி‌ல் நடைமுறைகளை தள‌ர்‌த்‌‌தி, சுகாதார‌ம் ம‌ற்று‌ம் குடு‌ம்ப நல‌த்துறை உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளது.
த‌மிழக‌த்‌தி‌ல் சாலை ‌விப‌த்துக‌ளி‌ல் உ‌யி‌ரிழ‌ப்போ‌ர் ஏராள‌ம். இ‌தி‌ல் தலை‌யி‌ல் அடிப‌ட்டு அதனா‌ல் மூளை‌ச்சா‌வு ஏ‌ற்ப‌டுபவ‌ர்களு‌ம் ஏராள‌ம். மூளை‌ச் சாவு எ‌ன்பது, உட‌ல் உறு‌ப்புக‌ள் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌‌க்க, அவ‌ர்களது மூளை செய‌லிழ‌ந்து, உ‌யி‌ர் வாழ வா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்ற ‌நிலை‌யி‌ல், அவ‌ர்களது உற‌வின‌ர்க‌ள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ரி‌ன் உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் செ‌ய்ய மு‌ன் வரு‌கி‌ன்றன‌ர்.
ஆனா‌ல் உட‌ல் உறு‌ப்புகளை தா‌ன‌ம் செ‌ய்வது என‌்று உற‌வின‌ர்க‌ள் முடிவெடு‌த்து ‌வி‌ட்டா‌ல் ம‌ட்டு‌ம் போதாது. அத‌ற்கென ‌சில மரு‌த்துவ ம‌ற்று‌ம் ச‌ட்ட நடைமுறைக‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை எ‌ல்லா‌ம் முடி‌ப்பத‌ற்கு‌ள் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டவ‌ரது உட‌ல் உறு‌ப்புக‌ள் ‌வீணா‌கிறது. இதனா‌ல் தானமாக ‌கிடை‌க்க வே‌ண்டிய உட‌ல் உறு‌ப்புக‌ள் பய‌ன்படு‌த்த ‌முடியாத ‌நிலையை அடை‌கிறது.
எனவே, உட‌ல் உறு‌ப்பு தான‌ம் கு‌றி‌த்த ச‌ட்ட நடவடி‌க்கைகளை தள‌ர்‌த்‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள பு‌திய உ‌த்தர‌வி‌ல், மூளை சாவு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்தா‌ல், மரு‌த்துவரே முத‌ல்க‌ட்ட ப‌ரிசோதனை மே‌ற்கொ‌ள்ளலா‌ம். இது உறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ல், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டவ‌ரி‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ரிட‌ம் (மனை‌வி,குழ‌ந்தைக‌ள், பெ‌ற்றோ‌ர் அ‌‌ல்லது சகோதர, சகோத‌ரிக‌ள்) உட‌ல் உறு‌ப்பு தான‌ம் கொடு‌ப்பது தொட‌ர்பான ‌விரு‌ப்ப‌த்தை அ‌றியலா‌ம்.
தான‌ம் கொடு‌க்க ‌விரு‌ம்‌பினா‌ல், அடு‌த்த க‌ட்டமாக ‌விசாரணை நட‌த்து‌ம் காவ‌ல்துறை அ‌திகா‌ரி‌க்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌த்து, உடனடியாக மரு‌த்துவ‌ம் சா‌ர்‌ந்த ச‌ட்ட நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
அவரது புல‌ன் ‌விசாரணை‌க்கு‌ப் ‌பி‌ன்பு, உட‌ல் உறு‌ப்பு தான ச‌ட்ட‌ப்படி மூளை சாவு உறு‌தி செ‌ய்வத‌‌ற்கான 2வது ப‌ரிசோதனை நட‌த்த வே‌ண்டு‌ம். இற‌ப்பு‌க்கானகாரண‌த்‌தி‌ல் ச‌ந்தேக‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல், உடனடியாக ‌விசாரணை அ‌திகா‌ரி, உட‌ல் உறு‌ப்பு தான‌ம் ச‌ெ‌ய்வத‌ற்கான அனும‌தியை வழ‌ங்க வே‌ண்டு‌ம்.
பிரேத ப‌ரிசோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் என ‌விசாரணை அ‌திகா‌ரி கரு‌தினா‌ல், அத‌ற்கான அனும‌தி கடித‌ம், உட‌ல் உறு‌ப்புக‌ளி‌ன் இய‌ங்கு‌நிலை கு‌றி‌த்து மரு‌த்துவ அ‌திகா‌ரி கொடு‌க்கு‌ம் சா‌ன்றை சம‌ர்‌ப்‌பி‌க்க வே‌ண்டு‌ம். அத‌ன் ‌பி‌ன் உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் வழ‌ங்குவத‌ற்கு நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
‌


உடல் உறுப்பு தானம் செய்வதாக 'விபரீதம்': 'துறுதுறு' மகனை 'கூரறுக்க' தயாரான பெற்றோர்



உடல் உறுப்பு தானம் குறித்து தெளிவான வழிமுறைகள் தெரியாமல் பலரும் ஆர்வக்கோளாறு காரணமாக, தவறான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, கோவை கலெக்டர் அலுவலகம் வந்த பெற்றோரால், நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதுவரையிலும் ரத்த தானம், கண் தானம் பற்றியே சமூக அமைப்புகள் அதிகமாக வலியுறுத்தி வந்தன. சென்னையில் விபத்தில் மூளை செயலிழந்த இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பின், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதயேந்திரனுக்குப் பின் சேலம், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மூளை செயல் இழந்த சிலரது உடல் உறுப்புகள், அவர்களது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், இதுபற்றிய தெளிவான வழிமுறைகள், மருத்துவ உண்மை தெரியாமல் பலரும் தவறான முடிவுகளை எடுப்பதாகவும் தெரிய வருகிறது.

இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டபோது, அதற்குக் கிடைத்த அதீத வரவேற்பும், "மீடியா'க்கள் கொடுத்த அதிமுக்கியத்துவமும் பலரையும் ஈர்த்துள்ளது. ஆனால், இதயேந்திரனின் தாய், தந்தை இருவருமே டாக்டர்கள் என்பதையும், அவர்கள் அந்த முடிவை எடுத்ததற்கான சூழல் எத்தகையது என்பதையும் பலரும் மறந்து விடுகின்றனர். தங்களது குடும்பத்திலும் இத்தகைய உடல் உறுப்பு தானம் செய்தால், தங்களது குடும்பத்துக்கும் பெரிய அளவில் புகழ் கிடைக்கும் என்ற தவறான எண்ணமும் பலரது மத்தியில் உருவாகியுள்ளது. இது சிலரை தவறான முடிவு எடுக்கவும் தூண்டி விடுகிறது.

கோவை காரமடையைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ராஜாராம் - கவிதா தம்பதியினர் எடுத்த முடிவும் இத்தகையதே. இவர்களது ஐந்து வயது மகன் நவீன் குமாருக்கு மூளை வளர்ச்சி இல்லை. ஆனால், எப்போதும் "துறுதுறு'வென்று நடமாடிக் கொண்டிருக்கும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறான். குழந்தையாக இருக்கும்போதே இந்த குறைபாடு பற்றி தெரியவில்லை. சில நடவடிக்கைகளைப் பார்த்து மூளை வளர்ச்சி இல்லாததைத் தெரிந்து கொண்டனர். டாக்டரிடம் அழைத்துச் சென்ற போது, "உங்கள் மகனின் மூளையின் எடை குறைவாக உள்ளது; சில காலம் தான் உயிர் வாழ்வான்' என்று கூறியதாகத் தெரிகிறது. இந்த நேரத்தில் தான், இதயேந்திரன் பெற்றோரின், பரந்த இதயம் உலகுக்கு தெரிய வந்தது. உடனே, இவர்களும் அதே பாணியில் நவீன்குமாரின் உடல் உறுப்புகளை இப்போதே தானம் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி பகிரங்க அறிவிப்பு வெளியிட்ட அவர்கள், உடல் உறுப்பு தானம் செய்வதற்கான அனுமதி பெறுவதற்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை கேட்பு முகாமில் மனு கொடுத்தனர். அப்போது குழந்தை நவீன்குமாரையும் அழைத்து வந்தனர். பரிதாபத்துக்குரிய அந்த குழந்தையுடன் அவர்கள் வந்ததை அறிந்த பத்திரிகையாளர்கள், அவர்களைச் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்தனர். அப்போது, குழந்தை நவீன்குமாரின் நிலையை விளக்கி அவர்கள் கண்ணீர் வடித்தனர். அவர்கள் மனு கொடுத்தபோது, கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கில்லை. அவர்கள் வந்த பின், இந்த மனுவைப் பற்றி விசாரித்து அதை வாங்கிப் பார்த்தனர்.

அந்த மனு மீது எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி கலெக்டர் பழனிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கூறுகையில், "இதுபோன்ற தவறான அபிப்பிராயங்களை ஊக்குவிக்கக் கூடாது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை அந்த பெற்றோரால் பார்க்க இயலாத பட்சத்தில், அக்குழந்தையை பராமரிக்க எத்தனையோ இல்லங்கள் இருக்கின்றன. அங்கு சேர்க்கலாம்; இதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். நன்றாக இருக்கும் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய நினைப்பது பெரும் தவறு' என்றனர்.

