அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 27 ஜனவரி, 2015

தன் வழக்கை தானே விசாரித்து தீர்ப்பு

தன் வழக்கை தானே விசாரித்து தீர்ப்பு வழங்கப்போகும் உச்ச நீதிமன்றம் ..................?



இவர்தான் இன்றைய ஹீரோ திரு. S.C.அகர்வால். மத்திய அரசில் உயர் பதவிகள் நியமனம், நீதிபதிகள் நியமனம் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் நடைமுறை பற்றி " தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 " ன் கீழ் தகவல் கேட்டு  திக்கு முக்காட வைத்து கொண்டிருப்பவர். இவரைப்பற்றியும் இவரது சாதனைகளையும் பார்ப்போம்

2005-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் திரு.அர்விந்த் கெஜ்ரிவால் மூலம் " தகவல் அறியும் உரிமை சட்டம் " ( Right to information Act ) பற்றி  இவர் தெரிந்து கொண்டார். சட்டம் அமுலுக்கு வந்த அதே தினத்தில், தான் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பற்றி அனுப்பிய புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம் வேண்டும் என  இச்சட்டப்படி விண்ணப்பித்தார். அதற்கு      " தாங்கள் கேட்கும் விபரங்கள், இச்சட்டதின் கீழ் வழங்கப்பட் கூடியதல்ல " என மறுக்கப்பட்டது. இதன் பின்புதான்  முறைப்படி எப்படி மனு தயாரிக்கவேண்டும் , கேள்விகளை எப்படி கேட்க வேண்டும் என புரிந்து கொண்டார்.

இதுவரை இவர் அனுப்பிய மனுக்கள் 500க்கும் மேல். அதில் முக்கியமான ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம். இவர் உச்ச நீதிமன்ற பொது தகவல் அலுவலருக்கு (  PUBLIC INFORMATION OFFICER )  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்துள்ள அவர்களின் சொத்து விபரங்களை தருமாறு கேட்டு விண்ணப்பித்தார். மேற்படி அதிகாரி தகவல் தர மறுத்துவிட்டார். காரணம்,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் ஒரு பொது அதிகார அமைப்பு அல்ல ( PUBLIC AUTHORITY ).எனவே மேல் முறையீட்டு அதிகாரியிடம் மேல் முறையீடு செய்தார். அவரும்  பொது தகவல் அதிகாரியின் முடிவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். இந்நிலையில் மத்திய தகவல் ஆணையத்திடம் தனது 2-வது மேல் முறையீட்டை செய்தார்.
அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட ஆணையம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம்  " பொது அதிகார அமைப்பு " தான். எனவே               கேட்கப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்றம்,  இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதியரசர் எஸ். ரவீந்தர பட், ஆணையத்தின் உத்தரவை உறுதி படுத்தினார்.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம்  டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு  செய்தது. தலைமை நீதிபதி  A.P.ஷா, முரளிதர் மற்றும் விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய பென்ச் கீழ் கண்டவாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.

"கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்கள் சொத்து விபரத்தை அதிகார பூர்வமாக வெளியிட்டிருக்கும் பொழுது, நமக்கும் அந்த பொறுப்பு உண்டு. உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு அந்த பொறுப்பு அதிகம். எனவே இந்த நீதிமன்ற நீதிபதிகளாகிய நாங்களும் சொத்து விபரங்களை அடுத்த வாரத்தில் வெளியிடுகிறோம்" என கூறி தனி நீதிபதியின் உத்தரவு சரியானதே என , மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது.

தனது அலுவலகம், தனி அந்தஸ்து கொண்டது. தனது அலுவலம் தொடர்பாக எந்த தகவலையும் பெறும் உரிமை யாருக்கும் கிடையாது என்ற தன்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவு என கருதப்படுகிறது. எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என சமூக ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்பட்டபடியே, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெகு விரைவில் மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நம் மனதில் தோன்றும் சில கேள்விகள்.

                         
 1.    சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற  நிலைப்பாட்டை வலியுறுத்தும் நமது அரசியலமைப்பு சட்டப்படி, சட்டம் வழங்காத ஒரு விஷேச உரிமை தனக்கு இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் கருதுவது  சரியா?                                                                                                                    
    2.      உச்ச நீதிமன்றம் தனக்கு தொடர்புடைய வழக்கை, தானே விசாரித்து தீர்ப்பு வழங்க முடியுமா? .

    இது சரியென்றால், நீதிபதிகளே தேவை இல்லை. அனைத்து வழக்கிலும் மனுதாரர் அல்லது மேல் முறையீட்டாளரே தங்கள் வழக்கை விசாரித்துக்கொள்ளலாமே!  இந்த கேள்விகளுக்கு காலம்தான்  பதில் சொல்ல வேண்டும் !

    கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக