அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 7 மார்ச், 2011

உட‌ல் உறு‌ப்பு தான‌ம்: ‌வி‌திமுறை தள‌ர்வு

விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி மூளை‌ச்சாவு ஏ‌ற்படுபவ‌ர்களது உட‌ல் உறு‌ப்புகளை தான‌‌ம் செ‌ய்ய அவ‌ர்களது உற‌வின‌ர்க‌ள் மு‌ன் வருவது த‌ற்போது அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. எ‌னினு‌ம், உறு‌ப்புகளை உ‌ரிய நேர‌த்‌தி‌ல் பய‌ன்படு‌த்த இயலாம‌ல் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் ச‌ட்ட‌ நடவடி‌க்கைக‌ள் ஏராளமாக உ‌ள்ளன.
எனவே, உட‌ல் உறு‌ப்பு தான‌த்து‌க்கு உ‌ள்ள ச‌ட்ட நடவடி‌க்கைகளை த‌ள‌ர்‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ஏராளமானோ‌ர் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர். இதையடு‌த்து உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் கொடு‌ப்ப‌தி‌ல் உ‌ள்ள மரு‌த்துவ‌‌ம் சா‌ர்‌ந்த ச‌ட்ட நடவடி‌க்கைக‌ளி‌ல் நடைமுறைகளை தள‌ர்‌த்‌‌தி, சுகாதார‌ம் ம‌ற்று‌ம் குடு‌ம்ப நல‌த்துறை உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளது.
த‌மிழக‌த்‌தி‌ல் சாலை ‌விப‌த்துக‌ளி‌ல் உ‌யி‌ரிழ‌ப்போ‌ர் ஏராள‌ம். இ‌தி‌ல் தலை‌யி‌ல் அடிப‌ட்டு அதனா‌ல் மூளை‌ச்சா‌வு ஏ‌ற்ப‌டுபவ‌ர்களு‌ம் ஏராள‌ம். மூளை‌ச் சாவு எ‌ன்பது, உட‌ல் உறு‌ப்புக‌ள் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌‌க்க, அவ‌ர்களது மூளை செய‌லிழ‌ந்து, உ‌யி‌ர் வாழ வா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்ற ‌நிலை‌யி‌ல், அவ‌ர்களது உற‌வின‌ர்க‌ள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ரி‌ன் உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் செ‌ய்ய மு‌ன் வரு‌கி‌ன்றன‌ர்.
ஆனா‌ல் உட‌ல் உறு‌ப்புகளை தா‌ன‌ம் செ‌ய்வது என‌்று உற‌வின‌ர்க‌ள் முடிவெடு‌த்து ‌வி‌ட்டா‌ல் ம‌ட்டு‌ம் போதாது. அத‌ற்கென ‌சில மரு‌த்துவ ம‌ற்று‌ம் ச‌ட்ட நடைமுறைக‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை எ‌ல்லா‌ம் முடி‌ப்பத‌ற்கு‌ள் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டவ‌ரது உட‌ல் உறு‌ப்புக‌ள் ‌வீணா‌கிறது. இதனா‌ல் தானமாக ‌கிடை‌க்க வே‌ண்டிய உட‌ல் உறு‌ப்புக‌ள் பய‌ன்படு‌த்த ‌முடியாத ‌நிலையை அடை‌கிறது.
எனவே, உட‌ல் உறு‌ப்பு தான‌ம் கு‌றி‌த்த ச‌ட்ட நடவடி‌க்கைகளை தள‌ர்‌த்‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள பு‌திய உ‌த்தர‌வி‌ல், மூளை சாவு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்தா‌ல், மரு‌த்துவரே முத‌ல்க‌ட்ட ப‌ரிசோதனை மே‌ற்கொ‌ள்ளலா‌ம். இது உறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ல், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டவ‌ரி‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ரிட‌ம் (மனை‌வி,குழ‌ந்தைக‌ள், பெ‌ற்றோ‌ர் அ‌‌ல்லது சகோதர, சகோத‌ரிக‌ள்) உட‌ல் உறு‌ப்பு தான‌ம் கொடு‌ப்பது தொட‌ர்பான ‌விரு‌ப்ப‌த்தை அ‌றியலா‌ம்.
தான‌ம் கொடு‌க்க ‌விரு‌ம்‌பினா‌ல், அடு‌த்த க‌ட்டமாக ‌விசாரணை நட‌த்து‌ம் காவ‌ல்துறை அ‌திகா‌ரி‌க்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌த்து, உடனடியாக மரு‌த்துவ‌ம் சா‌ர்‌ந்த ச‌ட்ட நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
அவரது புல‌ன் ‌விசாரணை‌க்கு‌ப் ‌பி‌ன்பு, உட‌ல் உறு‌ப்பு தான ச‌ட்ட‌ப்படி மூளை சாவு உறு‌தி செ‌ய்வத‌‌ற்கான 2வது ப‌ரிசோதனை நட‌த்த வே‌ண்டு‌ம். இற‌ப்பு‌க்கானகாரண‌த்‌தி‌ல் ச‌ந்தேக‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல், உடனடியாக ‌விசாரணை அ‌திகா‌ரி, உட‌ல் உறு‌ப்பு தான‌ம் ச‌ெ‌ய்வத‌ற்கான அனும‌தியை வழ‌ங்க வே‌ண்டு‌ம்.
பிரேத ப‌ரிசோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் என ‌விசாரணை அ‌திகா‌ரி கரு‌தினா‌ல், அத‌ற்கான அனும‌தி கடித‌ம், உட‌ல் உறு‌ப்புக‌ளி‌ன் இய‌ங்கு‌நிலை கு‌றி‌த்து மரு‌த்துவ அ‌திகா‌ரி கொடு‌க்கு‌ம் சா‌ன்றை சம‌ர்‌ப்‌பி‌க்க வே‌ண்டு‌ம். அத‌ன் ‌பி‌ன் உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் வழ‌ங்குவத‌ற்கு நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.


உடல் உறுப்பு தானம் செய்வதாக 'விபரீதம்': 'துறுதுறு' மகனை 'கூரறுக்க' தயாரான பெற்றோர்



உடல் உறுப்பு தானம் குறித்து தெளிவான வழிமுறைகள் தெரியாமல் பலரும் ஆர்வக்கோளாறு காரணமாக, தவறான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, கோவை கலெக்டர் அலுவலகம் வந்த பெற்றோரால், நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதுவரையிலும் ரத்த தானம், கண் தானம் பற்றியே சமூக அமைப்புகள் அதிகமாக வலியுறுத்தி வந்தன. சென்னையில் விபத்தில் மூளை செயலிழந்த இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பின், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதயேந்திரனுக்குப் பின் சேலம், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மூளை செயல் இழந்த சிலரது உடல் உறுப்புகள், அவர்களது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், இதுபற்றிய தெளிவான வழிமுறைகள், மருத்துவ உண்மை தெரியாமல் பலரும் தவறான முடிவுகளை எடுப்பதாகவும் தெரிய வருகிறது.

இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டபோது, அதற்குக் கிடைத்த அதீத வரவேற்பும், "மீடியா'க்கள் கொடுத்த அதிமுக்கியத்துவமும் பலரையும் ஈர்த்துள்ளது. ஆனால், இதயேந்திரனின் தாய், தந்தை இருவருமே டாக்டர்கள் என்பதையும், அவர்கள் அந்த முடிவை எடுத்ததற்கான சூழல் எத்தகையது என்பதையும் பலரும் மறந்து விடுகின்றனர். தங்களது குடும்பத்திலும் இத்தகைய உடல் உறுப்பு தானம் செய்தால், தங்களது குடும்பத்துக்கும் பெரிய அளவில் புகழ் கிடைக்கும் என்ற தவறான எண்ணமும் பலரது மத்தியில் உருவாகியுள்ளது. இது சிலரை தவறான முடிவு எடுக்கவும் தூண்டி விடுகிறது.

கோவை காரமடையைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ராஜாராம் - கவிதா தம்பதியினர் எடுத்த முடிவும் இத்தகையதே. இவர்களது ஐந்து வயது மகன் நவீன் குமாருக்கு மூளை வளர்ச்சி இல்லை. ஆனால், எப்போதும் "துறுதுறு'வென்று நடமாடிக் கொண்டிருக்கும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறான். குழந்தையாக இருக்கும்போதே இந்த குறைபாடு பற்றி தெரியவில்லை. சில நடவடிக்கைகளைப் பார்த்து மூளை வளர்ச்சி இல்லாததைத் தெரிந்து கொண்டனர். டாக்டரிடம் அழைத்துச் சென்ற போது, "உங்கள் மகனின் மூளையின் எடை குறைவாக உள்ளது; சில காலம் தான் உயிர் வாழ்வான்' என்று கூறியதாகத் தெரிகிறது. இந்த நேரத்தில் தான், இதயேந்திரன் பெற்றோரின், பரந்த இதயம் உலகுக்கு தெரிய வந்தது. உடனே, இவர்களும் அதே பாணியில் நவீன்குமாரின் உடல் உறுப்புகளை இப்போதே தானம் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி பகிரங்க அறிவிப்பு வெளியிட்ட அவர்கள், உடல் உறுப்பு தானம் செய்வதற்கான அனுமதி பெறுவதற்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை கேட்பு முகாமில் மனு கொடுத்தனர். அப்போது குழந்தை நவீன்குமாரையும் அழைத்து வந்தனர். பரிதாபத்துக்குரிய அந்த குழந்தையுடன் அவர்கள் வந்ததை அறிந்த பத்திரிகையாளர்கள், அவர்களைச் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்தனர். அப்போது, குழந்தை நவீன்குமாரின் நிலையை விளக்கி அவர்கள் கண்ணீர் வடித்தனர். அவர்கள் மனு கொடுத்தபோது, கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கில்லை. அவர்கள் வந்த பின், இந்த மனுவைப் பற்றி விசாரித்து அதை வாங்கிப் பார்த்தனர்.

அந்த மனு மீது எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி கலெக்டர் பழனிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கூறுகையில், "இதுபோன்ற தவறான அபிப்பிராயங்களை ஊக்குவிக்கக் கூடாது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை அந்த பெற்றோரால் பார்க்க இயலாத பட்சத்தில், அக்குழந்தையை பராமரிக்க எத்தனையோ இல்லங்கள் இருக்கின்றன. அங்கு சேர்க்கலாம்; இதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். நன்றாக இருக்கும் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய நினைப்பது பெரும் தவறு' என்றனர்.

இதயேந்திரனின் பெற்றோர், டாக்டர்கள் என்ற முறையில் ஒரு நல்ல விஷயத்தை மக்கள் மனங்களில் விதைத்தனர். ஆனால், பல பெற்றோர், மனித நேயத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, அதற்கு "உயிரோடு சமாதி' கட்ட முயற்சிக்கின்றனர் என்பது வேதனை தரும் விஷயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக