அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 2 மார்ச், 2011

சவால்களைச் சமாளித்தாக வேண்டும்!

1967-ம் ஆண்டு முதல் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சியினரே தமிழகத்தை மாறிமாறி ஆட்சி புரிந்து வருகின்றனர். தேசிய கட்சிகளால் இம்மாநிலத்தில் எழுச்சி பெற முடியவில்லை. இவ்விரு கட்சியினருடன் கூட்டணி அமைத்தே பெரும்பாலும் மற்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. அவ்வாறே மக்கள் பிரதிநிதிகளாகவும் அக்கட்சிகளின் பிரமுகர்கள் வலம் வருகின்றனர்.2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் வித்தியாசமானதாகத் தேர்தல் முடிவு இருந்தது. இருப்பினும், கூட்டணிக் கட்சிகள் வெளியிலிருந்து தந்த ஆதரவால், திமுக தனது ஆட்சிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலும் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தல் நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்களோ கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக உள்ளனர். மூன்றாவது அணி அமைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று பேசிவந்த தலைவர்களும், யாரோடு கூட்டணி சேரலாம் என்று யோசிக்கின்றனர்.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்பாடுபட்டாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று திமுகவும், இழந்த ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று அதிமுகவும் கங்கணம் கட்டி செயல்பட்டு வருகின்றன. இதற்காகக் கடந்த சில மாதங்களாகவே லெட்டர் பேடு கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை தங்கள் அணியில் சேர்த்துவிட அவை போராடி வருகின்றன.இவ்விரு கட்சிகளின் அணுகுமுறையைத் தெரிந்துக் கொண்ட மற்ற கட்சித் தலைவர்களும் சுதாரித்துக் கொண்டுள்ளனர்.அவ்விரு கட்சித் தலைமைக்கு விசுவாசமாக தங்களது கட்சிகளில் உள்ள முன்னணித் தலைவர்களை இரு பிரிவாகப் பிரித்து, ஒரே நேரத்தில் இரு கட்சித் தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.மறைமுகமாக நடந்துவந்த பேச்சுவார்த்தையை கடந்த சில நாள்களாக தேர்தல் தொகுதி பங்கீடுக் குழுக்களை அமைத்து அதிகாரப்பூர்வமாகவே தொடங்கி உள்ளனர்.இப்பேச்சுவார்த்தை குறித்து வெளியாகும் செய்திகளைப் பார்க்கும்போது, ஒவ்வொரு கட்சியும் குறைந்தது 5 முதல் 80 தொகுதிகள் வரை கேட்கின்றன.குறிப்பிட்ட சில பகுதிகளில் செல்வாக்கு பெற்று, சில ஆயிரம் வாக்குகள் வைத்துள்ள கட்சிகள்கூட அதிக இடங்களுக்கு ஆசைப்படுகின்றன.இதுமட்டுமன்றி, ஆட்சியில் பங்கு, மாநிலங்களவைத் தேர்தலில் இடம், வரவுள்ள சட்டமேலவைத் தேர்தலில் இடம், வாரியத் தலைவர்கள் வாய்ப்பு உள்ளிட்டவற்றில் இவை பங்கு கேட்கத் தவறுவதில்லை.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 50 முதல் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசமே வெற்றி, தோல்வியைத் தீர்மானித்தன.இதனால், அணியில் கட்சிகளை இழக்க நேரிட்டு அவர்களால் சில தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு பாதித்துவிடக் கூடாது என்று திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் யோசிக்கின்றன. இதனால், அவர்களுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துகின்றனர்.இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தொகுதிகளைக் கூட்டினால், திமுகவோ அல்லது அதிமுகவோ 100-க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடும் நிலையே தென்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தையோ தொடர்ந்து நடக்கிறது.தொகுதி ஒப்பந்தம் போட்ட கட்சிகள்கூட, தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, கூடுதல் தொகுதிகளை கேட்கின்றன. இது பேச்சுவார்த்தையோ அல்லது பேரமோ என்பது தெரியவில்லை.இப்போதைக்கு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எவ்வளவு தொகுதிகள் பெறுவது என்பதை அதன் தலைவர்கள் சிந்திக்கின்றனர்.தொகுதி உடன்பாடு முடிந்தவுடனே கட்சியினரைத் திருப்திப்படுத்தும் வகையில் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியாளர்களைச் சமாளிக்கவும் வேண்டும். பின்னரே தங்களது வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட மக்களைக் கவர (!) வேண்டும். சவால்களைச் சமாளித்தாக வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக