அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 12 மார்ச், 2011

வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

உணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. பள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தனியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.

பாடப்புத்தகம் தவிர, மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது. கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம். புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும்.
முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில சமூகவிரோதச் செயல்களுக்கு, இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும். சீருடை தொடர்பாக சிலரிடம் பேசினோம்.

அதிலிருந்து...

மனோத்தத்துவ நிபுணர் பொன்னி கூறியதாவது:தற்போதைய பெரிய பிரச்னைகளில் ஒன்று குழந்தைகளின் பாதுகாப்பு. குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுதல், பாலியல் கொடுமைகள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒழுக்கம் என்பது குழந்தைகள் மீதான பெற்றோர்களின் வளர்ப்பு முறையைத்தான் குறிக்கிறது. பெற்றோர்களே மாடர்ன் கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர். மாடர்ன் ஆடைகளை அணிவதும், உணவு பழக்கங்களை மாற்றுவதுமாக கலாசாரம் மாறி வருகிறது. இதன் அடிப்படை எங்கே என்று தேடினால், மற்ற நாடுகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டது தான். கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருப்பினும், நமக்கு ஒத்துவராத விஷயங்களை மட்டும் காரணமே இல்லாமல் கற்றுக் கொள்கிறோம். நல்ல பழக்கங்கள் என்பது பெற்றோர்களிடம் இருந்து கற்க வேண்டியது. பெற்றோர்கள் முதலில் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கங்களை நாம் கற்று கொள்ளும் மற்றொரு இடம் பள்ளி. அடிப்படை கலாசாரங்களும், பண்பாடுகளும் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகளில் கூட ஒழுக்க விதிமுறைகள், தனிமனித பண்புகள், வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிக் கற்று கொடுக்க நேரம் இல்லை என்பது, இன்னும் பரிதாபமான விஷயம்.குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. "டிவி' மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தமும், தேவை இல்லாத ஊடுருவலும் அதிகம். அவற்றில் வரும் காட்சிகளும், முரண்பாடான கருத்துகளும் குழந்தைகளின் மனதில் அவர்களை அறியாமலே பதிவாகிறது. அவற்றைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, பொன்னி கூறினார்.

சர்வஜன பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ""இன்டர்நெட், சினிமா, "டிவி' நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகம், குழந்தைகளின் மீது தவறாகத் திணிக்கிறது. இன்னும் சொல்வதானால், பல பெற்றோர்கள் அத்தகைய சீருடைகளை விரும்புகின்றனர். தாய்மார்கள், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள், நடத்தை முறைகளைக் கற்றுத்தர வேண்டும்,'' என்றார்.

அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சுகுணா கூறியதாவது:பெற்றோர் சம்மதத்தோடு தான் சீருடைகளை குழந்தைகள் அணிகின்றனர். இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமானாலும், இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. தங்களது குழந்தைகள் தவறாக சித்தரிக்கப்படுவதை, கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அரசால், மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சர்வதேச பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் சேர்க்கின்றனர்; அது தவறான கருத்தாகும். அரசு பள்ளிகளில் மட்டும் சீருடையாக சுடிதார்கள் இருப்பதை தவிர்த்து, அனைத்து பள்ளிகளிலும் இதனை கொண்டு வர வேண்டும். "பின்னோபார்' சீருடைகளோடு மட்டும் நின்றுவிடாமல், "மினிபார்' சீருடைகளும் வந்துவிட்டன. அது இன்னுமொரு கொடுமையான விஷயம். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தான் பாதுகாப்பு அதிகம். அரசு பள்ளிகள் அதனை விளம்பரப்படுத்துவது இல்லை; ஆனால் தனியார் பள்ளிகள் செய்கின்றன. இத்தனை பிரச்னைக்கும் காரணம் பள்ளி நிர்வாகிகள் மட்டும்தான் என்று குறை கூற முடியாது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் அரசு, இதில் கவனம் செலுத்தி சீருடைகளை மாற்றி அமைக்க முடிவெடுக்கலாம். நம்முடைய கலாசார உடைகள், சீருடைகளாக வரலாம். அனைவரும் சுடிதார் மற்றும் பல விதமான நாகரீகமான உடை அணிவதன் மூலம், பல பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.இவ்வாறு, சுகுணா கூறினார்.

பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி முதல்வர் க்ரிஷ் கூறுகையில், ""ஆசிரியப்பணி சேவையாக இல்லாமல், தொழிலாக மாறிவிட்டது. வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத்தருவதில்லை. "டிவி', இன்டர்நெட் போன்ற ஊடகங்களின் தாக்கத்தை, குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கின்றனர். ஆண், பெண் இருபாலினத்துக்கும், சகபாலினத்தின் மீது பரஸ்பர மரியாதை இல்லை. வெளிநாட்டு கலாச்சார மோகம், பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான நல்லவை இருக்கின்றன. ஆனால், நமது சூழலுக்கு ஒத்துவராத உடை உள்ளிட்ட தேவையற்றவைகளை மட்டுமே பின்பற்றுகிறோம்,'' என்றார்.

ஸ்டேன்ஸ் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன் கூறுகையில், ""பள்ளிச் சீருடைகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. அதற்கேற்ற உள்ளாடைகளை அணிய, உடற்பயிற்சி ஆசிரியர்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்பர். சீருடைகள் மட்டுமே குற்றச்சம்பவங்களுக்கு காரணம் என சொல்ல முடியாது. இருப்பினும், பள்ளிச் சீருடை முறை மாற்றுவது குறித்து, நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும்,'' என்றார்.

ஜி.டி., பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், "சீருடைகளை இறுக்கமாக அணியாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் எப்போதும் விளையாட்டுத் தனமாகத்தான் இருக்கும்; அவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. சீருடைகளை மாற்றுவதை விட மக்களின் மனதை மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் இல்லாத குற்றச்சம்பவங்கள் தற்போது பெருகியதற்குக் காரணம், மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்தான்,' என்றனர்.

சினிமாக்களில் சித்திரிக்கும் கெட்ட விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்களின் மனப்பாங்கு; தவறாக வழிகாட்டும், "டிவி', சினிமா துறைகள் பற்றி பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், குற்றம் சாட்டின. துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவனும் மொபைல்போன் வைத்திருப்பது, அந்தரங்க விஷயங்கள் இன்டர்நெட்டில் மிக எளிதாக கிடைக்கும் அவலம் போன்ற பெற்றோரின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கும் விஷயங்களையும் அவர்கள் தெரிவித்தனர். பாடப்புத்தகங்களைச் சொல்லித்தருவது மட்டுமே கடமை என்றில்லாமல், பண்பாட்டுடன் குழந்தைகள் வளர்வதற்கும் கல்வி நிறுவனங்களே பொறுப்பு. கவனச்சிதறல் ஏற்படுத்தாத கட்டுப்பாடான உடைகள் வேண்டும் என்பதால் தா­ன், கல்வி நிறுவனங்கள் உடை விஷயத்தைத் தீர்மானிக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று; எனினும், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சீருடைகளின் அளவுகளை கல்வி நிறுவனங்கள் ஒருமுறை பரிசீலிக்கத்தான் வேண்டும்.

பெற்றோரே முன்னுதாரணம்! பேஷன் என்ற பெயரில் உடைகள் இன்று பெற்றுள்ள வடிவங்கள் பல. அதிலும், இன்றைய இளம் தலைமுறையினர் இதில் கலாச்சாரப் புரட்சியையே நடத்தி வருகின்றனர். இறுக்கிப் பிடிக்கும் மேற்கத்திய கலாசாரத்துடனான சில மாடர்ன் உடைகள் பலரது கண்களையும் உறுத்தவே செய்கின்றன. அதுவும், நமது உணவு மற்றும் புற சூழல்களால் இன்றைய குழந்தைகள் உடலளவில் அதீத வளர்ச்சியுடன் திகழ்கையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உடை விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதிலும், இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளே இன்று அதிகம் உள்ள நிலையில் பள்ளிச் சீருடைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இன்டர்நேஷனல், சி.பி.எஸ்.சி., ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், அரசு பள்ளிகள் என பல நிர்வாகங்கள் இருந்தாலும் அரசு பள்ளிகள் தவிர மற்றவற்றில் நவநாகரிமான மேற்கத்திய பாணியிலான யூனிபார்ம்கள் (குட்டி ஸ்கர்ட்டுகள், பெல்ட், டை, ஷு) போன்றவற்றில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

நாளை நம் குழந்தைகள் வெளிநாடுகளில் பணியாற்ற படிப்பை விட இவையெல்லாம் தான் தலைமைத் தகுதிகள் என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சுடிதார், தாவணி போன்ற கலாசார வகையிலான யூனிபார்ம்கள் அணிவது பலருக்கும் கட்டுப்பெட்டித்தனமாகவே படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, பள்ளிகளை மட்டுமே குறை கூறுவதைத் தவிர்த்து பெற்றோர்களும் சற்று விழிப்புடன் இருக்கலாம். எந்த வகையானாலும் யூனிபார்ம் தைக்கும் போதே இறுக்கிப்பிடிப்பதாய் இல்லாமல் சற்று தளர்வாய், குழந்தைகளின் உடல்வாகுக்கேற்ப தைப்பது நலம்.

பெண் பிள்ளைகள் சீக்கிரம் வளர்ந்துவிடும் என்பதைக் குறிக்க, "பெண் பிள்ளைகள் வளர்த்தி பீர்க்கங்காய் வளர்த்தி' என்பார்கள் கிராமப்புறத்தில். எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் சிக்கனம் பார்க்காமல் ஆண்டுதோறும் குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ப யூனிபார்ம்களை தைப்பது நலம். ஸ்கர்ட் அணிந்தாலும் சில பள்ளிகளில் முட்டிக்கால் வரையிலான ஸ்டாக்கிங்ஸ், லெகின்ஸ் போன்ற தரமான உள்ளாடைகள் அணிய வலியுறுத்துகின்றனர். இம்முறை இல்லாத பள்ளிகளில் பெற்றோர் தாங்களாகவே குழந்தைகளுக்கு இதை அணியப் பழக்கலாம். பின்புறமாக இருதோள்களில் அணியும் பைகளுக்கு பதிலாக ஒருபுறமாக அணியும் பைகளை வாங்கிக் கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்கள் தாங்களாகவே ஒரு உதாரணமாகத் திகழ்வது குழந்தைகளையும் கலாசாரம் பிறழாமல் வாழச் செய்யும்...

நாம் பள்ளிகளை குற்றம் சொல்ல கூடாது. தற்போதைய பிள்ளைகள் UNIFORM தவிர மற்ற டிரஸ் அனைத்தும் மோசமாகத்தான் போடுகிறனர். பெற்றோர்கள் சிலர் வாங்கி கொடுக்கவும் செய்கின்றனர். பிள்ளைககளுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கவேண்டும்

இது ஒரு நல்ல செய்தி. இதை செய்தியோடு நிறுத்தி கொள்ளாமல், உரிய நடவடிக்கை எடுத்தால், சமூகத்தில் நல்ல மாற்றங்களை பார்க்க முடியும்.
  • Rate it:
  • 5
  •  
  • 0
கட்டுரையை வெளியிட்ட தினமலர் பத்திரிக்கைக்கு நன்றி. சமுதாய விழிப்புணர்சியை ஏற்படுத்தும் இது போன்ற கட்டுரைகளை எழுத வேண்டுகிறோம். சுடிதார் தான் பாதுகாப்பான உடை. ஸ்கிர்ட் அணிவதை இந்திய பள்ளிகளிலிருந்து அறவே ஒழிக்க வேண்டும். அதற்கு தமிழ்நாடு உதாரணமாக இருக்க வேண்டும். சீருடை விசயத்தில் அரசு முழுகவனதுடன் நடவடிக்கை எடுப்பது நல்லது.
  • Rate it:
  • 8
  •  
  • 2
Share this comment

Venkatesan R - Chennai,இந்தியா
2011-02-14 13:46:45 IST Report Abuse
குழந்தைகளுக்கு ஆடை, விருப்ப சுதந்திரம் மற்றும் முற்போக்கு சிந்தனை என்று வெங்காய பேச்சு பேசும் பெற்றோர் ஒன்றுக்கு இரண்டு முறை படிக்க...
  • Rate it:
  • 4
  •  
  • 2
Share this comment

