அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 31 ஜனவரி, 2015

பந்தலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் 31.01.2015


பந்தலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பந்தலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை  தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய  செயலாளர் பொன் கணேசன்,  ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலர் சுப்பிரமணி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், சமுக ஆர்வலர்கள் காளிமுத்து செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் கணேஷன் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் அமராவதி ராஜன்   உதகை அரசு மருத்துவமனை கண் மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 150.கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  இதில் 20 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் முகாமில் சேவை புரிந்தனர்.
முகாமில் கண் தொழில் நுட்புனர் கலாவதி ஸ்ரீதர், கூடலூர்  நுகர்வோர் மைய துணை தலைவர் செல்வராஜ், மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகி  சந்திரன்,  மருத்துவமனை உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


















கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

















pls visit our webs http://cchepnlg.blogspot.in http://cchepeye.blogspot.in http://consumernlg.blogspot.in

வெள்ளி, 30 ஜனவரி, 2015

மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினத்தினை முன்னிட்டு

பந்தலூர் பஜாரில் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  மகாத்மா காந்தி கடந்த 1948ம் ஆண்டு சுட்டு கொல்லப்பட்டதன் 67வது நினைவு தினத்தினை முன்னிட்டு பந்தலூரில் நடைபெற்ற நினைவு தினத்திற்கு மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் தலைவர் நவுசாத் தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், ஓய்வு பெற்ற மருந்தாளுனர் ஆண்டனி,  மகாத்மா காந்தி பொது சேவை மைய துணை தலைவர் அகமது கபீர்  முன்னிலை வகித்தார்.  மைய நிர்வாகிகள் சலீம், ராஜாராம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவபடத்திற்கு மலர் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மது இல்லா தமிழகத்தினை உருவாக்க தமிழக அரசினை வலியுறுத்துவது, மதுவின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, போதையின் பிடியில் சிக்கியவர்களை உரிய சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்க மாவட்டந்தோறும் மறுவாழ்வு மையங்களை அமைக்க அரசை வலியுறுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.  









http://cchepnlg.blogspot.in/







http://cchepnlg.blogspot.in/
http://cchepnlg.blogspot.in/http://cchepnlg.blogspot.in/


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

செவ்வாய், 27 ஜனவரி, 2015

POLIYO feb 23



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

இலவச கண் சிகிச்சை முகாம் - பந்தலூர் 31.01.2015

இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் அரசு மருத்துவ மனையில் 31.01.2015  சனிக்கிழமை அன்று  காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.  கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சரிட்டபிள்  ட்ரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்தும் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் உதகை அரசு மருத்துவ மனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு அனைத்து விதமான கண் நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிப்பதோடு கண் புரை நோயினால் பாதிக்கபட்டவர்களுக்கு  உதகை அரசு மருத்துவ மனையில்  முறையான லேசர் முறையில் இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்து தரப்படும். கண் புரை அறுவை சிகிச்சை தேவை உள்ளவர்கள் குடும்ப அட்டை நகல் எடுத்து வரவும்.  உதவிக்கு ஆள் தேவை படின் உடன் ஒருவரை அழைத்து வரவும்.  கண் புரை அறுவை சிகிச்சை, மருந்துகள், கருப்பு கண்ணாடி, உணவு ஆகியன இலவசமாக வழங்கப்படும்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின்

இப்போது நீங்கள் ?

இதற்கு முந்தைய பதிவில், சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் நகலை கொடுத்திருந்தேன். அதற்கு காரணம், நீதிமன்றம் எப்படி வழக்கை பரிசீலிக்கிற்து என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. இப்பொழுது தீர்ப்பின் அடிப்படையில் உங்களுக்கு விளக்கம் தருகிறேன்.

A. சென்னை, வேளச்சேரியை சார்ந்த K.S. Sriram என்பவர், சென்னை அடையாரி லிருக்கும் விவேக் அன்கோ -வில் ஒரு கெல்வினேட்டர் ரெப்பிரிஜியேட்டர் ஒன்றை வாங்கினார். ஆனால் அது ஆரம்பம் முதலேயே சரியாக வேலை செய்ய வில்லை. எனவே அவர் உடனடியாக் விவேக் அன்கோவின் சர்வீஸ் செண்டருக்கு புகார் செய்தார். அவர்கள் மேற்படி பழுதை சரி செய்ய முடியாது என கூறி விட்டனர். எனவே அவர் சர்வீஸ் செண்டருக்கு ஈ- மெயில் மூலம் புகார் செய்துவிட்டார். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பினார். பதில் எதுவும் கொடுக்காததால், அவர் கீழ் கண்ட கோரிக்கைக்காக நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

1. இந்த ரெப்பிரிஜியேட்டருக்கு பதில் புதிய ஒன்று மாற்றி தரவேண்டும்.
2. மன உளைச்சல் போன்றவைகளுக்காக Rs. 15,000 / - நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
3. வழ்க்கு தொடர ஆகும் செலவுக்கு வழக்கு தொகையாக Rs. 1,000 /-வழங்கவேண்டும்.
மேற்படி மனு ( Complaint ) அதற்கு ஆதாரங்களையும் ( Proof Affidavits ) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆதாரங்கள் தீர்ப்பின் நகலில் Complainant Doccuments என குறிப்பிடப்பட்டுள்ள ( EX. A1 to EX. A6) ஆவணங்களின் நகல்களாகும்.

மேற்படி மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர் மனுதாரர்களுக்கு (OppositeParty) நீதி மன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

B. எதிர் தரப்பினர் அதாவது விவேக் அன் கோ, மேற்படி குற்றச்சாட்டைமறுத்து பதில் மனு ( Version ) தாக்கல் செய்தனர். அதில், மனுதாரருக்கு ரெப்பிரிஜி யேட்டர் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். தாங்கள் விற்பனையாளர் என்றும், உற்பத்தியாளரையும் எதிர்மனுதாரராக சேர்க்கப்படவில்லை. எனவே இந்த குறைபாட்டிற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என கூறப்பட்டது. ஆனால் அவர்கள் தரப்புக்கு ஆதாரமாக் எவ்வித ஆவணங்களும் ( Proof affidavit - Opposite Party Doccuments ) கொடுக்கப்படவில்லை.

C. வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர் மனுதாரின் ஆட்சேபணையை, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவை மேற் கோள் காட்டி நிராகரித் தது.

1. மனுதாரருக்கு, எதிர் மனுதாரர் பழைய ரெப்பிரிஜியேட்டருக்கு பதில் புதிய ஒன்றை மாற்றி கொடுக்க வேண்டும்.
2. நஷ்ட ஈடாக மனுதாரருக்கு Rs. 5,000 /- வழங்கவேண்டும்.
3. நீதிமன்ற செலவாக Rs.1000 /- வழங்கவேண்டும்.

இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இப் பதிவின் மூலம் தாங்கள் வழக்குக்கு தேவையாக எந்தெந்த ஆவணங்களை ஆதாரமாக நீதிமன்றத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதையும், வழக்கை நீதிமன்றம் எவ்விதம் பரிசீலிக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு இருப்பீர்கள். அதோடு சில நீதிமன்ற சொற்களையும் தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.

நுகர்வோர் வழக்கு எண்:------------------ C C No.
மனுதாரர் ----------------------------------- Compainant.
எதிர் மனுதாரர்------- -----------------------Opposite Party.
மனு ------------------------------------------ Petition.
எதிர் மனு------------------------------------- Version.
ஆதார ஆவண பிரமாண வாக்குமூலம் -- Proof Affidavit.
ஆதார ஆவணங்கள்------------------------- EX ( Exhibit ).

இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தாரளமாக் கேளுங்கள்.
இப்பொழுது நீங்கள் நுகர்வோர் வழக்கு தொடரும் அளவிற்கு விஷயங்களை அறிந்து விட்டீர்கள் !. இப்பொது நீங்கள் பாதி வழக்கறிஞர் தான்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

இலவச கல்வி உரிமை சட்டம் 2009

இலவச கல்வி உரிமை சட்டம் 2009 -  யுத்தம் ஆரம்பித்து விட்டது !

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி "இலவச கல்வி உரிமை சட்டம்"-தை மாநிலங்கள் அமுல்படுத்துவது தொடர்பான ஆட்சேபணையை குறிப்பிட்டு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
1.  மத்திய அரசு மக்களுடைய நலனுக்காக இதை செய்ய  உண்மையிலேயே விரும்புமானால், இச்சட்டத்தை அமுல்படுத்த மாநிலங்களுக்கு ஏற்படும் செலவு தொகையை, மத்திய அரசே வழங்க வேண்டும்.
2.  இச்சட்டத்தை அமுல் படுத்த  உ.பி மாநிலத்திற்கு சுமார் ஆண்டு ஒன்றுக்கு 18,000 கோடி ரூபாய் தேவை. இதில் 45% தொகையான ரூபாய் 8,000 கோடியை உ.பி. அரசு செலவு செய்ய வேண்டும். இது மாநில அரசிற்கு கஷ்டமான காரியமாகும்.
3. இச்சட்டத்தை அமுல் படுத்துவதற்கு முன்பே மாநில அரசுகளுடன் கலந்து பேசி, தேவையான நிதியை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் செய்யப்படவில்லை.
4. இச்சட்டத்தை அமுல்படுத்த அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
5. இதனை அமுல்படுத்த 4,596 தொடக்க பள்ளிகளையும்( PRIMARY SCHOOLS) , 2,349 நடு நிலை பள்ளிகளையும் (UPPER PRIMARY SCHOOLS)  புதிதாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இதற்கு 3,800 கோடி ரூபாய்கள் தேவை.
6. 3.25 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவேண்டும் .
7. நடு நிலை பள்ளிகளுக்கு 67,000 நிரந்திர ஆசிரியர்களையும், 44,000 பகுதி நேர ஆசிரியர்களைய்ம் நியமிக்க வேண்டியுள்ளது. இதனால் ஊதிய செலவாக ஆண்டு ஒன்றுக்கு 10,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
8. தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு செய்வதால், அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய சுமார் 3,000 கோடி வழங்கவேண்டும்.
இதுதான் கடிதத்தின் சாராம்சம்.
ஏன் இந்த எதிர்ப்பு?
இத்திட்டத்தை முழுமையாக செயல் படுத்த தன்னிடமும் நிதிவசதி இல்லை. மாநில அரசுகளிடமும் இல்லை என்பது தெரிந்திருந்தும், மத்திய அரசு அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்துள்ளது.அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இது சாதனை பட்டியலில் சேர்க்கப்படும். எதிர்கட்சியான மாயாவதி எப்படி இதை ஒப்புக்கொள்வார்?
மத்திய அரசும் மாநில அர்சுகளும் இணைந்து நிறைவேற்றப்படவேண்டிய இத்திட்டத்தை பற்றி மாநிலங்களுடன் விரிவான விவாதம் நடத்தாமல், தன்னிச்சையாக செயல்பட்டது தவறு 
இது ஆரம்பம் தான். விரைவில் மேற்கு வங்கம், கேரளா என ஒவ்வொரு மாநிலமும் ஆட்சேபணை குரல் எழுப்பும். .

ஆக மொத்தத்தில்  இச்சட்டமும்  ஏட்டு சுறைக்காயே என்பதில் சந்தேகம் இல்லை.

ஏப்ரல் மாதம் 1-ம் தேதியன்று " Right of Children to Free and Compulsory Education Act 2009." என்ற மத்திய அரசு சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் என்ன சொல்லுகிறது, அது எந்த அளவில் செயல் படுத்தப்படும் என்பதை பார்க்கலாம்.
சட்டம் என்ன சொல்லுகிறது?
1.  6 வயது முதல் 14 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அவர்களின் அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது.
2.  அருகாமையிலுள்ள அரசு, அரசு சார்பு கல்வி நிலையங்கள், இவர்களுக்கு கல்வி வசதியளிக்க வேண்டும்.
3.  குழந்தைகளின் வயதுக்கேற்ப  வகுப்பில் சேர்க்கப்படுவர். அதாவது 6 வயது குழந்தையை 1ம் வகுப்பு, 7 வயது குழந்தை 2 ம் வகுப்பு etc. இவ்விதம் ஆரம்பத்திலிருந்து இல்லாமல், நேரடியாக 2,3,4,5,6,7& 8-ம் வகுப்புகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, விஷேச பயிற்சி அளிக்கப்படும்.
4. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் பள்ளிகள் அமைக்கப்படவேண்டும். முறையான பயிற்சி பெற்ற தேவையான ஆசிரியர்க்ளை நியமிக்க வேண்டும். வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், நூலகம், உபகரணங்கள் இவை அவசியம் தேவை.
5. இதனால் மாநில அரசுக்கு ஏற்படும் செலவுத்தொகையில், அதாவது அதிகப்படியாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் ஊதியம், வகுப்பறைகள் கட்டுவதற்கான செலவு, உபகரணங்கள் போன்றவற்றிற்கு தனது பங்காக 55%
மத்திய அரசு வழங்கும்.
6. தனியார் கல்வி நிலையங்களில், சேர்க்கப்படும் மாணவர்கள் எண்ணிக் கையில் 25 சதவிகிதத்தை பொருளாதாரம், சமூகம் இவற்றில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கி இலவச கல்வி வழங்கவேண்டும்.
இது தான் இச்சட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும்.
சில புள்ளி விபரங்கள்
1. அரசு புள்ளிவிபரப்படி இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. இதில் பள்ளிக்கூடம் செல்லாதவர்களின் எண்ணிக்கை 92 லட்சம் என அரசு கூறுகிறது.
2.  இத்திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 34,000 கோடி ரூபாய் வீதம் ஆண்டுகளுக்கு 1.7 லட்சம் கோடி ரூபாய் தேவை என " University of Education Planning and Administration "கூறுகிறது.
3. இத்திட்டத்திற்கு சுமார் 12 லட்சம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை.
சில கேள்விகள்.
1.  1.7 லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும் இத் திட்டத்திற்கு சுமார் 90,000 கோடி தனது பங்காக மத்திய அரசு செலவு  செய்ய வேண்டும். இத்தொகை அர்சிடம் உபரி இருப்பு தொகையாக உள்ளதா? அல்லது வ்ரியாக வரும் வருமானத்திலிருந்து செலவு செய்யப்படும் என்றால், எந்த இனத்திலிருந்து பெறப்படும்?
2.  ஏற்கனவே மாநில அரசுகள் கல்விக்காக செலவு செய்து கொண்டிருக்கும் பொழுது, மத்திய அரசின் இத்திட்டத்திற்காக  செலவு செய்வார்களா? 
3.  மீதி தொகையாகிய 80,000 கோடியை ஜம்மு, காஷ்மீர் நீங்கலாக உள்ள அனைத்து மாநிலங்களும்  செலவு செய்ய வேண்டியுள்ளது. மாநிலங்களின் நிதி நிலைமை அந்த அளவிற்கு உள்ளதா? 
4.  மத்திய அரசிட்மிருந்து  பெறப்படும் 55% தொகை இத்திட்டத்திற்குத்தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு என்ன உத்திரவாதம்? 
5. பள்ளிக்கூடம் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 92 லட்சம் என கூறப்படுவது  எதன் அடிப்படையில். சமீபத்தில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதா?
இது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு மத்திய அரசிடமிருந்து  பதில் இல்லை. 
இந்த சூழ்நிலையில், மிகவும் அவசியமான இத்திட்டத்தை முழுமையாக செயல் படுத்த வாய்ப்பே இல்லை.
எனவே இச்சட்டமும்  ஏட்டளவில்தான் இருக்கும். 
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

தகவல் அறியும் உரிமை சட்டம் - RTI Act

தகவல் அறியும் உரிமை சட்டம் - RTI Act

சட்டம் என்பது பல தரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய ஒன்று. உதாரணத்துடன் சொல்லப்போனால், மருந்து பாட்டிலில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிள் மாதிரி. அதில், என்னென்ன மூலப்பொருட்கள் கலந்துள்ளது, அதன் விகிதாச்சாரம், உபயோகப்படுத்தும் முறை, பதுகாப்பு, உற்பத்தி செய்த தேதி மற்று காலாவதியாகும் தேதி, விலை, உற்பத்தியாளர் விபரம் போன்றவை இருக்கும். உபயோகிக்கப்போகும் நமக்கு தேவையானது  உபயோகிக்கும் முறை ( DOSAGE  ) ,  காலாவதியாகாத மருந்தா? என்ற விபரங்கள் மட்டுமே. சட்டத்தில் இருக்கும் எல்லா விபரங்களும் நம்மை போன்றவர்களுக்கு தேவை இல்லாத ஒன்று. எனவே இச்சட்டத்தின் மூலம் என்னென்ன  தகவல்களை யாரிடமிருந்து  எப்படி பெறலாம் என்பதை மட்டும் புரியும் விதத்தில் எளிமையாக கீழே தரப்பட்டுள்ளது.

1.    தகவல்கள் (  Information ) என்றால் என்ன? 

SEC 2.  ( f ) "information" means any material in any form, including records, documents, memos, e-mails, opinions, advices, press releases, circulars, orders, logbooks, contracts, reports, papers, samples, models, data material held in any electronic form and information relating to any private body which can be accessed by a public authority under any other law for the time being in force;
அதாவது, கிட்டத்தட்ட நமக்கு தேவையான எல்லா தகவல்களையும் இச்ச்ட்டப்படி பெற முடியும்.

2.  யாரிடமிருந்தெல்லாம் பெறமுடியும்? 

பொது அதிகார அமைப்பு  எனப்படும்  PUBLIC AUTHORITY.
எதெல்லாம் பொது அமைப்பு என்ற கேள்வி எழுவது சரியே. சட்டம் என்ன சொல்கிறது?
2. ( h ) "public authority" means any authority or body or institution of self- government established or constituted— (a) by or under the Constitution; (b) by any other law made by Parliament; (c) by any other law made by State Legislature; (d) by notification issued or order made by the appropriate Government, and includes any— (i) body owned, controlled or substantially financed; (ii) non-Government organisation substantially financed, directly or indirectly by funds provided by the appropriate Government;
அதாவது, அரசு அலுவலகங்கள், அரசு துறை நிறுவனங்கள், அரசின் நியுதவி பெறும் அமைப்புகள், மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளவைகள்.

3.  யாரிடம் தகவல் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்?  

 மத்திய அரசு மற்றும் மாநில அரசின்  ஒவ்வொரு துறையும்  பொது அதிகார அமைப்புஆகும்.  இச்சட்டப்படி ஒவ்வொரு அதிகார அமைப்பும் " பொது தகவல் அதிகாரி ( PUBLIC INFORMATION OFFICER)" மற்றும்  " மேல் முறையீட்டு அதிகாரி  ( APPELLATE AUTHORITY )"  களை நியமித்துள்ளது.
உதாரணம் 1   
நீங்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பல மாதங்க்ளாகியும் வழங்கப் படவில்லை என வைத்துக்கொள்வோம்அது பற்றிய தகவல் அறியவேண்டும். இது மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், தமிழக அரசின் சிவில் சப்ளை இலாகாவே பொது அதிகார அமைப்பாகும். எனவே இந்த இலாகாவின் பொது தகவல் அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர் 30 நாட்களுக்குள் தகவல் தரவேண்டும். அப்படி தரவில்லையெனில், அந்த இலாகாவின் மேல் முறையீட்டு அதிகாரிக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும். அதன் பின்பும் தகவல் வழங்கப்படவில்லை என்றால் மாநில தகவல் ஆணைய்த்திடம் 2-ம் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
உதாரணம் :2
அரசுடமை ஆக்கப்பட்ட வங்கியிடமிருந்து தகவல் பெறவேண்டும் என வைத்துக்கொள்வோம். இது மத்திய அரசு சம்பந்தப்பட்டது. வங்கியில் பொது தகவல் அதிகாரி மற்றும் மேல் முறையீட்டு அதிகாரி இருப்பார். அதற்கு மேல் மத்திய தகவல் ஆணையம் உண்டு.

வெப் சைட்டில் சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அதிகாரி மற்றும் அப்பீலேட் அதாரிட்டி பற்றிய விபரங்களை பார்த்துக்கொள்ளலாம். இத் தகவல்கள்  சம்பந்தப்பட்ட  அலுவலகங்களிலேயே  அறிவிப்பு பலகையில் போடப்பட்டிருக்கும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கல்விக்கடன் மாணவர்களின் உரிமை

கல்விக்கடன் மாணவர்களின் உரிமை - ஒரு விளக்கம்.

வ்ணக்கம் வலையுலக நண்பர்களே! எனது முந்தைய பதிவுக்கு பின்னூட்டம் போட்டதுடன் வாக்கும் போட்டு என்னை ஊக்கப்படுத்தியுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி. அந்த பதிவை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 686 ஆகும் . 21 வாக்குகள் , புதிதாக என்னை பின் தொடரும்  நண்பர்கள் 12. என்னால் நம்பவே முடியவில்லை! இதை எனக்கோ அல்லது எனது எழுத்துக்கோ கிடைத்த அங்கீகாரமாக நான் கருதவில்லை. என்னுடன் சேர்ந்து அநீதியை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கையாகவே நினைக்கிறேன். மீண்டும் நன்றி!.

 மத்திய அரசின் கல்விக்கடன் திட்டம்.

திட்டத்தின் நோக்கம் :  பொருளாதார நிலைய்ல் பின் தங்கியுள்ளவர்கள் என்ற காரணத்திற்காக, எந்த ஒரு மாணவனுக்கும் அல்லது மாணவிக்கும் உயர் கல்வி மறுக்கப்படக்கூடாது. அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக  கொண்டு வரப்பட்டதே இத்திட்டம்.

வங்கிகளின் பங்கு ( ROLE ) :  எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை அரசு நேரடியாக மேற்கொள்ள முடியாது. எனவே இத்திட்டம்  அரசு வங்கிகளின் மூலம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை பொறுத்த வரையில் வங்கிகள் தாமாக நிபந்தனைகளை  விதிக்கவோ அல்லது  தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப  செயல்படவோ முடியாது.  மொத்தத்தில்  கல்விக்கடனை பொறுத்த வரையில், அதை செயல்படுத்தும் வெறும் ஏஜெண்ட் தான்  அரசு வங்கிகள்.
கடன் உதவி பெற தேவையான தகுதிகள் : 

1மாணவர்  அல்லது மாணவி  இந்திய பிரஜையாக இருக்கவேண்டும்.

2.  தொழில் படிப்பு  ( PROFESSIONAL COURSE) அல்லது  தொழில் நுட்ப படிப்பில் ( TECHNICAL COURSE)  நூளைவுத்தேர்வு மூலமாக சேர்ந்திருக்க வேண்டும். இது வெளிநாடு மற்றும் இந்தியாவில்  கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொதுவானவை.

3.  இந்தியாவில் கல்வி கற்க 10 லட்சம் ரூபாயும், மெரிட் உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 15 லடசம் ரூபாயும், வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு  20 லடசம் ரூபாயும்,  25 லட்சம்  ரூபாயும்  வழங்கப்படும்.

4.  கல்விக்கட்டணம் , தங்கும் விடுதி கட்டணம், தேர்வு கட்டணம், புத்தகங்கள், கருவிகள், கணனி  ஆகியவற்றிற்கு தேவைப்படும் தொகையை மட்டுமே கடனாக பெற இயலும். வெளி நாட்டில் படிப்பவர்கள்  இத்துடன் பயண கட்டணத்தையும் செர்த்துக்கொள்ளலாம்.

5. முன் செலுத்த வேண்டிய தொகை (  MARGIN): 4 லட்சம் வரையான தொகைக்கு  எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.  அதற்கு மேற்பட்ட தொகைக்கு  இந்தியாவில் கல்வி பயிலுபவர்கள் 5% , வெளிநாட்டில் பயிலுபவர்கள்  15% செலுத்த வேண்டும்.


7. செக்யூரிட்டி ( SECURITY ) :  4 லட்சம் வரையிலான தொகைக்கு  மாண்வருடன் சேர்ந்து பெற்றோரும்  கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். (COOBLIGATION).  4 லட்சத்திற்கு மேல் 7.5 லட்சம் வரை  பெற்றோருடன் பொருத்தமான மூன்றாம் நபர்  ஜாமின் தேவை. 7.5 லட்சத்திற்கு மேல்  கடன் தொகைக்கு தாகுந்தவாறு  சொத்து ஜாமின் தேவை.

7. கடனை திருப்பி அளிக்கவேண்டிய காலம் ( REPAYMENT  PERIOD):  படிப்பு காலம் ( COURSE PERIOD) முடிந்ததிலிருந்து  ஒருவருடம் , அல்லது வேலை பார்க்க ஆரம்பித்ததிலிருந்து ஆறு மாதம். இதில் எது முன்பாக வருகிறதோ அதன்படி.
 
8.  குடும்ப வருமானம் :  இவ்வளவு வருமானம் இருக்கவேண்டும்  என்ற நிபந்தனை எதுவும் இல்லை.

9. மாணவர் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வங்கி கிளையில் விண்ணப்பிக்க வேண்டும்.

10. கடனுதவி பெற அங்கிகரிக்கப்பட்ட படிப்புகள் :  இந்தியாவில்  - டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு,  மற்றும்  மின்னனு துறையால் அங்கீகரிக்கப்பட்ட  கணனி படிப்புகள். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு - Course of study abroad :Job-oriented professional/technical courses offered by reputed universities, MCA,MBA, MS etc.Courses conducted by CIMA - London, CPA in USA etc

11. வயது வரம்பு :   இந்தியாவில் பயிலும் மாணவர்களுக்கு  15 - 30 வயது. வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு  18 - 35 வயது.


இவைதான் கல்விக்கடன் பெற தேவையான தகவல்கள். இதில் குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்து நிபந்தனைகளும் எல்லா வங்கிகளுக்கும் பொதுவான ஒன்று.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, தேவையான ஆவணங்களுடன்  விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பரிசீலித்து முடிவெடுக்க வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள  காலக்கெடு -  15 நாட்களிலிருந்து 30 நாட்கள் .

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

லீகல் நோட்டீஸ்

லீகல் நோட்டீஸ் - திரவியநடராஜன்

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்றாலே, அது வக்கீல் மூலமாக அனுப்பப்படும் நோட்டீஸ் என்றே நாம் நினைக்கிறோம். அது தவறு. அதாவது எதிர் தரப்பினர் மீது, அவரது செயலுக்கு எதிப்பு தெரிவித்து எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கை பற்றிய அறிவிப்பு கடிதம் தான் அது. அதை நாமே அனுப்பலாம். நமக்கு அது பற்றிய விபரம் தெரியாத பட்சத்தில், வழக்கறிஞர் மூலமாக அனுப்பவேண்டும்.

நமது நாட்டு சட்டப்படி, வழ்க்கு தொடுப்பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் ( Opposite Party ) -தான் வழக்கு நடவடிக்கையில் நேரடியாக ப்ங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழ்க்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பினருக்கோ போதுமான சட்ட அறிவு இல்லாத நிலையில் வழ்க்கறிஞர் மூலமாக செய்ய வேண்டும்.

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்பது, நாம் அனுப்பும் நோட்டீஸ் மற்றும் வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் , இவை இரண்டையுமே குறிப்பிடும் சொல்லாகும். வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் அட்வகேட் நோட்டீஸ் / லாயர் நோட்டீஸ் ஆகும்.

லீகல் நோட்டீஸ் தயாரிப்பது எப்படி?

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அத்ற்கு ஒரு வருட உத்திரவாதம் உற்பத்தியாளரால் வழ்ங்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். வாங்கிய ஒரு சில நாட்களி லேயே அது பழுதடைந்து விடுகிறது. நீங்கள் எந்த கடைக்காரரிடம் வாங்கினீர்களோ, அவரிடம் புகார் செய்கிறீர்கள். அவர் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் டீலராக இருந்தால் அவரே பழுது பார்த்து கொடுப்பார். அப்படி இல்லை என்றால் கம்பெனியின் சர்வீஸ் செண்டர் முகவரியை தருவார். அங்கு புகார் செய்கிறீர்கள். அவர்கள் பழுது பார்த்து த்ருகிறார்கள். மறுபடியும் குறுகிய காலத்தில் பழுது ஏற்படுகிறது. மீண்டும் பழுது பார்க்கப்படுகிறது. பழுதடைவது தொடர்கிறது . இதனால், உங்களால் தொடர்ச்சியாக மிஷினை பயன்படுத்தாத நிலை. இந்நிலை யில், உங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பொருள் தரம் குறைந்தது அல்லது உற்பத்தியில் குறைபாடுள்ள பொருள் (Manufacturing Defect) என கருதுகிறீர்கள். அதனால் அந்த மிஷினுக்கு பதில் வேறு மிஷின் தருமாறு கேட்க்கிறீகள். கம்பெனிக்கரர்கள் அவ்விதம் செய்ய மறுக்கிறார்கள். அதனால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர போகிறீர்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

இந்த விஷயத்தில், விற்பனையாளரை பொறுத்த வரையில் அவர் மீது எவ்வித தவறும் கிடையாது. எனவே வழக்கில் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சேர்த்தாலும் தவறு கிடையாது.


லீகல் நோட்டீஸ்

BY REGISTERD POST WITH A/D, OR BY FAX OR E-MAIL

அனுப்புநர்: ( இது உங்கள் முகவரி)
எஸ். சுப்பிர மணியன்,
14, 18 வது மெயின் ரோடு,
அண்ணா நகர்
சென்னை -600 040.

பெறுநர்:
LG Electronics Pvt Ltd,
AA11, 2nd avenue,
Fatima Tower,
Anna Nagar West,
Chennai - 600 040.

சட்ட பூர்வ அறிவிப்பு.


தங்கள் நிறுவன தயாரிப்பாகிய LG FAWM -9987 மாடல் வாஷிங் மெஷின் ஒன்றை M/s. A shok Traders , 2nd Main Road, Anna Nagar West, Chennai -40 என்ற் டீலரிடம் 5-6-2009 ல் வாங்கியுள்ளேன். பில் நம்ம்பர். 5678 / 5-6-2009. மேற்படி மிஷின் இரண்டு மாத காலத்தில் மூன்று முறை பழுது ஏற்பட்டு, தங்கள் சர்வீஸ் செண்டரால் சரி செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. 25-6-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 5660
2. 15 -7-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 9078
3. 10-8-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 10233
இதனால் என்னால் தொடர்ந்து உபயோகிக்க இயலவில்லை. இவ்விதம் அடிக்கடி பழுது ஏற்பட காரணம், எனக்கு விற்பனை செய்யப்பட்ட மெஷின் உற்பத்தி குறைபாடான ஒன்றாகும். எனவே உடனடியாக மேற்படி மெஷினுக்கு பதில், வேறு ஒரு மெஷின் மாற்றித்தரும்படி தங்களிடம் கூறியதற்கு மறுத்து விட்டீர்கள்.

எனவே, மேற்படி மெஷினை மாற்றி தர வேண்டும் என, தங்கள் நிறுவன்த்தின் மீது மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் , இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். அவ்விதம் தெரியப்படுத்தாத பட்சத்தில், மேற்படி குற்றசாட்டை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் பிரசனையை சுமுகமாக தீர்க்க விரும்பவில்லை எனவும் முடிவு செய்து, முறைப்படி வழக்கு தாக்கல் செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

இப்படிக்கு
( கையொப்பம்)
(எஸ். சுப்பிரமணியன்.)
நாள்:----------------

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்