இதயேந்திரனின் பெற்றோர், டாக்டர்கள் என்ற முறையில் ஒரு நல்ல விஷயத்தை மக்கள் மனங்களில் விதைத்தனர். ஆனால், பல பெற்றோர், மனித நேயத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, அதற்கு "உயிரோடு சமாதி' கட்ட முயற்சிக்கின்றனர் என்பது வேதனை தரும் விஷயம்.

வெள்ளி, 4 மார்ச், 2011

இரத்த தான விழிப்புணர்வு முகம்

இரத்ததானம்  குறித்து சுகாதார ஆய்வாளர் கணையந்திரன்  விளக்கமளித்தார் 
இரத்த தான விழிப்புணர்வு முகம் நடைபெற்றது 

முகாமில்
பங்கேற்பாளர்கள்


மைய தலைவர் சு. சிவசுப்ரமணியம் besumb


108  குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது





மருத்துவர் கதிரவன் பேசினார் 




மருத்துவர் கணேஷன் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்

மருத்துவர் விவேகணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்

மருத்துவர் ரம்யா  பாராட்டு சான்றிதழ் வழங்கினர்














புதன், 2 மார்ச், 2011

கட்டுரைகள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியமாவது எப்போது?

1944-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சார்ஜென்ட் அறிக்கையில் ஆரம்பக் கல்வி பற்றி பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. 3 முதல் 6 வயதுக் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச அடிப்படைக் கல்வி போன்றவை இதன் முக்கிய பரிந்துரைகளில் சிலவாகும்.ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி கிடைப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னர், அதிகப்படியான பள்ளிகள் தொடங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் பெருகியுள்ள நிலையிலும் ஏன் இந்த நிலை என்று சிந்திக்க வேண்டியுள்ளது.நம் நாடு சுதந்திரமடைந்த பின்னர், 1951-ல் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது மொத்த மக்கள்தொகையில் 18.33 சதவீதத்தினர் (ஆண்கள் 27.16 சதவீதம், பெண்கள் 8.86 சதவீதம்) எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். அதன் பின்னர் கல்வியறிவில் இந்தியா முன்னேறினாலும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டவில்லை.2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது, எழுத்தறிவு பெற்றோர் 64 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் எழுத்தறிவு 2001-ல் நகரங்களில் 82 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 66 சதவீதமாகவும் இருந்தது.இது 2004-ல் 73.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி கிடைக்க வேண்டும் என்று 1998-ல் நடந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் 2001 முதல் செயல்படத் தொடங்கியது. இத்திட்டத்தின் பலனை இன்னும் முழுமையான அளவில் எட்டவில்லை என்பதுதான் உண்மை நிலை.இன்று கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரையில் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பள்ளி செல்லும் வசதி இல்லை என்று கூற முடியாத நிலை இருந்தும், பல்வேறு காரணங்களால் முழுமையான இலக்கை எட்ட முடியவில்லை.இந்தியாவில் 42 சதவீத மக்கள்தொகையினர் 18 வயதுக்கு உள்பட்டவர்கள். இது உலகில் உள்ள குழந்தைகளின் மக்கள்தொகையில் 20 சதவீதமாகும். அனைவருக்கும் கல்வித் திட்டம் தொடர்பான யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த அறிக்கையில் இந்தியாவில் ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடிப் பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.இடப் பெயர்வு, கல்வியறிவு பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, பொருளாதாரச் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. இதனால் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும் ஆண்டுதோறும் கல்வியை இடையில் நிறுத்தும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறைவான அளவிலாவது அதிகரித்து வருகிறது.விவசாயத்தை மட்டுமே நம்பியிருப்போர் விவசாயம் பொய்த்துப் போகும் வேளையில் வேலை தேடி அருகில் உள்ள நகரங்கள் அல்லது அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றனர். இவ்வாறு செல்வோர் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்கின்றனர்.இவர்கள் நகரங்களில் கட்டட வேலை மற்றும் குழாய்கள் பதிக்கக் குழிதோண்டுவது போன்ற வேலைகளுக்கே செல்கின்றனர். இருக்க இடமின்றிக் கட்டப்படும் கட்டடங்களையும், சாலையோரங்களையும் மட்டுமே நம்பிச் செல்லும் இவர்கள், அங்கு தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் மனநிலையில் இருப்பதில்லை.