Ranganathan - Chennai,இந்தியா
2011-02-14 13:45:23 IST Report Abuse
பெண் உரிமை, பூண்டு உரிமைன்னு பேசறதெல்லாம் உதவாது. கூட ஒரு மீட்டர் துணி, மேட்டர் ஓவரு!!!...ஆயிரக்கணக்குல பணத்த செலவு பண்ற பெற்றோருக்கு அது ஒன்னும் பாரமாக இருக்காது.
  • Rate it:
  • 6
  •  
  • 4
Share this comment

Thiru - kanchipuram,இந்தியா
2011-02-14 12:57:54 IST Report Abuse
சீருடைகள் மாணவிகளின் உடலை வெளியில் காட்டுவதாக உள்ளது. சும்மா ஆண்களை மற்றும் குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை. பள்ளி நிர்வாகம்,லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள்,மற்றும் பொறுப்பு,திறமை, கவலை இல்லாதா அரசியல்வாதிகள் பெற்றோர்கள்,மற்றும் சமுகம் எல்லாமே இதற்கு பொறுப்பு, சட்டம் சரி இல்லை, தப்பு பண்ற எலரையும் கடினமா தண்டிக்கணும் அப்பதா பயம் வரும் . . . .
  • Rate it:
  • 11
  •  
  • 0
Share this comment

R.Balasubramaniam - Bedburg,ஜெர்மனி
2011-02-14 12:49:13 IST Report Abuse
நல்லதொரு செய்தி .....பெற்றோர் ...பள்ளி நிர்வாகங்கள்...... மனோதத்துவ நிபுணர்கள் கலந்து பேசலாம்.....கண்டிப்பாக பேச வேண்டிய விஷயம் ......சீருடைகள் பாலியல் கொடூரங்களுக்கு ஓர் காரணமே ........ சிந்திக்கத் தூண்டிய செய்தியை தந்த ....தினமலருக்கு நன்றி
  • Rate it:
  • 5
  •  
  • 1
Share this comment

selvakumar - chennai,இந்தியா
2011-02-14 12:26:39 IST Report Abuse
தினமலர் செய்திக்கு நன்றி நன்றி நன்றி
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment

Praveen Karthik - Natham,இந்தியா
2011-02-14 12:13:56 IST Report Abuse
நல்ல செய்தி தினமலருக்கு நன்றி...........
  • Rate it:
  • 3
  •  
  • 1
Share this comment

Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
2011-02-14 11:45:32 IST Report Abuse
Better kindly advice to all wear Burka Abaiah it safety for all girls and womans
  • Rate it:
  • 2
  •  
  • 4
Share this comment

Senbaga Valli - nagpur,இந்தியா
2011-02-14 11:39:34 IST Report Abuse
ஹலோ நிர்மலா , தன்னாம்பிக்கை உள்ள சிறுமிகள் என்றால் முழங்காலுக்கு மேல் வரை தெரியும் குட்டை பாவாடை தான் அணிய வேண்டுமா ? சுடிதார் அணிந்தால் தன்னம்பிக்கை வராதா ? பெண்பிள்ளைகளின் சீருடைகள் ஆண்களின் கண்களை உறுத்தும்படி இருக்கக்கூடாது . கண்ணியமாக உடைதான் அணிய வேண்டும் தெரிந்துகொள்ளுங்கள்
  • Rate it:
  • 14
  •  
  • 4
Share this comment

raja kumar - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
2011-02-14 14:37:05 IST Report Abuse
எது கண்ணியம் ? கண்ணியம் உடையில் தேவை இல்லை, பார்வையில் தான் தேவை. சீருடைகளை மாற்றுவதை விட மக்களின் மனதை மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் இல்லாத குற்றச்சம்பவங்கள் தற்போது பெருகியதற்குக் காரணம், மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்தான், மேலை நாட்டில் சீருடை மட்டும் அல்ல பார்வையும் மாறிவிட்டது. நாம் பழைய பஞ்சாங்கம் பேசி, பேசி .......... நல்லவர்களையும் கெடுப்போம். எப்போது நாம் மாற்றிதை அங்கீகரித்தோம். சிங்கப்பூரில் பள்ளி செல்லும் பெண்களுக்கான சீருடைகள் ஸ்கர்ட் மற்றும் மேல் சட்டை ஆகியவை ஆகும். ஆனால் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் ஏதும் நடப்பதில்லை. காரணம் அங்கு சட்டம் ஒழுங்கு கடுமையாக இருப்பதே காரணம். நாம் சட்டத்தை குற்றவாளிகளுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு பள்ளி சீருடைகளை குறை சொல்வது அறிவற்ற செயல். உச்சி முதல் உள்ளம்கால் வரை பெண்கள் மூடினாலும் சவுதியில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இறையாகிறார்கள். ஆண் குழந்தைகளை சிறுவயது முதலே ஒழுக்கமாக வளர்த்தல் , தவறு செய்தால் தண்டனை கடுமையக்குதல் ஒன்றே இதற்கு வழி ! வெப்பமான தமிழகத்தில் இன்றும் கிராமங்களில் வயதான பெண்கள் மேலாடை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று கேளுங்கள் எப்படி அவர்களுக்கு தொல்லை( அவர்களுடைய சிறு வயதில் ) ஒன்றும் இல்லை என்று ? பெண்களை தாக்கும் சுபாவம் நகரத்தில் உள்ள ஆண்களுக்கு வர காரணம் தவறு செய்தால் தப்பி விடலாம் பொலிசாரால் கண்டு பிடிக்க முடியாது என்பது தான். கிராமத்தில் சென்று ஒரு பெண்ணை சீண்டினால் அவளின் உறவினர் மற்றும் சக கிராமத்தினர் தன வீட்டு பிள்ளய்க்கு ஒன்று போல துடிப்பார்கள் . நகரத்தில் என்ன நடந்தாலும் நமக்கேன் வம்பு என்று ஒதிங்கி கொள்வர்கள். இந்த மனோபாவம் பெண் குழந்தைகளை குறி வைக்கும் கிரிமினல்களுக்கு சாதகமாக உள்ளது ! குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் குற்றம் செய்வது குறையும்...
  • Rate it:
  • 8
  •  
  • 4
Share this comment

Saddiq Batcha - Dammam,சவுதி அரேபியா
2011-02-14 11:17:14 IST Report Abuse
Well this is very useful article by Dinamalar. Dear Friends, The planned crimes are very few where as accidental mistakes are huge. A person committing to do mistake while the environment motivate him to do so like exposing body parts, Tightening / short dress to commit him to do mistake. Separation of gender in education and full covered dresses will definitely reduce the sexual crimes
  • Rate it:
  • 1
  •  
  • 4
Share this comment

பக்கிரி - tamilnadu,இந்தியா
2011-02-14 10:52:20 IST Report Abuse
நல்ல செய்தி தினமலருக்கு நன்றி... இதற்கு பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் தான் காரணம்.......... ஆண்களை குறை சொல்லுவதில் அர்த்தம் இல்லை
  • Rate it:
  • 12
  •  
  • 4
Share this comment

Danial Abraham - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-02-14 10:51:18 IST Report Abuse
Parents should wake up, they are encouraging child to wear dresses in fashion, makes things danger for the child
  • Rate it:
  • 1
  •  
  • 2
Share this comment

Mohammed - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
2011-02-14 10:41:13 IST Report Abuse
This absolutely right, coz think of saudi Arabia even a non muslim must wear purdah, there is no crime but see south africa, most crime happening there find the difference, i can accept what Nirmala saying but i can't completely accept this the uniform structure is also one of the reason. this is not only happened in Tamil Nadu, The same thing happen here in dubai, a few months back but that is too done by indian (raped a four year old girl by 1 driver and 2 conductor ) after investigation they found lots of molesting happened in that very same school. So my opinion is to have a severe law to punish and a law to restrict the dress code in schools, college and even in public not only for women and for men as well
  • Rate it:
  • 7
  •  
  • 9
Share this comment

vel murugan - shenzhen,சீனா
2011-02-14 10:31:13 IST Report Abuse
சீருடைகள் ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் நம் கலாச்சாரத்தை சற்று அலசி ஆராயுங்கள் விபச்சாரத்தை அனுமதியுங்கள். நல்லவர்கள் பாதிக்கபடுவது தடுக்கப்படும். விபச்சாரம் செய்பவர்களை மதிக்க வேண்டாம். மிதிக்காமல் மட்டும் இருங்கள். உங்கள் வீட்டு குழந்தைகள் பாதிக்கப்படமாட்டார்கள்.
  • Rate it:
  • 11
  •  
  • 6
Share this comment

athiyuthu shaj - alain,ஐக்கிய அரபு நாடுகள்
2011-02-14 10:30:56 IST Report Abuse
nantri dinamalare ,pengal udai visayathil namathu islaam enna solhirathu, athaiyum aaraaya vendiyathu samooha sinthanaiyaalarhalin katamai.katamai,athiyuthu shaj,
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment

Indian - Mumbai,இந்தியா
2011-02-14 09:22:48 IST Report Abuse
பேருந்து நிறுத்தத்தில் இரண்டு மாணவர்கள் பேசிகொண்டதன் மூலம் தெரிந்தது, இது போன்ற பள்ளிகளில் மாணவர்கள் கூட்டம் படிக்கட்டுகளின் கீழ் அதிகமாக காணப்படுமாம், ஏன் என்பதை நான் வாசகர்கள் சிந்தனைக்கும், அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் விட்டுவிடுகிறேன்.
  • Rate it:
  • 6
  •  
  • 1
Share this comment

KIm - seoul,தென் கொரியா
2011-02-14 11:59:58 IST Report Abuse
Well said...
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment

bharathiyan - kandhahar,ஆப்கானிஸ்தான்
2011-02-14 08:43:07 IST Report Abuse
FIRST OF ALL ON BEHALF OF ALL PARENTS I CONGRATS OUR DINAMALAR FOR ITS WRITING. YES THE UNIFORM ISSUE MAINLY IN PRIVATE SCHOOLS ARE ADEQUATE ARE NOT FIT FOR OUR MENTALITY OR CULTURE. PEOPLE WILL SAY THAT OUR EYES SHOULD BE CORRECT BUT HOW MUCH IS THIS POSSIBLE ALWAYS MEN WHEN SEE EXTRODINARY OR FABOLUS DRESS THEN THEY INTEND TO SEE WHEREAS DRESSED IN OUR CULTURE WILL NOT GET SO MUCH ATTENTION. IT IS LIKE THAT, APPLICABLE FOR ALL, SCHOOLS MAY FIX THE DRESS CODE ACCORDING TO AGE MAINLY FOR GIRLS. AND WE PARENTS HAVE A GREATGER ROLE TO MODULATE OR STREAMLINE THE CONSCIENCES AND BETTER CULTIVATING OUR CHILDREN BOYS OR GIRLS TO THAT EFFECT TO WHAT IS CULTURE AND BEAUTY AND HAVE A STRICT VISION REGARDING TV AND OTHER AD MEDIA / INTERNET AND STRICT VIGILANCE ALSO. IN HOUSE, WE SHOULD MAKE DISCIPLINED WAY OF LIFE AND WHICH SHOULD BE FOLLOWED BY ALL PERSONS. OUR TRADITIONS AND CULTURES SHOULD BE TAUGHT NOW AND THEN. LASTLY PARENTS, SHOULD TALK TO THEIR CHILDREN MAINLY GIRLS AND WHY NOT BOYS ALSO REGARDING THE BEHAVIOURS, DRESSING WAY OF LIFE AND HOW TO BEHAVE WHEN ON INDEPENDANT AND TALK FREELY REGARDING AGE AND ITS FACTOR AND HOW IT WORKS IN HUMAN BODY AND HOW SHOULD THEY AVOID THE CRITICAL MOMENTS WITH CAUTION, BY WHICH WILL THEY HAVE A CLEAR PICTURE OF LIFE AND ITS CIRCLE SO THAT THEY MAY HAVE A BETTER UNDERSTANDMENT, AND ALSO ACT UPON ANY CRITCAL TIMES
  • Rate it:
  • 1
  •  
  • 3
Share this comment

varadarajan kannan - Pondicherry,இந்தியா
2011-02-14 08:37:02 IST Report Abuse
இன்று காலை நான் அலுவலகத்துக்கு வரும் போது என் மனதில் என்ன தோன்றியதோ அதை ஒரு செய்தியாக பார்த்தது, மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை என் மனதிற்குள் விதித்துள்ளது. கான்வென்ட் கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பெற்றவர்களும் சற்று இதை பற்றி சிந்தித்து உரிய பள்ளி நிர்வாகத்திடம் பேசி தீர்வுக்கான முன் வரவேண்டும்.
  • Rate it:
  • 11
  •  
  • 1
Share this comment

Mano - Sembri international cityp,இந்தியா
2011-02-14 08:20:36 IST Report Abuse
சிங்கப்பூரில் பள்ளி செல்லும் பெண்களுக்கான சீருடைகள் ஸ்கர்ட் மற்றும் மேல் சட்டை ஆகியவை ஆகும். ஆனால் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் ஏதும் நடப்பதில்லை. காரணம் அங்கு சட்டம் ஒழுங்கு கடுமையாக இருப்பதே காரணம். நாம் சட்டத்தை குற்றவாளிகளுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு பள்ளி சீருடைகளை குறை சொல்வது அறிவற்ற செயல்.
  • Rate it:
  • 21
  •  
  • 8
Share this comment

shanmugam - marsiling lane,சிங்கப்பூர்
2011-02-14 13:58:24 IST Report Abuse
அங்கு சட்டம் கடுமையாக இருப்பதால்தான் அந்த சிருடையை அணிகின்றனர். அது மட்டும் இல்லாமல் அது ஒரு சிறு தீவு. அதனால் தவறு செய்தவர்கள் தப்பித்து ஒழிய முடியாது.. நம்மூரில் சட்டம் சரில்லாத போது எதற்கு இந்த மாதிரியான ஆடையை அணிய வேண்டும். நம் குழந்தைகளின் நலனை நம் தான் காக்க வேண்டும்.அதற்கும் சட்டம் போட்டால்தான் அக்கறை காட்டுவேன் என்றால் அது பைத்தியகாரத்தனம்.........
  • Rate it:
  • 10
  •  
  • 0
Share this comment

KIm - seoul,தென் கொரியா
2011-02-14 11:58:35 IST Report Abuse
அங்கு எல்லோருக்கும் boyfrend இருப்பார்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள் !!...
  • Rate it:
  • 11
  •  
  • 1
Share this comment

G.Gopalakrishnan - Tuticorin,இந்தியா
2011-02-14 08:17:17 IST Report Abuse
பெற்றோர்களின் விருப்பத்தில்தான் தொடர்கிறது என்பது முற்றிலும் தவறானது! பெண் குழந்தைகளின் உடைகளில் நிச்சயம் மாற்றம் தேவை! சீருடையின் அவசியத்தை தெரியப்படுத்திய தினமலருக்கு நன்றிகள்!
  • Rate it:
  • 12
  •  
  • 0
Share this comment

Porpatham - Chennai,இந்தியா
2011-02-14 08:16:13 IST Report Abuse
நான் என் கல்லூரி படிப்பை வேலூரில் படித்தேன். அங்கு பெரும் பாலான பள்ளிகள் அந்நிய கள்ளச்சரரதையும், மதத்தையும் பரப்பிகொண்டிருகும் கிறித்துவ பள்ளிகள் தான். அங்கு இதுபோன்ற நிகழ்யுகளை கண்டு வருத்த பட்டிருகிறேன். இது போன்ற அவலங்கள் ஏன் என்று பலமுறை சிந்தித்தும் இருக்கிறேன். இதை படிக்கும் பொது பல பெண் பிள்ளைகளின் உயிரை பள்ளிகொடுத்த பிறகும் இதற்கு ஒரு மற்று சட்டம் வராமல் இன்னும் ஒரு செய்தியாகவே படிப்பதை நினைத்தாள் மிக மிக வருத்தமாக உள்ளது. நாம் காலம் கடந்து சிந்தித்து கொண்டிருக்கிறோம். கோவையில் நடந்ததை போன்ற மற்றும் ஒரு அவலம் நடப்பதற்குள் பெற்றோகளும், அரசும் விழிதுகள வேண்டும்...வாழ்க என் தமிழ் கலாச்சாரம்..ஒழிக மேற்கத்திய (அ)நாகரிகம்..
  • Rate it:
  • 23
  •  
  • 4
Share this comment

Lenin Prasad - Penang,மலேஷியா
2011-02-14 08:14:31 IST Report Abuse
ரொம்ப நாளா தினமலர் நாளிதழ் படித்ததில் ஒரு நல்ல செய்தியை இன்று தான் படித்தேன்.. இது போன்று நல்ல சீர்திருத்த செய்திகளை வெளியிடுங்கள் .. எப்போ பாத்தாலும் ADMK or DMK நியூஸ் மட்டும் தான்..
  • Rate it:
  • 9
  •  
  • 2
Share this comment

shanmugam - marsiling lane,சிங்கப்பூர்
2011-02-14 14:04:51 IST Report Abuse
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய். நீங்கள் சரியாக தின மலரை படிப்பதில்லை என்பது தெளிவாக தெரிகிறது....
  • Rate it:
  • 4
  •  
  • 1
Share this comment

suman - Qatar,கத்தார்
2011-02-14 08:09:28 IST Report Abuse
முழுவதும் முக்காடு அணிந்தால் கூட தவறு செய்ய நினைப்பவர்கள் தவறி கட்டாயம் செய்வார்கள். இதற்க்கு மனித வெறியர்களே காரணம். பெண்களையோ அல்லது பெண்கள் உடைகளையோ காரணம் சொல்லி அவர்களை மேலும் இருட்டறையில் அடைப்பது தவறு. பச்சிளம் குழந்தைகளை கூட சில வெறியர்கள் விட்டு வைப்பதில்லையே. இதற்க்கு என்ன சொல்கிறீர்கள். அரபு நாடுகளில் இவ்வாறான தவறுகள் திரை மறைவில் அதிகம் நடக்கிறதே. அப்படியும் அங்கே பெண்கள் முழு முக்காடுடன் நடமாடுகின்றனர்.
  • Rate it:
  • 14
  •  
  • 11
Share this comment

KIm - seoul,தென் கொரியா
2011-02-14 11:55:16 IST Report Abuse
the dress can tell everything !! dress + culture very importent ,now school uniform simply expose women body !! TV cinema main roll இன் !...
  • Rate it:
  • 4
  •  
  • 2
Share this comment

ulaganathan.maa - Thiruneelakudi ,இந்தியா
2011-02-14 07:57:36 IST Report Abuse
பாவாடை தாவணியை மறந்தோம். பண்பும் கலாச்சாரமும் பாழய்ப்போனது. அரசும், பெற்றோர்களும் விழித்துக்கொண்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்...
  • Rate it:
  • 12
  •  
  • 4
Share this comment

Abdullah - singapore,சிங்கப்பூர்
2011-02-14 07:48:07 IST Report Abuse
Islam advises women to wear loose dress covering the whole body except face, hands from wrist and legs from ankle. Schools can consider this for uniform to safeguard children. The culture is so spoiled to see women as sex dolls rather than the backbone of a civilized society.
  • Rate it:
  • 10
  •  
  • 9
Share this comment

senthilmoorthy - uchipulli,இந்தியா
2011-02-14 06:54:48 IST Report Abuse
வெகு நாட்களாக எதிர் பார்த்த செய்தி, தினமலருக்கு நன்றி. சீருடை விசயத்தில் அரசு முழுகவனதுடன் நடவடிக்கை எடுப்பது நல்லது என்பது என் கருத்து. அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை, அது அரசு அல்லது தனியார் பள்ளிகளாக இருந்தாலும்..நிறைய மக்கள் என்ன நினைகிறார்கள் என்றால் மாடர்ன் உலகத்தில் மேலை கலாச்சாரத்தில் உடை அணிவது என்பது அவர்களது கௌரவம் சார்ந்ததாக நினைகிறார்கள். இங்கு யாரும் இன்னும் முழுமையாக மாறிவிடவில்லை, என்று அது போன்ற ஒரு நிலை இந்தியாவில் அதாவது இருபாலரும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் சரிசமமாக பழகும் நிலை வருகிறதோ அன்று வேண்டுமானால் சீருடை பற்றி கவலை பட தேவைஇல்லை. அப்பொழுதும் கூட கொஞ்சம் கவனம் தேவை என்பது தான் என் கருத்து.....
  • Rate it:
  • 16
  •  
  • 1
Share this comment

அரசு .. - madurai ,இந்தியா
2011-02-14 06:47:23 IST Report Abuse
அம்மையீர் நிர்மலா கூறுவது சரி என்றால் , டூ பீஸ் உடை அணிந்த பெண்கள் அதிகம் திரியும் கோவா கடற்கரையில் அதிகம் குற்றங்கள் நடப்பது ஏன் ? இது போன்ற சம்பவங்களுக்கு உடைக்கு முக்கிய பங்கு உண்டு.
  • Rate it:
  • 16
  •  
  • 5
Share this comment

KIm - seoul,தென் கொரியா
2011-02-14 06:40:23 IST Report Abuse
Skirt போன்ற சீருடை மாணவிகளின் உடலை வெளியில் காட்டுவதாக உள்ளது. மேலும் TV cinema இதற்கு தூண்டுகோலாக உள்ளது. சும்மா ஆண்களை மற்றும் குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை ! பள்ளி பெற்றோர்கள்,மற்றும் சமுகம் எல்லாமே இதற்கு பொறுப்பு !! பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்களுக்கு இப்பொது பாதுகாப்பு இல்லை,ஆரம்ப காலத்தில் இது போல் இல்லை. உடை கலாசாரம் எல்லாம் சரியாக இருந்தது ! NOW EVRYTHING EXPOSE THAT WHAT CALL " WOMEN FREEDOM " what a pitty
  • Rate it:
  • 30
  •  
  • 3
Share this comment

Ajaykumar - Singapore,சிங்கப்பூர்
2011-02-14 05:41:48 IST Report Abuse
கலாச்சாரமும், டி.வி யும் ஒரு காரணம்.
  • Rate it:
  • 14
  •  
  • 0
Share this comment

Veerasamy Sabapathy - salem,இந்தியா
2011-02-14 04:50:19 IST Report Abuse
நமது பெண் குழைந்தைகள் தவறான பார்வையில் தான் பர்க்கபடுகின்றனனர். நம்ம மக்களுக்கு எங்கேயுமே எதிர்த்து கேள்வி கேக்கிரதுன்னா வேண்டாத வேலை அல்லது கௌரவ குறைவு. complaint பண்ணாட்டி சும்மா வாய் சொல்லுக்காவது தனியார் பள்ளிகளிடம் எதிர்த்து கேள்வி கேளுங்கப்பா ! முடியலையா, நாலு பேர support க்கு சேர்த்துக்க வேண்டியதுதான்... தனியார் பள்ளி நிர்வாகங்கள் பெருசா ? பெற்றோர்ர்கள் எண்ணிக்கை பெருசா.. ? நமது குழந்தைகள் நலனுக்காவது ஒன்று சேர்ந்து போராட முன்வாருங்கள் ! வெற்றி, தோல்வி காலம் முடிவு செய்யும் தொடர்ந்து குரல் கொடுத்துகொண்டே இருந்தால் ஓற்றுமையாக !
  • Rate it:
  • 15
  •  
  • 0
Share this comment

Nagoor Meeran - Muscat,ஓமன்
2011-02-14 14:50:41 IST Report Abuse
நம் நாட்டில் எப்போது சட்டங்கள் கடுமை ஆக்கப்படுகிறதோ அப்போது தான் குற்றங்கள் குறையப்படும். என்னுடைய இளைய சமுதாயமே ஏன் இன்னும் பொறுமை. பொங்கி எழு சாது மிரண்டால் காடு கொள்ளாது.நம் தேசம் எங்கே போக்குது பார். புரட்சி பொங்கட்டும் நம் தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் ஒரு முன் உத்தரணமாக திகழட்டும் .விரைவில் வெளியே வா .......... என் இளைய சமுத்தையம்மே.....
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment

Shahul hameed - Jeddah,சவுதி அரேபியா
2011-02-14 01:57:55 IST Report Abuse
தினமலருக்கு நன்றி. மிக அருமையான செய்தி. கட்டுரை வடிவில் அதோடு மனோத்தத்துவ நிபுணர், உதவி பேராசிரியர், உதவித் தலைமையாசிரியர் என பலருடைய கருத்துகளையும் சேர்த்து வெளியிட்டு உள்ளீர்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆடை விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் கருத்துகளும் சேர்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சவுதி அரேபியா ஜெட்டஹ்வில் இருந்து கயத்தார் ஷாகுல் ஹமீது.
  • Rate it:
  • 16
  •  
  • 2
Share this comment

suresh manivannan - bikaner,இந்தியா
2011-02-14 01:32:31 IST Report Abuse
the only solution is joint family.. modern women does't know how to bring the child
  • Rate it:
  • 11
  •  
  • 3
Share this comment

Nirmala - Salem,இந்தியா
2011-02-14 00:55:15 IST Report Abuse
சிறுமிகளுக்கு இழைக்கப்படும் இது போன்ற கொடுமைகளுக்கு காரணம் அந்த குற்றவாளிகள் மட்டுமே. சீருடை மேல் பழி போடுவது தவறு. பெற்றோர் மீது பழி போடுவது இன்னும் மிக பெரிய தவறு. பாதிக்கபட்டவர்களை குறை சொல்வது எந்த வகையில் நியாயம்? பார்ப்பவர்கள் கண்கள் உறுத்துகின்றன என்றால் அவர்கள் மனதில் களங்கம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். சீருடை பற்றி இவ்வளவு விவாதம் செய்பவர்கள், ஏன் இந்த குற்றவாளிகளின் மனநிலை பற்றியும், அவர்களின் பெற்றோர் வளர்த்த விதம் பற்றியும் விவாதம் செய்யவில்லை? பெண்களுக்கு எதிராக இழைக்கபடும் குற்றங்களுக்கு பெண்களையே காரணம் காட்டுவது மனிதாபிமானம் இல்லாத செயல்.தாலிபான் போன்ற மிகவும் பிற்போக்கான சமூகங்களின் பழக்கம் இது. தன்னம்பிக்கை உள்ள சிறுமிகளை உருவாக்குங்கள். பெண்களை மதிக்கும் ஆண்களை உருவாக்குங்கள். Stop blaming the victims for crimes committed against them. Go after the violent criminals and find out what influenced them to commit a crime. Punsh them accordingly. You are focusing on the wrong area by changing uniforms and blaming the parents of girls. This is foolish and send a wrong message to everyone.
  • Rate it:
  • 25
  •  
  • 78
Share this comment

nagaraj - madurai ,இந்தியா
2011-02-14 14:01:59 IST Report Abuse
அம்மா நிர்மலா.....இப்போ யார் மேல் பழி போடுவது என்பது முக்கியமில்லை... பெண்கள் தெய்வமாக மதிக்கப்படும் நம் நாட்டில்.. பெண்களைப் பாதுகாப்பது என்பது முக்கியம்......தாலிபான்கள் பெண்களை மனிதர்களாக கூட மதிப்பதில்லை......
  • Rate it:
  • 2
  •  
  • 2
Share this comment

Moin Ahmed - Chennai,இந்தியா
2011-02-14 13:39:27 IST Report Abuse
நிம்மி. குற்றவாளிகள் தப்பு செய்கிறார்கள் என்பது தனி சப்ஜெக்ட். அதற்கான வாய்ப்பை ஏன் ஏற்படுத்தி கொடுக்கிறிர்கள். வீட்டின் கதவை பூட்டாமல் நம்பிக்கையுடன் வெளியில் செல்வது புத்திசாலித்தனம் இல்லைதானே. தவறு நம் கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் தவறுதான். வெளி நாட்டு கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் தவறுதான்....
  • Rate it:
  • 7
  •  
  • 2
Share this comment

Muthu Kumar - Coimbatore,இந்தியா
2011-02-14 13:38:47 IST Report Abuse
நீங்கள் கூறுவது தமாசாக இருக்கிறது, கருத்துக்களை யோசித்து வெளியிடவும். எதிர்பாலினத்தை எப்பொழுதும் ஈர்ப்புடன் பார்ப்பது இயற்கை. அது ரசிக்கும் வகையில் இருந்தால் அழகு, ருசிக்கும் வகையில் இருந்தால் ?? நாம் எப்படி மற்றவர் கண்களுக்கு தோன்ற வேண்டும் என்று நாம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும், நம்மை பார்ப்பவர்கள் அல்ல. நாம் இப்படித்தான் தோன்ற வேண்டும் என்று முடிவுசெய்து சரியா நடந்து கொண்டால், மற்றவர்களால் எப்பொழுதும் நம்மை தவறாக பார்க்க முடியாது. இது இருபாலினத்தவர்கும் பொருந்தும். தவறாக இருந்தால் மன்னிக்கவும்....
  • Rate it:
  • 8
  •  
  • 1
Share this comment

selvam - kanniyaakumari ,இந்தியா
2011-02-14 12:27:37 IST Report Abuse
சென்னை முகிலன் அவர்களே.இக்கட்டுரை குற்றங்களை குறைக்க ஆவன செய்யும் கட்டுரை. சவுதியில் பெண்கள் முழு உடலையும் மூடியிருப்பதாலும், பாலியல் குற்றத்திற்கு உடனடி கடும் தண்டனை இருப்பதாலும், உலகிலயே பாலியல் குற்றம் சவுதியில் குறைவு. நம் நாட்டை குற்றம் குறைவாக உள்ள நாடாக மாற்ற அறிவுரை வழங்கினால் சந்தோசம். அதிகரிக்க ஒன்றும் செய்யாமல் இப்படியே விட்டுவிட்டால் நிச்சயம் முதலிடம் கிடைக்கும்....
  • Rate it:
  • 0
  •  
  • 1
Share this comment

poorboy - puthur,இந்தியா
2011-02-14 12:24:49 IST Report Abuse
இங்க திருடனாய் பார்த்து திருந்தணும் சொல்லாதேங்க. முதலில் திருடர்கள் உருவாகம தடுக்கணும். கூடவே தப்பு செஞ்சா மிகவும் கடுமையான தண்டனை குடுக்கணும், அதுவும் சீக்கிரமாக. நீங்க என்ன தான் PERFECT DRESS போட்டாலும் நிறைய பேரோட வக்கிர புத்திய மாத்த முடியாது. அதே சமயம், பெண்களும் DRESS விசயத்துல ரெம்ப கவனமாக இருக்கணும். ஏனா கடைசில நேரடி பிரச்னை எல்லாம் பெண்களுக்குத்தான் வருது. So Becareful & be Responsible....
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment

Narayanan Sakthi - chrnnai,இந்தியா
2011-02-14 11:04:44 IST Report Abuse
சிறுமிகளுக்கு ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்படும் கொடுமைக்கு நீங்கள் கூறுவது போல் அவர்கள்( பெற்றோர்,பள்ளி நிர்வாகம் ) காரணமல்ல,சமுகம். சமூகம் என்றவுடன் ஆண்கள் மட்டும் அல்ல. பெண்களும் தான். களங்கம் இல்லாத கண்களும் கலங்கப்படும் அளவிற்கு உள்ளே இருப்பது என்ன என்பதை மட்டும் வெளியில் தெளிவாக தெரியும் அளவிற்கு உடை அணிவதும், அந்த உடை எதற்கு என கேட்கும் அளவிற்கும் செயல் படுவதும் இந்த கால பெண்களின் முன்னேற்றம்.விசுவாமித்திரரும் ரம்பையின் ஆட்டத்தில் தன் தவ வலிமை இழந்தார் என புராண கதை தெரிந்தால் இந்த கருத்து எவ்வளவு தவறானது என்பதும் புரியும். ரம்பையின் வழிதான் இன்றைய பெண்களின் நவநாகரீக உடை. கண்கள் எதிரில் இருக்கும் பொருளை பார்க்கத்தான் செய்யும்.அதற்காக அது நல்லா இல்லை என்றால் திருப்பிக்கொள்ளலாமே தவிர பார்க்காமல் செல்ல முடியாது அழகாய் ரசிக்கவும் தெரியனும் என்ற கருத்துதான் முதலில் அனைவருக்கும் நினைவிற்கு வரும்....
  • Rate it:
  • 3
  •  
  • 2
Share this comment

andrews leo - paramakudi,இந்தியா
2011-02-14 09:59:25 IST Report Abuse
ஹலோ நிர்மலா நீ என்ன லூசா. உண்மையை சொன்னா உனக்கே ஏன் கோபம் வருது. பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பதற்கு அவர்கள் போடும் உடையும் ஒரு காரணம். பெண்களை மதிக்கவேண்டும் என்றால் முதலில் அந்த பெண் பெண்ணாக இருக்க கற்றுகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு நாகரிகம் என்ற பெயரில் உடை உடுத்தினால் அந்த பெண்ணை யாரும் மதிக்க மாட்டார்கள். நக்கல் தான் செய்வார்கள். ஒரு அப்பாவி ஆண் குற்றவாளி ஆவதற்கு பெண் உடுத்தும் உடை ஒரு காரணம் என்பது தான் உண்மை....
  • Rate it:
  • 15
  •  
  • 5
Share this comment

Mughilan - Chennai,இந்தியா
2011-02-14 08:00:50 IST Report Abuse
உச்சி முதல் உள்ளம்கால் வரை பெண்கள் மூடினாலும் சவுதியில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இறையாகிறார்கள். ஆண் குழந்தைகளை சிறுவயது முதலே ஒழுக்கமாக வளர்த்தல் , தவறு செய்தால் தண்டனை கடுமையக்குதல் ஒன்றே இதற்கு வழி ! வெப்பமான தமிழகத்தில் இன்றும் கிராமங்களில் வயதான பெண்கள் மேலாடை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று கேளுங்கள் எப்படி அவர்களுக்கு தொல்லை( அவர்களுடைய சிறு வயதில் ) ஒன்றும் இல்லை என்று ? பெண்களை தாக்கும் சுபாவம் நகரத்தில் உள்ள ஆண்களுக்கு வர காரணம் தவறு செய்தால் தப்பி விடலாம் பொலிசாரால் கண்டு பிடிக்க முடியாது என்பது தான். கிராமத்தில் சென்று ஒரு பெண்ணை சீண்டினால் அவளின் உறவினர் மற்றும் சக கிராமத்தினர் தன வீட்டு பிள்ளய்க்கு ஒன்று போல துடிப்பார்கள் . நகரத்தில் என்ன நடந்தாலும் நமக்கேன் வம்பு என்று ஒதிங்கி கொள்வர்கள். இந்த மனோபாவம் பெண் குழந்தைகளை குறி வைக்கும் கிரிமினல்களுக்கு சாதகமாக உள்ளது ! குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் குற்றம் செய்வது குறையும்....
  • Rate it:
  • 20
  •  
  • 0
Share this comment

Karthik Sadayappan - Singapore,சிங்கப்பூர்
2011-02-14 07:31:03 IST Report Abuse
"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று நீங்கள் சொல்லுவது ஒரு வாதத்திர்க்கு வைத்துக் கொண்டாலும், இக் கட்டுரையின் கருத்தை சற்றே உள் வாங்கி பார்த்தால் ஒளிந்திருக்கும் உண்மை புலப்படும். திருடனுக்கு, திருடுவதற்கான சந்தர்பத்தை ஏன் கொடுக்க வேண்டும் என்பதே இக் கட்டுரையின் சாராம்சம். நாம் நமது அளவில் சரியான நடவைக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுரையின் சாரம்சத்தில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஒரு பெண் குழந்தையின் தகப்பனாக இவ்விஷயத்தை மேலும் சீர் தூக்கி பார்த்து ஆவன செய்யவேண்டும் என்பதினை உணர்த்துவதாக அமைந்துள்ள இக் கட்டுரையை வெளியிட்ட தினமலர் பத்திரிக்கைக்கு நன்றிகள் பல. சமுதாய விழிபுணர்சியை ஏற்படுத்தும் இது போன்ற கட்டுரைகளை, பெற்றோர்கள் சரியான முறையில் உணர்ந்து நடக்க வேண்டும் என்பதே அடியேனின் அன்பான வேண்டுகோள். நன்றி....
  • Rate it:
  • 16
  •  
  • 0
Share this comment


உங்கள் கருத்தை பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்து பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
[X]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக