அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 28 பிப்ரவரி, 2011


























உடல் உறுப்பு தனம் செய்வது எப்படி?

``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''

``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?''

"உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.

"உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?''

"ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.''

"இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''

"இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''

"யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''

"நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''

"உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?''
"18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''

**ஒருவருடைய உடம்பிலிருந்து தானமாக வழங்கக்கூடிய உறுப்புகளை பற்றிய விளக்கப்படம்

"உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?''

"ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-

1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.

3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

"தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?''

"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம்.

ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''

"உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''

"பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்,

ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொம்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.

நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை.

ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.

ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது,

உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''

"வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''

"கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.

எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்.

ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''

"ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''

"ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.

மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது.

பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன

நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''

"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''

"உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள்.

கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது.

அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது.

இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை ``வயாஸ்பான் திரவம்'', ``ïரோ கால்லின்ஸ்'' திரவம், ``கஸ்டோயியல்'' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.

சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''

"முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''

"நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக ``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.''

1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.

1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.

1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.

1960 ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.

1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.

1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். ``டென்னிஸ் டார்வெல்'' என்பவரின் இதயத்தை ``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.

1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

1983 ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.

1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.

2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
***
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?

சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும்
பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.

புதன், 16 பிப்ரவரி, 2011

தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்

நீர்க்காகங்கள் (Cormorants)


Cormorants and Egrets in Singanallur Lake

பாம்பு தாராக்கள் (Darters)

குருகுகள், கொக்குகள், சிறிய நாரைகள் 

(Bitterns, Herons and Egrets)

பெரிய நாரைகள் (Storks)

அரிவாள் மூக்கன்கள், கரண்டிவாயன் 

(Ibises, Spoonbill)

பூநாரைகள் (Flamingos)

வாத்துக்கள் (Ducks)

பருந்துகள், கழுகுகள் Hawks, Kites and Eagles

Falcons

கோழிகள், கவுதாரிகள், காடைகள் 

Pheasants and Patridges

Buttonquails

Rails, Crakes and Coots

இலைக் கோழி Jacanas

வரகுக் கோழி Bustards

உல்லான்கள் Avocets and Stilts

Pratincoles and Coursers

Plovers and Lapwings

Sandpipers and allies

Snipes and Curlew

கடல் காகங்கள் Gulls

ஆலாக்கள் Terns

கவுதாரிகள் Sandgrouses

புறாக்கள் Doves and Pigeons

கிளிகள் Parrots and Parakeets

குயில்கள் Cuckoos

ஆந்தைகள் Typical owls

பக்கிகள் Nightjars

உழவாரக்குருவிகள்

Trogons

Malabar Trogon photographed in Anamalai Hills

மீன் கொத்திகள்

பஞ்சரட்டைகள் Bee-eaters

பனங்காடைகள், கொண்டலாத்திகள்

இருவாச்சிகள் Hornbills

Great Hornbill perched on a Mesua tree at Valparai

குக்குறுவான்கள் (Barbets)

மரங்கொத்திகள் (Woodpeckers)

Passerines

Pitta and Larks

Martin and Swallows

வாலாட்டிகள்

  • வெள்ளை வாலாட்டி White Wagtail 
  • கொடிக்கால் வாலாட்டி' 'Forest Wagtail
  • கருப்பு வெள்ளை வாலாட்டி Large Pied Wagtail
  • கரும் சாம்பல் வாலாட்டி Grey Wagtail

Pipits, Shrikes and Minivets

Bulbuls

Thrushes and Laughingthrushes

Old World Flycatchers

Asian Paradise Flycatcher at the foothills of Palani Hills

[தொகு] சிலம்பன் Babblers

Warblers and Tailorbird

Prinias

Flycatchers

பட்டானிக் குருவிகள் Tits

  • பட்டானிக் குருவி Great Tit
  • மஞ்சள் கண் பட்டானிக் குருவி Black-lored Yellow Tit

பசை எடுப்பான்கள் Nuthatches

மலர் கொத்திகள் Flowerpeckers

தேன் சிட்டுக்கள் Sunbirds

சிலந்தி பிடிப்பான், வெள்ளை கண்ணி.

Spiderhunter, Whiteeye, Bunting and Rosefinch

சில்லை Munias

சிட்டுக்கள் Sparrows

Weavers

நாகனவாய் Mynas Starlings

மாங்குயில்கள் Orioles

கரிச்சான்கள் Drongos

காகங்கள் Crows and Treepies

வெள்ளை வயிற்று வால் காகம் ஆனைமலை, தமிழ்நாடு

Tropicbirds

மேலும்  தகவல்கள் உங்களிடம் இருந்தால் cchep.siva@gmail.com என்ற முகவரிக்கு
தெரிவி யுங்கள்