மேலும் கிராமங்களில் உள்ளவர்கள், பள்ளி விடுமுறை நாள்களில் தங்களோடு தங்கள் குழந்தைகளையும் குறிப்பிட்ட சில விவசாய வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர். நாளடைவில் வருமானத்தின் மீதான ஆர்வம் காரணமாக பள்ளிக்கு அனுப்பாமல் தொடர்ந்து வேலைக்கு அழைத்துச் செல்லும் நிலை இன்றும் கிராமங்களில் நடந்து வருகிறது.ஒரு கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கையை ஐந்து ஆண்டுகள் கழித்து மாணவ, மாணவியர் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருப்பதைக் காண முடியும். உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்துவிட்டு, ஆறாம் வகுப்புக்கு வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பத் தயக்கம் காட்டுகின்றனர்.இத்தகைய நிலைக்கு ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள்தான் அதிகம் ஆளாகின்றனர். இன்றும் கிராமங்கள், பெருநகரங்களில் பள்ளி செல்லும் வயதில் உள்ள பெண் குழந்தைகள் வேலைக்குச் செல்வதைக் காண முடிகிறது.இந்நிலைக்கு அடித்தட்டு வகுப்பைச் சார்ந்தவர்களும், கிராமங்களில் வசிப்பவர்களுமே ஆளாகின்றனர். இவர்களைப் பொறுத்தமட்டில் பொருளாதாரச் சூழ்நிலை, விழிப்புணர்வு இல்லாத நிலை மட்டுமன்றி இன்றைய கல்வி முறையும் இவர்களைக் கவர்வதாக இல்லை என்பதும் ஒரு காரணமாகும்.இதுபோன்று பல்வேறு காரணங்களால் நிகழும் இடைநிற்றல் தான் ஆரம்பக் கல்விக்கான மிகப்பெரும் சவாலாக உள்ளது. இடைநிற்றலில் மாணவர்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதனாலேயே தேர்வு முடிவுகளில் அதிகப்படியான மாணவிகள் தேர்ச்சி பெறும் நிலையிலும் எழுத்தறிவு பெற்ற ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாகவே உள்ளனர். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இடைநிற்றல் குறைந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கும் பொருட்டு இலவசச் சீருடை, பாடப்புத்தகங்கள், மதிய உணவு என வழங்கியபோதும் இலக்கை எட்ட முடியாத நிலையே இன்னும் தொடர்கிறது. இதற்கு ஒருசாராரை மட்டும் குறை கூறுவதற்கில்லை. ஆசிரியர்களுக்கு அடுத்து கிராம சமூகத்துக்கும் குறிப்பாகப் பெற்றோர்களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு.கிராமப்புறப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் இல்லாத நிலையே உள்ளது. இருக்கின்ற பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அரசியல் கட்சிப் பிரமுகர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் சேர்க்கை மற்றும் அவர்களைத் தக்க வைப்பதில் இலக்கை எட்ட முடிவதில்லை.கல்வி பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன. பள்ளிக்கு வெளியே இருந்தவர்கள் கண்டறியப்பட்டு மீண்டும் அவர்களைப் பள்ளியில் சேர்ப்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை. அவர்கள் தொடர்ந்து கற்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.கிராமப்புறப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகரிக்க உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளை ஈடுபடுத்த வேண்டும். "அனைவருக்கும் கல்வி'த் திட்டத்தில் கிராமக் கல்விக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாலும், அதன் செயல்பாடுகள் என்ன என்பது எவருக்கும் தெரியவில்லை. அதனால் இதுதொடர்பாக உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்கள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசின் கள விளம்பரத் துறை மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக கல்வி பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இவையெல்லாவற்றுக்கும் மேலாக இடம்பெயர்தலைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் ஆரம்பக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முடியாது. அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதும், சமூக அக்கறையுடன் மேற்கொள்வதுமே இதற்கான தீர்வாகும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதுதான் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்பது சாத்தியமான ஒன்றாகும்.அதன் மூலமே "இருண்ட இந்தியா' என்ற நிலையில் இருந்து "ஒளிரும் இந்தியா' என்ற நிலையை அடைய முடியும். இதற்கு ஒருசாரார் மட்டுமன்றி ஒட்டுமொத்தமாக அனைவரது மத்தியிலும் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.கட்டுரையாளர்:அரியலூர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் படிப்பு மையத்தின் இளநிலை உதவியாளர்

சவால்களைச் சமாளித்தாக வேண்டும்!

1967-ம் ஆண்டு முதல் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சியினரே தமிழகத்தை மாறிமாறி ஆட்சி புரிந்து வருகின்றனர். தேசிய கட்சிகளால் இம்மாநிலத்தில் எழுச்சி பெற முடியவில்லை. இவ்விரு கட்சியினருடன் கூட்டணி அமைத்தே பெரும்பாலும் மற்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. அவ்வாறே மக்கள் பிரதிநிதிகளாகவும் அக்கட்சிகளின் பிரமுகர்கள் வலம் வருகின்றனர்.2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் வித்தியாசமானதாகத் தேர்தல் முடிவு இருந்தது. இருப்பினும், கூட்டணிக் கட்சிகள் வெளியிலிருந்து தந்த ஆதரவால், திமுக தனது ஆட்சிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலும் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தல் நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்களோ கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக உள்ளனர். மூன்றாவது அணி அமைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று பேசிவந்த தலைவர்களும், யாரோடு கூட்டணி சேரலாம் என்று யோசிக்கின்றனர்.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்பாடுபட்டாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று திமுகவும், இழந்த ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று அதிமுகவும் கங்கணம் கட்டி செயல்பட்டு வருகின்றன. இதற்காகக் கடந்த சில மாதங்களாகவே லெட்டர் பேடு கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை தங்கள் அணியில் சேர்த்துவிட அவை போராடி வருகின்றன.இவ்விரு கட்சிகளின் அணுகுமுறையைத் தெரிந்துக் கொண்ட மற்ற கட்சித் தலைவர்களும் சுதாரித்துக் கொண்டுள்ளனர்.அவ்விரு கட்சித் தலைமைக்கு விசுவாசமாக தங்களது கட்சிகளில் உள்ள முன்னணித் தலைவர்களை இரு பிரிவாகப் பிரித்து, ஒரே நேரத்தில் இரு கட்சித் தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.மறைமுகமாக நடந்துவந்த பேச்சுவார்த்தையை கடந்த சில நாள்களாக தேர்தல் தொகுதி பங்கீடுக் குழுக்களை அமைத்து அதிகாரப்பூர்வமாகவே தொடங்கி உள்ளனர்.இப்பேச்சுவார்த்தை குறித்து வெளியாகும் செய்திகளைப் பார்க்கும்போது, ஒவ்வொரு கட்சியும் குறைந்தது 5 முதல் 80 தொகுதிகள் வரை கேட்கின்றன.குறிப்பிட்ட சில பகுதிகளில் செல்வாக்கு பெற்று, சில ஆயிரம் வாக்குகள் வைத்துள்ள கட்சிகள்கூட அதிக இடங்களுக்கு ஆசைப்படுகின்றன.இதுமட்டுமன்றி, ஆட்சியில் பங்கு, மாநிலங்களவைத் தேர்தலில் இடம், வரவுள்ள சட்டமேலவைத் தேர்தலில் இடம், வாரியத் தலைவர்கள் வாய்ப்பு உள்ளிட்டவற்றில் இவை பங்கு கேட்கத் தவறுவதில்லை.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 50 முதல் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசமே வெற்றி, தோல்வியைத் தீர்மானித்தன.இதனால், அணியில் கட்சிகளை இழக்க நேரிட்டு அவர்களால் சில தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு பாதித்துவிடக் கூடாது என்று திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் யோசிக்கின்றன. இதனால், அவர்களுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துகின்றனர்.இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தொகுதிகளைக் கூட்டினால், திமுகவோ அல்லது அதிமுகவோ 100-க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடும் நிலையே தென்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தையோ தொடர்ந்து நடக்கிறது.தொகுதி ஒப்பந்தம் போட்ட கட்சிகள்கூட, தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, கூடுதல் தொகுதிகளை கேட்கின்றன. இது பேச்சுவார்த்தையோ அல்லது பேரமோ என்பது தெரியவில்லை.இப்போதைக்கு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எவ்வளவு தொகுதிகள் பெறுவது என்பதை அதன் தலைவர்கள் சிந்திக்கின்றனர்.தொகுதி உடன்பாடு முடிந்தவுடனே கட்சியினரைத் திருப்திப்படுத்தும் வகையில் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியாளர்களைச் சமாளிக்கவும் வேண்டும். பின்னரே தங்களது வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட மக்களைக் கவர (!) வேண்டும். சவால்களைச் சமாளித்தாக வேண்டும்!

கண்ணியமான தேர்தலுக்குக் களப்பணியாற்றுவோம்!


2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம், ஊழல் ராஜாக்களும், ராணிகளும் பெற்ற ஆதாயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்காக அரசு வழங்கும் மானியங்களையும் முடிச்சுப் போட்டுப் பேசுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.
கூட்டணிக்கட்சி அமைச்சரும் கூட்டாளிகளும் வரலாறு காணாத முறைகேடுகளில் ஈடுபட்டாலும், தடுக்க முடியாததற்குக் காரணம் கூட்டணி தர்மம் என்று கூறி திருதராஷ்டிரர் அவதாரம் எடுக்கிறார் அவர். மிக மோசமான நிதி நிர்வாகத்தாலும், அதிக சம்பளச்சுமையாலும், வரலாறு காணாத இலவசப் போலிக்கவர்ச்சி ஜிகினா திட்டங்களாலும், கரைபுரண்டு ஓடும் ஊழல்களாலும், சாராய வருமானத்தையும் மீறி தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்ட நிலையில், எல்லா வகை புதிய திட்டங்களுக்காகவும் வெளிநாட்டு வங்கிகள், உலக வங்கி ஆகியவற்றிடம் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர் அன்பழகனோ, அரசின் தவறுகளை மறைத்துவிட்டு, ""தமிழகம் கடன்களால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது'' என்று ஒரு புரட்டான பொருளாதாரப் பாடம் எடுக்கிறார். தமிழக முதல்வரோ, ""ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்'' என்றுகூறி, தமிழக ஆண்மகனின் ஆடையை உருவிவிட்டு, கோமணத்தைக்கட்டி, கையில் ஒரு திருவோட்டையும் கொடுத்துக் கேவலப்படுத்துகிறார். தடித்த தோலுடனும், நரம்பில்லா நாக்குடனும் வளைய வரும் நம் இன்றைய தலைவர்கள், பொது வாழ்வில் ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்துவதற்கும், மக்களை முட்டாள்களாகக் கருதி மமதையுடன் நடந்து கொள்வதற்கும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சொத்து சேர்த்துக் கொள்வதற்கும் எப்படி முடிகிறது? இவையெல்லாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனக் கூறப்படும் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தை, கட்சியை, நாட்டின் வளங்களைத் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பிடியில் வெளிப்படையாகவே தொடர்ந்து வைத்துக் கொள்ளும் துணிவு, இந்த மக்களாட்சியில் இவர்களுக்கு எப்படிச் சாத்தியப்படுகிறது? வாரிசுகளால், வாரிசுகளுக்காக, வாரிசுகளைக் கொண்டு நடத்தப்படும் ஆட்சிமுறையை ஓட்டு அரசியல் மூலம் இன்றைக்கு எப்படி இவர்களால் சாதிக்க முடிகிறது? சிறிதும் கூச்சமின்றி, மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்று கொண்டே, ஓட்டுகளையும் எப்படிப் பெற முடிகிறது? இவற்றுக்கெல்லாம் காரணம் பெரும்பாலான இந்திய மக்களிடம் ஜனநாயகம் பற்றிய உண்மையான, ஆழமான புரிதலை ஏற்படுத்தவே இல்லை என்பதுதான். நீண்டகாலமாக மன்னர்களின் கீழும், ஜமீன்களின் கீழும், உயர்ஜாதிகளின் கீழும், பின்னர் வெள்ளையர்களின் கீழும், அடிபணிந்து வாழப்பழகியவர்கள் நம் மக்கள். அரசியல் விடுதலை கிடைத்துவிட்டாலும், பிரதிநிதித்துவ அரசியல் தத்துவத்தை அவர்கள் உள்வாங்கிக் கொள்ளவே இல்லை. ஆதலால், அதிகாரம் என்பது மீண்டும் ஆதிக்க சக்திகளிடமே சிறைப்படுவதும், அதிகாரத்துக்கு வருபவர்கள் ஆதிக்க சக்திகளாக மாறுவதுமேதான் நடைமுறையானது. பண்டைய கிரேக்க அறிஞர் சாக்ரடீஸின் சீடரான ப்ளேட்டோ, ""மக்களாட்சி சீருடன் நடைபெற, அதற்கு முயற்சியும், தன்னொழுக்கமும், ஜனநாயகம் பற்றிய பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் மக்களுக்குத் தேவை. இதற்குப் பெரும்பாலான மக்கள் தயாராக இல்லாதபோது, அங்கு ஜனநாயகம் வீழ்ச்சி அடையும்'' என்கிறார். தமிழக அரசால் தொடர்ந்து மிகமோசமாக நிர்வகிக்கப்படும் ஆதிதிராவிடப் பள்ளிகளில் படிக்கும் சராசரி மாணவர், தரமான கல்வி கிடைக்காமல், பாடங்கள் பற்றிய குறைந்த அளவு புரிதல்கூட இல்லாமலேயே, தேர்வில் மட்டும் எப்படித் தேர்ச்சிபெற்று விடுகிறாரோ, அந்த அளவுக்குத்தான் வாக்குச்சாவடியை மக்கள் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், ஜாதியையும், நோட்டையும், பிரியாணியையும், சாராயத்தையும் பயன்படுத்தி மோசமான அரசியல்வாதிகளால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது. தேர்தல் அரசியலை, கிரிக்கெட் சூதாட்டம் போன்று மாற்ற முடிகிறது. அதிலும், தமிழக அரசியல், இன்று உலக அரங்கில் மிகுந்த கேலிக்கு ஆளாகியுள்ளது. பிகாரில்கூட, சிறப்பான முறையில் தேர்தலை நடத்திவிட்டோம். ஆனால், ஏப்ரலில் நடைபெறவிருக்கும் தமிழகத் தேர்தலை நினைத்தால்தான் கதி கலங்குகிறது, இதுதான் தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய கவலையாக இருக்கும் என்றால் மிகையில்லை. ஏற்கெனவே திருமங்கலம் ஃபார்முலா, பென்னாகரம் ஃபார்முலா என்று புதிய இலக்கணங்கள் வகுத்துள்ள தமிழக அரசியல்வாதிகள், இன்னும் என்னவெல்லாம் அஸ்திரங்களை ஏவி, தேர்தல் ஆணையத்தை திக்குமுக்காடச் செய்து, ஓட்டுகளை களவாடி, ஓட்டுகளைப் பொறுக்கி, ஓட்டுகளைப் பிரித்து, அதிகார நாற்காலியைப் பிடித்துக் கொள்வார்களோ என்ற கிலி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாத வெக்கையை அதிகரிக்கும் விதத்தில் ஏசியும் பேசியும், கோடிக்கணக்கான கள்ளப்பணத்தைத் திருட்டுத்தனமாக விநியோகித்தும், ஆயிரக்கணக்கான கிடாய்களைப் பலி கொடுத்து, பிரியாணி விருந்து கொடுத்தும், சாராயத்தை ஆறாக ஓடவிட்டும், பத்தடிக்கு ஒன்று வீதம் ஆபத்தான பிவிசி ஃபிளக்ஸ் விளம்பரப்பதாகைகளால் கண்களைத் துன்புறுத்தி, டையாக்சின் நச்சுக்காற்றைப் பரப்பியும், தேர்தலைப் போர்க்களமாக மாற்றி விடுவார்கள் என்று அஞ்சத் தோன்றுகிறது. பின்தங்கிய மாநிலம் எனப்படும் பிகாரில் தேர்தல் ஆரோக்கியமாக நடந்ததெப்படி? ஏனென்றால், அங்கு நிதீஷ்குமார் எனும் தொலைநோக்குப்பார்வையுள்ள தலைவர் தோன்றி, மக்களைக் கண்ணியமான ஜனநாயகத்துக்குத் தயார் செய்தார். மக்களுக்கு ஆசானாக, முன்னுதாரணமாக இருக்கிறார். கவர்ச்சி ஜிகினா ஃபார்முலாக்கள் மூலம் மக்களை ஏமாற்ற முயலவில்லை. ஆடம்பர அரசியல், அடாவடி அரசியல், ஜாதி அரசியல், வாக்கு வங்கி அரசியல் ஆகியவற்றைக் கடந்து செல்ல முயன்றார். நாளையும் அவர் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது, தோற்றுவிடலாம். ஆனாலும், அவரது அணுகுமுறை மிகுந்த பாராட்டுக்கு உரியது, மற்ற அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டியது. ஆனால், தமிழகத்தில் இருப்பவர்களோ, தலைவர்கள் அல்ல, தரகர்கள். ஜனநாயகத்தின் ஒவ்வொரு கூறுகளுக்கும் ஒரு விலை வைத்து, அதைப் பணநாயகமாக மாற்றி விட்டவர்கள். தாங்களும் சாக்கடையில் குளித்து, மக்களையும் புதைகுழியில் தள்ளத்தயாராகி விட்டவர்கள். தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதாக மாய்மாலம் காட்டுபவர்கள். தமிழ்ச் சமூகத்தில் இன்று ஏற்பட்டிருப்பவை வளர்ச்சித்தசைகள் அல்ல, புற்றுநோய்க் கட்டிகள். இதன் விளைவாக தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மன நலம், பொது அமைதி, தனிநபர் ஒழுக்கம், மண்ணின் விழுமியக் கூறுகள் என்று எல்லாமுமே நசிந்து வருகின்றன. ""பெரும் பணக்காரர்களோ, ஆயுத பலம் கொண்டவர்களோ, நியாயமாக ஒரு சமுதாயத்தை வழி நடத்த முடியாது. ஒரு சமுதாயத்தின் மிகச்சிறந்த மனங்களை அந்தச் சமுதாயத்தை வழிநடத்த வேண்டும்'' என்கிறார் ப்ளேட்டோ. ஆனால், இன்றைக்குத் தமிழகத்தில் நடப்பதென்ன? கூலிப்படைத்தலைவர்களும், பெரு நிறுவன முதலாளிகளும் நேரடித் தேர்தல் அரசியலில் இறங்கி விட்டார்கள். மீன் இறந்தவுடன் தலையில் இருந்து அழுகத் தொடங்கும். பின்னர், அதன் உடலும் அழுகும். அதுபோன்று தமிழக அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் அழுகிவிட்டதனால், அது தமிழ்ச் சமுதாயத்தின் பின்னடைவுக்கும் காரணமாகி வருகிறது. ஆதலால், பணபலம், ஆள்பலம், இன்னபிற அவலங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, வருகிற தேர்தல் ஓரளவு கண்ணியமாக நடைபெற்றால்தான் தமிழகத்தின் எதிர்காலம் சீரமைக்கப்படுவதற்கும், அதன் தாக்கம் தேசிய அளவில் பிரதிபலிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு வேண்டிய உண்மையான முயற்சிகளை எடுக்கத் தேர்தல் ஆணையம் முனைப்புக் காட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்கு உரம் சேர்க்கும் வகையில், சமூக ஆர்வலர்கள், பெண்களுக்கான அமைப்புகள், சிறு சிறு தன்னார்வ இயக்கங்கள், ஓய்வுபெற்ற நேர்மையான சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகிய பலர் இணைந்து கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அரங்கக் கூட்டங்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, நடுநிலையாளர்கள், இளைஞர்கள் ஆகியோரை ஒன்றிணைத்துச் செயல்பட்டால், தேர்தலின் கண்ணியத்துக்கு இவ்வமைப்பால் உதவ இயலும். நுகர்வுக்குள் சிக்கிக்கொண்டு ஓட்டுப்போட மறுக்கும் மேல்தட்டு மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டியுள்ளது. ஊழல், விலைவாசி, ஏமாற்றுத் திட்டங்கள், வன்முறை ஆகியவற்றால் விரக்தி அடைந்து தேர்தலைப் புறக்கணிக்க நினைப்பவர்களிடம் வாக்குகள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை அளிக்க வேண்டியுள்ளது. வாக்குகள் விற்பனைக்கல்ல, தன்மானம் இழப்பதற்கல்ல, ஊழல், மக்களின் உயிரைக் குடிக்க வல்லது. லஞ்சம், அடுத்த தலைமுறையை அழித்து வருகிறது போன்ற கோஷங்களை உரக்கப் பேச வேண்டியுள்ளது. மிக முக்கியமாக, பரபரப்பான செய்திகளையும் மசாலாத்தனமான கதைகளையும் தாண்டி, மக்களிடமும், பொதுவில் இருப்பவர்களிடமும், தேர்தலைக் கண்ணியமாக நடத்துவதற்கான பரப்புரை செய்வது மட்டுமல்லாமல், மக்களின் மனசாட்சியாக நடந்து கொள்ளும் கடமையும் இன்று ஊடகங்களுக்கு உள்ளது. நியாயத்தின் பக்கம் இருக்கும் ஊடகங்களும், சிறு பத்திரிகைகளும், சமூக அக்கறை உள்ள நிருபர்களும் தங்கள் பங்கைத் திறம்பட ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை இருக்கிறது. தமிழகத்தின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் ஆகியோர் மக்களுக்கு அதிகபட்ச நன்மை செய்வதற்கே தங்களது பதவி என்று உணர்ந்து, நேர்மையாகச் செயல்பட வேண்டிய கடமை காத்துக்கொண்டிருக்கிறது. ஆக மொத்தம், அடுத்த 42 நாள்களுக்கு தமிழ்ச் சமுதாயத்தின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்கள் எல்லோரும், பணநாயகத்துக்கு எதிராகவும், தசைபலத்துக்கு எதிராகவும் அணி திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் ஃபார்முலாவையும், பென்னாகரம் ஃபார்முலாவையும் தமிழகம் முழுவதற்குமான ஃபார்முலாவாக மாற்றும் முயற்சி நடந்தால், அதனை முறியடிக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் தமிழகம், அழிவு ஃபார்முலா எனும் ஒரு வழிப்பாதைக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயம் காத்திருக்கிறது. கண்ணியமான தேர்தலுக்கான அவசியம் பற்றி ஓயாமல் பேசுவதும், எழுதுவதும் செயல்படுவதும் நமது கடமை, பணி, சமூக சேவை என்று தவறாக நினைக்க வேண்டாம். அதுதான் நமது எதிர்காலத் தலையெழுத்தையே இனிமேல் தீர்மானிக்க இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். இன்றைய இந்திய ஜனநாயகம் ஊழல்வாதிகளிடமும், கிரிமினல் மாஃபியாக்களிடமும், பேராசை பிடித்த வாரிசுகளிடம் சிக்கிக்கொண்டு, ஆன்மாவற்ற, ஆண்மையற்ற மக்களாட்சியாக மாறிவிட்டது. இந்த ஜனநாயகத்தை மீட்டு அர்த்தமுள்ளதாக்கும்வரை தூக்கத்தையே தொலைத்துவிட்டு தளராமல் வீரியத்துடன் செயல்பட வேண்டிய கடமை நம்மில் பலருக்கு உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் எல்லோரும் கண்ணியமான தமிழகத் தேர்தலை வலியுறுத்தி களப்பணியாற்றுவோம்!