வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் கூடலூர் நகராட்சி பொன் விழா தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு தேர்தலின் நடைமுறைகள், வாக்காளர்களின் கடமைகள் , வாக்களிப்பதன் அவசியம் மற்றும் மின்னணு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் முறைகள், வாக்காளர் பட்டியல், பெயர் பதிவு முறைகள் 49 "o" வாக்குகள் எண்ணுதல் கடை பிடிக்கும் நடைமுறைகள் போன்ற வாக்காளர்கள் சார்ந்த விழிப்புணர்வு தகவல்களை கூடலூர் வட்டாட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் காந்தி, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் ஆகியோர் விளக்கமளித்தனர் நிகழ்ச்சிக்கு கணினி பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிதரன் தலைமை தங்கினார் பயிற்சி நிலைய ஆசிரியர் அபுதாகிர் வரவேற்றார். சர்புதீன் நன்றி கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக