அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 27 ஜனவரி, 2015

இலவச கல்வி உரிமை சட்டம் 2009

இலவச கல்வி உரிமை சட்டம் 2009 -  யுத்தம் ஆரம்பித்து விட்டது !

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி "இலவச கல்வி உரிமை சட்டம்"-தை மாநிலங்கள் அமுல்படுத்துவது தொடர்பான ஆட்சேபணையை குறிப்பிட்டு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
1.  மத்திய அரசு மக்களுடைய நலனுக்காக இதை செய்ய  உண்மையிலேயே விரும்புமானால், இச்சட்டத்தை அமுல்படுத்த மாநிலங்களுக்கு ஏற்படும் செலவு தொகையை, மத்திய அரசே வழங்க வேண்டும்.
2.  இச்சட்டத்தை அமுல் படுத்த  உ.பி மாநிலத்திற்கு சுமார் ஆண்டு ஒன்றுக்கு 18,000 கோடி ரூபாய் தேவை. இதில் 45% தொகையான ரூபாய் 8,000 கோடியை உ.பி. அரசு செலவு செய்ய வேண்டும். இது மாநில அரசிற்கு கஷ்டமான காரியமாகும்.
3. இச்சட்டத்தை அமுல் படுத்துவதற்கு முன்பே மாநில அரசுகளுடன் கலந்து பேசி, தேவையான நிதியை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் செய்யப்படவில்லை.
4. இச்சட்டத்தை அமுல்படுத்த அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
5. இதனை அமுல்படுத்த 4,596 தொடக்க பள்ளிகளையும்( PRIMARY SCHOOLS) , 2,349 நடு நிலை பள்ளிகளையும் (UPPER PRIMARY SCHOOLS)  புதிதாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இதற்கு 3,800 கோடி ரூபாய்கள் தேவை.
6. 3.25 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவேண்டும் .
7. நடு நிலை பள்ளிகளுக்கு 67,000 நிரந்திர ஆசிரியர்களையும், 44,000 பகுதி நேர ஆசிரியர்களைய்ம் நியமிக்க வேண்டியுள்ளது. இதனால் ஊதிய செலவாக ஆண்டு ஒன்றுக்கு 10,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
8. தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு செய்வதால், அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய சுமார் 3,000 கோடி வழங்கவேண்டும்.
இதுதான் கடிதத்தின் சாராம்சம்.
ஏன் இந்த எதிர்ப்பு?
இத்திட்டத்தை முழுமையாக செயல் படுத்த தன்னிடமும் நிதிவசதி இல்லை. மாநில அரசுகளிடமும் இல்லை என்பது தெரிந்திருந்தும், மத்திய அரசு அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்துள்ளது.அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இது சாதனை பட்டியலில் சேர்க்கப்படும். எதிர்கட்சியான மாயாவதி எப்படி இதை ஒப்புக்கொள்வார்?
மத்திய அரசும் மாநில அர்சுகளும் இணைந்து நிறைவேற்றப்படவேண்டிய இத்திட்டத்தை பற்றி மாநிலங்களுடன் விரிவான விவாதம் நடத்தாமல், தன்னிச்சையாக செயல்பட்டது தவறு 
இது ஆரம்பம் தான். விரைவில் மேற்கு வங்கம், கேரளா என ஒவ்வொரு மாநிலமும் ஆட்சேபணை குரல் எழுப்பும். .

ஆக மொத்தத்தில்  இச்சட்டமும்  ஏட்டு சுறைக்காயே என்பதில் சந்தேகம் இல்லை.

ஏப்ரல் மாதம் 1-ம் தேதியன்று " Right of Children to Free and Compulsory Education Act 2009." என்ற மத்திய அரசு சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் என்ன சொல்லுகிறது, அது எந்த அளவில் செயல் படுத்தப்படும் என்பதை பார்க்கலாம்.
சட்டம் என்ன சொல்லுகிறது?
1.  6 வயது முதல் 14 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அவர்களின் அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது.
2.  அருகாமையிலுள்ள அரசு, அரசு சார்பு கல்வி நிலையங்கள், இவர்களுக்கு கல்வி வசதியளிக்க வேண்டும்.
3.  குழந்தைகளின் வயதுக்கேற்ப  வகுப்பில் சேர்க்கப்படுவர். அதாவது 6 வயது குழந்தையை 1ம் வகுப்பு, 7 வயது குழந்தை 2 ம் வகுப்பு etc. இவ்விதம் ஆரம்பத்திலிருந்து இல்லாமல், நேரடியாக 2,3,4,5,6,7& 8-ம் வகுப்புகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, விஷேச பயிற்சி அளிக்கப்படும்.
4. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் பள்ளிகள் அமைக்கப்படவேண்டும். முறையான பயிற்சி பெற்ற தேவையான ஆசிரியர்க்ளை நியமிக்க வேண்டும். வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், நூலகம், உபகரணங்கள் இவை அவசியம் தேவை.
5. இதனால் மாநில அரசுக்கு ஏற்படும் செலவுத்தொகையில், அதாவது அதிகப்படியாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் ஊதியம், வகுப்பறைகள் கட்டுவதற்கான செலவு, உபகரணங்கள் போன்றவற்றிற்கு தனது பங்காக 55%
மத்திய அரசு வழங்கும்.
6. தனியார் கல்வி நிலையங்களில், சேர்க்கப்படும் மாணவர்கள் எண்ணிக் கையில் 25 சதவிகிதத்தை பொருளாதாரம், சமூகம் இவற்றில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கி இலவச கல்வி வழங்கவேண்டும்.
இது தான் இச்சட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும்.
சில புள்ளி விபரங்கள்
1. அரசு புள்ளிவிபரப்படி இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. இதில் பள்ளிக்கூடம் செல்லாதவர்களின் எண்ணிக்கை 92 லட்சம் என அரசு கூறுகிறது.
2.  இத்திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 34,000 கோடி ரூபாய் வீதம் ஆண்டுகளுக்கு 1.7 லட்சம் கோடி ரூபாய் தேவை என " University of Education Planning and Administration "கூறுகிறது.
3. இத்திட்டத்திற்கு சுமார் 12 லட்சம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை.
சில கேள்விகள்.
1.  1.7 லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும் இத் திட்டத்திற்கு சுமார் 90,000 கோடி தனது பங்காக மத்திய அரசு செலவு  செய்ய வேண்டும். இத்தொகை அர்சிடம் உபரி இருப்பு தொகையாக உள்ளதா? அல்லது வ்ரியாக வரும் வருமானத்திலிருந்து செலவு செய்யப்படும் என்றால், எந்த இனத்திலிருந்து பெறப்படும்?
2.  ஏற்கனவே மாநில அரசுகள் கல்விக்காக செலவு செய்து கொண்டிருக்கும் பொழுது, மத்திய அரசின் இத்திட்டத்திற்காக  செலவு செய்வார்களா? 
3.  மீதி தொகையாகிய 80,000 கோடியை ஜம்மு, காஷ்மீர் நீங்கலாக உள்ள அனைத்து மாநிலங்களும்  செலவு செய்ய வேண்டியுள்ளது. மாநிலங்களின் நிதி நிலைமை அந்த அளவிற்கு உள்ளதா? 
4.  மத்திய அரசிட்மிருந்து  பெறப்படும் 55% தொகை இத்திட்டத்திற்குத்தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு என்ன உத்திரவாதம்? 
5. பள்ளிக்கூடம் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 92 லட்சம் என கூறப்படுவது  எதன் அடிப்படையில். சமீபத்தில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதா?
இது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு மத்திய அரசிடமிருந்து  பதில் இல்லை. 
இந்த சூழ்நிலையில், மிகவும் அவசியமான இத்திட்டத்தை முழுமையாக செயல் படுத்த வாய்ப்பே இல்லை.
எனவே இச்சட்டமும்  ஏட்டளவில்தான் இருக்கும். 
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக