தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன?
சட்டம் என்பது பல தரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய ஒன்று. உதாரணத்துடன் சொல்லப்போனால், மருந்து பாட்டிலில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிள் மாதிரி. அதில், என்னென்ன மூலப்பொருட்கள் கலந்துள்ளது, அதன் விகிதாச்சாரம், உபயோகப்படுத்தும் முறை, பதுகாப்பு, உற்பத்தி செய்த தேதி மற்று காலாவதியாகும் தேதி, விலை, உற்பத்தியாளர் விபரம் போன்றவை இருக்கும். உபயோகிக்கப்போகும் நமக்கு தேவையானது உபயோகிக்கும் முறை ( DOSAGE ) , காலாவதியாகாத மருந்தா? என்ற விபரங்கள் மட்டுமே. சட்டத்தில் இருக்கும் எல்லா விபரங்களும் நம்மை போன்றவர்களுக்கு தேவை இல்லாத ஒன்று. எனவே இச்சட்டத்தின் மூலம் என்னென்ன தகவல்களை யாரிடமிருந்து எப்படி பெறலாம் என்பதை மட்டும் புரியும் விதத்தில் எளிமையாக கீழே தரப்பட்டுள்ளது.
1. தகவல்கள் ( Information ) என்றால் என்ன?
பொது அதிகார அமைப்பு எனப்படும் PUBLIC AUTHORITY.
அதாவது, அரசு அலுவலகங்கள், அரசு துறை நிறுவனங்கள், அரசின் நியுதவி பெறும் அமைப்புகள், மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளவைகள்.
3. யாரிடம் தகவல் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்?
மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஒவ்வொரு துறையும் பொது அதிகார அமைப்புஆகும். இச்சட்டப்படி ஒவ்வொரு அதிகார அமைப்பும் " பொது தகவல் அதிகாரி ( PUBLIC INFORMATION OFFICER)" மற்றும் " மேல் முறையீட்டு அதிகாரி ( APPELLATE AUTHORITY )" களை நியமித்துள்ளது.
வெப் சைட்டில் சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அதிகாரி மற்றும் அப்பீலேட் அதாரிட்டி பற்றிய விபரங்களை பார்த்துக்கொள்ளலாம். இத் தகவல்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலேயே அறிவிப்பு பலகையில் போடப்பட்டிருக்கும்.1. தகவல்கள் ( Information ) என்றால் என்ன?
SEC 2. ( f ) "information" means any material in any form, including records, documents, memos, e-mails, opinions, advices, press releases, circulars, orders, logbooks, contracts, reports, papers, samples, models, data material held in any electronic form and information relating to any private body which can be accessed by a public authority under any other law for the time being in force;
அதாவது, கிட்டத்தட்ட நமக்கு தேவையான எல்லா தகவல்களையும் இச்ச்ட்டப்படி பெற முடியும்.
2. யாரிடமிருந்தெல்லாம் பெறமுடியும்?
பொது அதிகார அமைப்பு எனப்படும் PUBLIC AUTHORITY.
எதெல்லாம் பொது அமைப்பு என்ற கேள்வி எழுவது சரியே. சட்டம் என்ன சொல்கிறது?
2. ( h ) "public authority" means any authority or body or institution of self- government established or constituted— (a) by or under the Constitution; (b) by any other law made by Parliament; (c) by any other law made by State Legislature; (d) by notification issued or order made by the appropriate Government, and includes any— (i) body owned, controlled or substantially financed; (ii) non-Government organisation substantially financed, directly or indirectly by funds provided by the appropriate Government;அதாவது, அரசு அலுவலகங்கள், அரசு துறை நிறுவனங்கள், அரசின் நியுதவி பெறும் அமைப்புகள், மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளவைகள்.
3. யாரிடம் தகவல் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்?
மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஒவ்வொரு துறையும் பொது அதிகார அமைப்புஆகும். இச்சட்டப்படி ஒவ்வொரு அதிகார அமைப்பும் " பொது தகவல் அதிகாரி ( PUBLIC INFORMATION OFFICER)" மற்றும் " மேல் முறையீட்டு அதிகாரி ( APPELLATE AUTHORITY )" களை நியமித்துள்ளது.
உதாரணம் 1
நீங்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பல மாதங்க்ளாகியும் வழங்கப் படவில்லை என வைத்துக்கொள்வோம். அது பற்றிய தகவல் அறியவேண்டும். இது மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், தமிழக அரசின் சிவில் சப்ளை இலாகாவே பொது அதிகார அமைப்பாகும். எனவே இந்த இலாகாவின் பொது தகவல் அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர் 30 நாட்களுக்குள் தகவல் தரவேண்டும். அப்படி தரவில்லையெனில், அந்த இலாகாவின் மேல் முறையீட்டு அதிகாரிக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும். அதன் பின்பும் தகவல் வழங்கப்படவில்லை என்றால் மாநில தகவல் ஆணைய்த்திடம் 2-ம் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
உதாரணம் :2
அரசுடமை ஆக்கப்பட்ட வங்கியிடமிருந்து தகவல் பெறவேண்டும் என வைத்துக்கொள்வோம். இது மத்திய அரசு சம்பந்தப்பட்டது. வங்கியில் பொது தகவல் அதிகாரி மற்றும் மேல் முறையீட்டு அதிகாரி இருப்பார். அதற்கு மேல் மத்திய தகவல் ஆணையம் உண்டு.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக